10/09/2012

அப்பு வளர்த்த நாய் (தொடர் கதை பாகம் -2 )



பாட்டி பாட்டி அந்தக் கம்பளம் வித்தவர் எங்க வீட்டுக்கு  வந்து இருக்குறார் அம்மா உங்கள அவசரமா கையோட கூட்டிக்கொண்டு வரச் சொன்னாங்க வாங்க பாட்டி போகலாம்.இருடி மீனாக் குட்டி தாத்தா சந்தைக்கு போக முன்னால எங்க வீமனுக்கு இந்தக் கறிய ஆக்கி வைக்கச் சொல்லீற்று போனார் .இதோ அத நான் இறக்கி வச்சிற்று வாறன்.நீ கொஞ்சம் இடியப்பம் தாறன் சாப்பிடுறீயா ?....சரி பாட்டி நான் வேணாம் எண்டா நீ என்ன விடவா போற .தா தா நான் சாப்பிடுறன் .பாத்துக்கோடி அம்மா மெதுவா சாப்பிடு!.. புரை ஏறிடப் போகுது .சரி பாட்டி. பாட்டி நீ சாப்பிட்டியா ?...உங்க தாத்தா சாப்பிடாமல்  நான் எப்படி சாப்பிட்டு இருக்குறன் ?..   நான் அவர் வந்தா பிறகு சாப்பிடுறன் நீ சாப்பிட்டுக்கோ .பாட்டி தாத்தா வாற சத்தம் கேக்குது... நல்ல வேள நான் சாப்பிட்டிற்று வீட்டுக்கு போறன் நீ சாப்பாட்டு அலுவல முடிச்சிற்றே வீட்ட வா .
              
             வள்ளியம்மா....வள்ளியம்மா ....  இதோ வந்திற்றேங்க!..என்னங்க இதெல்லாம் ?...உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியாமல் இருக்குறீங்களே அதுக்குள்ள இவ்வளவு பாரத்த சுமக்கணுமா ?....அது ஒண்டும் இல்லடி உனக்குத்தான் பாரதியார் கவிதைகள் எண்றால் நிறையப் பிடிக்குமே அதனாலதான் இதையெல்லாம் உனக்காக வாங்கிக் கொண்டு வந்தன் .அப்ப உங்களுக்கு ஒண்டுமே வாங்க இல்லையா ?...எனக்கு என்னடி வேணும்?.. நீதான் எனக்கு எந்தக் குறையும் இல்லாமல் பாத்துக் கொள்ளுறியே அது போதாதா ?...அது சரி எங்க எங்கட  வீமன் ஐயா ?...வெளியில உலாத்தப் போயிற்றாறோ?....! இல்லங்க இண்டைக்கும் வழக்கம்  போல தான் அவர் உண்ணா விரதம் .

       அட வடுவா ராஸ்கோல் நான் ஒண்டு சொன்ன உடன கவலை   வந்திரும் அவருக்கு .நீ எத்தின தடவ பேசி இருப்ப?.. !..அதுக்கெல்லாம் வருத்தப் பட  மாட்டார். ஆனா நான் ஒண்டு சொன்னாப் போச்சு .மூஞ்சியத் தூக்கி வச்சுக்கொண்டு இருப்பார். வாட இங்க. கிட்ட வாடா!...அட இன்னும் கொஞ்சம் கிட்ட வாடா!....வெளியில போய்த் திரியிற போது உனக்கு யாராவது கல்லால அடிசுக் காயம் வந்திரக் கூடாது எண்டு தானே உன்னத் திட்டினன் .அதுக்குப் போய் இவ்வளவு கவலப் படுகிறியே!..இவ்வளவு பாசம் வச்சிருக்குற நீ நான் செத்தா என்னடா செய்வ?.....ம்ம் ...என்னங்க நீங்க திரும்பத் திரும்ப ஒரே சாவப் பத்தி பேசீற்றே  இருக்குறீங்க ?..உங்களுக்கு என்ன ஆச்சு ???....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்க இல்லைங்க .
                                                       
                                          வள்ளியம்மா அது ஒண்டும் இல்லடி. வயசு ஆக ஆக எல்லா மனுசருக்கும் இந்த நினைப்பு தன்னால வாரம் வந்திரும் போல அதுக்கு இல்லங்க!... நாம ஒண்டையே திரும்பத் திரும்ப சொன்னா அதுவே நடக்குறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் எண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க?...ஒ ....நீ அத நினைச்சுத்தான் பயப்படுறியா ?..ஆமாங்க எதுக்கும் இந்த வாரம் எங்க குல தெய்வத்துக்கு ஒரு அருச்சினை செய்திற்று வருவம் நீங்களும் வாங்க .இன்னும் உனக்கு இந்தக் கடவுள் மேல இருக்குற பக்தி கொஞ்சம் கூட குறையவே இல்லப் பாத்தியா ?....அது எப்புடியுங்க குறையும் ?...காலம் காலமா எங்கட  கஸ்ரத்தப் போக்குற கடவுள நம்பித்தானே எங்க காலமும் நல்ல முறையில ஓடிற்று இருக்குது  ம்ம்ம் ...ஆனா இப்பெல்லாம் சனங்கள் அப்புடி இல்லப் பாத்தியாடி ?..! ஆமாங்க நீங்க சொன்னதுதான் சரி .ஒரு காலத்தில கோயில் குளம் எண்டு தவம் கிடந்து ,நினச்சதெல்லாம் நடந்ததால காணிக்கை காணிக்கையா அள்ளி அள்ளிக் கொடுத்த சனங்கள் இப்பெல்லாம் வருவாயும் வசதி வாய்ப்புகளும் ஏன் மூளையும் கொஞ்சம் அளவுக்கு அதிகமானதால பழசை எல்லாம் மறந்து அனாவசியமா தெய்வத்தக்  குத்தம் சொல்லுறதையே ஒரு புழைப்பா நினைச்சு வாழ்ந்திற்று இருக்குதுகள். எனக்கென்னமோ இதெல்லாம் அழிவு காலத்துக்கு எண்டுதானுங்க  படுகுது!...

                     அது சரீடி..... காலம் காலமா அழிவுகள் வந்தாலும் கடவுள் நம்பிக்கையை யாரும் கைவிடாததாலதானேடி   இத்தின தலங்களும் வரலாற்றுக் கதைகளும் மனுஷன் நினைசுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமா உலகமெல்லாம் வியாபித்துக் கிடக்குது  .இதனால ஆருக்கு என்ன நட்டம் வந்திச்சு சொல்லு ?...! .எல்லாரும் ஏதோ ஒரு வழியில ஒரு சின்ன நன்மையைக் கூடவா அனுபவிக்கயில்ல?..அதுக்கு விட்டிற்று சனங்கள் கடவுள சில நாட்டில இருக்குற கொலைகார தலைவர்களை பாக்குரமாதிரி எல்லோடி  பாக்குதுகள் !...உண்ம தானுங்க அதையும் விட மோசமாத்தானுங்க இப்பெல்லாம் பாக்குதுகள்.சரி விடடி .  இப்ப ஒரு உதாராணத்துக்கு எனக்கு ஒரு ஆற்ற முடியாத கோவம் வந்தா நான் என்ன சொல்லுவன்?....  அவன் செயலுக்கு கடவுளாப் பாத்து ஒரு நல்ல தண்டணை கொடுப்பார். அப்ப அவனுக்கு புரியும். அவன் செய்த தவறு என்ன  எண்டு. வந்த கோவத்தை எல்லாம் இப்புடி நாங்க  தணிச்சதால தானே   எங்களால  ஒரு உயிருக்கும் எந்தத் தீங்கும்  நடக்காமல் போகுது .அந்த வழியில என்டாலும் இந்த மூட நம்பிக்கை நன்மையைத்  தானேடி செய்யுது ?..இதச் சொன்னாக் கூட  அந்தக் காலத்தில இருந்தவைக்கு ஒண்டும் தெரியாது எண்டுதான் சொல்லி எங்கட வாயப் பொத்த வைக்குதுகள் .இதுக்கு மேல என்னத்தத்தான் பேச முடியும்!..

இப்பெல்லாம் உண்மைக்கு மட்டும்தான் காலம் சரி இல்லடி .அதனாலதான் நல்லவங்கள் நாயை விடவும் கேவலமா கஸ்ரப் பட வேண்டி இருக்கு .சரி சரி இந்தா  மல்லிகைப் பூ வாங்கியந்து வச்சிருக்கிறன் நீ போய் மாலையைக் கட்டு முடிஞ்சா நாளைக்கும் உன்னோட நானும் கோயிலுக்கு வாறன் .இந்த நாரிப் பிடிப்பு வந்ததில இருந்து மனுசனுக்கு விடிஞ்சதும் எழும்பிக் குளிக்கக்  கஸ்ரமா இருக்குடி . இல்லை எண்டா உன்னோட நானும் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருவன் .இத விட சந்தோசம் வேற என்னடி இருக்கு எங்களுக்கு .சரி விடுங்க உங்க நல்ல மனச  அந்த கடவுளுக்கும் தெரியும் .கவலப் படாதீங்க .இப்ப சாப்பிட வாங்க .வீமா நீயும் வாடா..... ஐயாவோட சேர்ந்து சாப்பிடலாம் இண்டைக்கு உனக்கு பிடிச்ச கறி... உங்க ஐயாதான் வாங்கி வந்தாரு சந்தோசத்தப் பாரு !...சிரித்தபடியே வள்ளியம்மை  சாப்பாடு பரிமாறிக் கொண்டாள் .
                                   தொடரும் ........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

  1. கதையின் ஊடே நல்ல கருத்துக்களையும் சொல்லி உள்ளீர்கள்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வள்ளியம்மையும் அவர் கணவரும் பேசிக்கொள்வதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கே. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. "கஸ்ரப் " உண்மையா இது எந்த ஊர் பாஷைங்க தெரிந்து கொள்ளவே கேட்டேன்.

    நன்றாக இருக்கிறது கதை தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி இது யாழ்பாணத்து பேச்சுத் தமிழ் .
      நான் பயங்கரக் கஸ்ரப்பட்டு மாட்டப் பிடிக்க அது
      அந்த ஓட்டம் ஓடீற்றுதுடா :) .....அப்புமார் பேச்சு .

      Delete
  4. தாங்கள் சொல்லிச் செல்லும் விதத்தில்
    அவர்களின் அன்பின் ஆழத்தை மிகத் தெளிவாக
    உணர முடிகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........