8/31/2012

உயிர் தாங்கும் சடலங்கள்

செந்தாமரை தண்ணீரிலே
வந்தாடுதே பெண்போலவே
இழந் தென்றல் காற்றே நீ
இன்னிசை பாடி வா !...........

ரவி வர்மன் ஓவியம் இவள்
இங்கு அசைந்தாடும் காவியம்
நிலவோடு உரையாடும் எனதன்பு
அது என்றும் உனக்காகவே!!.....

மணம் வீசும் புது  மலரே
வெண் மதி போற்றும் பேரழகே
நீ உருவான காலம் இயற்க்கை
அழகுக்கு   அழகிங்கு  வந்ததோ!...


மலரே நீ இல்லை என்றால்
மலராதே உயிர்கள் எங்கும் !..
தொடராக தொடரும் தாய்மை
நல் உணர்வுக்கு ஏது எல்லை !...

கலைக் கோவில் சிற்பம் நீயே
கலங்காதே பெண்ணே என்றும்
ஓர் விலை பேச ஏங்கும் கூட்டம்
நிலைக்காதே எந்நாளுமே !!!.....


உனக்காக வரும் காலம் உண்டு
நீதி உரைக்காமல் விடியும் அன்று
பிறர்க்காக உழைக்கும் பெண்ணே
உனைப் போற்ற மறவார் என்றும்!....

பிறை போல தேய்ந்து வளரும்
தொடரான துன்பம் என்ன !!!....
விழி நீரில் கோலம் போட்டும்
விடியாத பெண்ணின் வாழ்க்கை!!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/29/2012

.மொட்டைக் கடதாசியும் முத்து மாமாவும்!...


ஏதோ சொல்ல நினைகின்றார்
எதையோ சொல்லி முடிக்கின்றார்
தீதும் நன்றும் அறியாமல் பெரும்
தீயை மூட்டிச் செல்கின்றார்!!!.......

வேவு பார்க்கும் மாமா உனக்கு
வேற வேலை இல்லையா!.......
ஓட்டுக்கேக்கும் கதையின் அந்த
உச்சம் தலையை தெரியுமா........

குத்த வச்சு முதுகில் நாலு
குத்து விட்டால் போதாது
செத்த வீட்டில் வந்து நின்றும்
சிறப்புக் காமடி விடுகின்றார் !!!.....

கத்தரிக்காய்  கத்தரிக்காய் .......
உந்தன் கள்ள மனசை யார் அறிவார்!...
ஒன்றைப் பத்தாய் சொல்லும் மாமா
முதலில் உண்மை என்ன தெரிஞ்சுக்கோ....

சிப்புக்குள்தான் முத்திருக்குது அட
குப்பைக்குள்தான் குண்டு மணியிருக்குது!...
மறைஞ்சு கிடக்கும் உண்மை தெரிந்தால்
மனசின் ஆழம் புரியுமடா ...............

வாலை வைத்துத் தலையை என்றும்
எடை போட்டு நீயும் பழகாதே.......
ஒரு ஓலை அனுப்பி பிறர் குடியை
ஒன்றும் இல்லாமல் செய்யாதே!....

காலம் இதற்குப் பதிலடியாய் பின்
காத்து நின்று வேலை செய்யும்
மானம் உள்ள மனிதனின்  கண்ணீர்
நாளை உன் ஈனத் தனத்துக்கு விடை பகரும்!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/27/2012

கெட்டி மேளம் கொட்டும் நேரம்..


வெக்கத்தால் சிவக்குதிங்கே
செந்தாமரைதான்!.
இதன் விழிகளில் தூவுது ஆனந்த
பன்னீர் மழைதான் !!!.....
கல்யாண தேதி அது வந்தாச்சு தோழி....

பொன்மேகம் வந்து இனி
பூத்தூவும் காலம் !!.......
பொல்லாத சோகம் அது
மண்ணோடு போகும்!.......

என்னோடு நீ பாடவா ....
இளந்தென்றல் காற்றே நீ ஓடிவா .....
நதியெல்லாம் தாளம்
இசைக்கட்டும் இந்நேரம்......

விதி போட்ட முடிச்சு
வீணில்லை என்றாச்சு ....
கொலுசுக்கும்  இங்கே
புது ராகம் வந்தாச்சு ....

சந்தோசம்  பொங்கும் நேரம்
அட வாழ்த்துக்கள் எங்கே.....
உல்லாசப் பந்தலில்
ஊர்கோலம் நாளை......

வைகாசி விசாகம் அதில்
வரும் தேதி அதனில்
பூமாலை தோளில்  ஏற இந்தப்
பூவைத்தான் வாழ்த்துங்களேன்....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2012

நட்புக்கு இலக்கணம் வகுத்ததிங்கே யாரு!....


தட்டிக்  கொடுத்தால் ஆகாதோ!...
மனம்  உன்னைத்  "தன் "
தாயைப்போல நினைத்திடவே!.....
இந்தப் பட்டிக்காட்டுத் தனம் எதற்கு!....

குற்றம் குறைகள் சொல்வதுவும்
நற் குடியை அழிக்கப் பார்ப்பதுவும்!...
அர்த்தம் அற்ற பேச்சுக்கு என்றும்
ஆணிவேராய் இருக்க நினைப்பதுவும்!...

சுற்றத்தாரைப் பிரிப்பதுவும்  பெரும்
சூழ்ச்சி செய்து தன் வசம் இழுப்பதுவும்
புத்தி  உள்ள யீன்வங்களுக்கு இது பெரும்
தப்பென்று   புரிவது  எக்காலம் !!!!........

                                             
எட்டப்பனைப் போல் ஒருவன்
இருந்தால் போதும் நண்பன் என்று
குடி கெட்டுக் குட்டிச் சுவராய் போகும்
அவன் குள்ள நரித்தனத்தாலே !!!.........

நட்பிற்க்கொரு இலக்கணம் உண்டு
இதை நல்லவர்கள் அறிவாரே எனினும்
அறியா நட்ப்பு  எதிரில் வந்தால்
அன்றே விலகிச் செல்வோமே......


அடடா ஆறறிவு படைத்த மனிதர்
அன்பைப் புதைத்துச் செல்கையிலே
இந்த ஐந்தறிவு யீவன்களைக் கண்டு
இன்பம் பொங்குதே நெஞ்சினிலே!!!...
                                               
 
மேடு பள்ளம் உலகில் உண்டு இருந்தும்
இந்த மேன்மையான குணத்தைக் கண்டு
கவி பாட வேண்டும் என்ற ஆசை எந்தன்
கற்பனையை    தின்றதென்ன !!!...............                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/23/2012

இப்ப வறண்டு போவது எம் கனவு மட்டுமா!!!தணியாத வெப்பத்தின் அகோரத்தைப்  போக்கத்
தண்ணீர் மேல் தவழ்கின்றார் தினம்தோறும் இங்கே!...
இனியும்   அறியாரோ மனிதர்கள் தம்  தவறென்ன என்று
இதை அறிந்தால்தான் எமக்கிங்கே எதிர்காலம் உண்டு!....

நிலை இல்லா செல்வத்தை நீ தேடும் போது ஆங்கே
நீருக்கும் காற்றுக்கும் வழியேது சொல்லு ???...........
நிலத்திற்கு அடியிலும் இருக்கின்ற வளங்கள் அதை
நீ தோண்டி எடுக்கையில் அழியுமே மனித இனக்கள்!...

உயிர் காக்கப் பிறந்தது  என்றுமே  இயற்கையடா
இதை உனக்காக அழிப்பது என்பது பெரும்  துரோகமடா !!!........
கடல் கொண்டு போனதிங்கே எத்தனை உயிர்களடா!....:(
நாம் கண்ணீரில் குளிப்பதனால் உனக்கென்ன இன்பமடா!....

செயற்கையாய் கிடைக்கின்ற வளங்களுக்கு ஏங்கி
இனியும் சிந்தாதே இரத்தத்தை தன்னாற்றல் மறந்து....
இதனால் மரம் கெட்டுப் போகுது இது நிகழ்காலம் என்றால்
எம் எதிர் காலம் என்னாகும் இதைக் கொஞ்சம் பாரு!!!!....


விழி நீரை அருந்தவும் வெறிகொண்டு அலையும்
விடியாத இருளுக்கு விதை போடுவதை நிறுத்து!..:(
ஒரு பாவமும் அறியாத எம் உயிர் வாழ வேண்டும் எனில்
உலகத்தின் கண்களுக்கு இனி இதையேதான் உணர்த்து.....

உழவர்க்கு தொழில் செய்யும் நிலம் வறண்டு போச்சு!...
ஊரெல்லாம் கிணற்றுக்குள் தண்ணி வற்றிப்  போச்சு !..
மழை வேண்டி உயிரெல்லாம் மன்றாடும் போது
மழை நீருக்குத் திண்டாட்டம் மலைபோல வளந்தாச்சு!...


வருங்கலாம் நெருப்போடு போராடும் போது எம்
உயிர் காக்க எமக்கிங்கே ஓடி வருவார் யாரோ????.......
பசி தீர்க்கும் வளம் எங்கும் பொசுங்கித்தான் போகும் பின்
இந்த உயிர் வாழ வழி இன்றி உடல் தூக்கில்தான் ஏறும் பாரு!!...:(
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/22/2012

கொக்கரக்கோ இது பதிவர்கள் விழாவுங்கோ !!!........
பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை 
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத் 
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
மூத்த பதிவர்கள்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை 
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 

கணக்காயர்,சென்னை 


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021 begin_of_the_skype_highlighting FREE 9894124021 end_of_the_skype_highlighting
பாலகனேஷ் 7305836166 begin_of_the_skype_highlighting FREE 7305836166 end_of_the_skype_highlighting
சிவக்குமார் - 9841611301 begin_of_the_skype_highlighting FREE 9841611301 end_of_the_skype_highlighting


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி
          புலவர் சா இராமாநுசம்தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2012

வலைச்சரம் தரும் வரம் எதுவோ!..

இலை மறை கைபோல் எங்கோ
தழைத்திடும் ஆக்கமும் இங்கே
வளம்பெற வாழ்த்திடும் நல்
உறவுகள் தரும் விருதுகளும்
கருத்துரை மழைகளும் நற்

கவனமும் அன்பும் பெருகிட பெருகிட
புது சந்தங்கள் நெஞ்சில் வந்தாடுதே!....
இந்த சொந்தங்கள் வேண்டும் எந்நாளுமே
வளர் சிந்தையை தூண்டும் பொன் போலிதே!..
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க

செந்தமிழ் ஊற்றினில்  நாம் மிதப்போம்
பல சிந்துகள் பாடியே தமிழ் வளர்ப்போம்
அன்பெனும் சோலைக்குள் சாலை அமைத்து
என்றுமே சேர்ந்திங்கு நாமிருப்போம்!.....


சந்தணக் காற்றாய்  மணம் பரப்பும்
சங்கதி எல்லாம் நாம் உரைப்போம்
வந்திடும் துயரைத் தீர்த்திடுவோம் வலைத்தள
சொந்தங்கள் என்றே எமை நாம் நினைப்போம்!...

டிஸ்கி :வலைச்சரத்தில் தினந்தோறும் அறிமுகம் ஆகும் 
                அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் 
                இதுவரை அதில் ஆசிரிய பணியை நிகழ்த்தி பலரையும் 
                சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்த சகல 
                வலைத்தள சொந்தங்களுக்கும் என் நன்றியையும் மனம் 
                நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான் மிகவும் 
                மகிழ்ச்சியடைகின்றேன்.....
                                             
                                    எனக்கும் விருது தந்து மகிழ்வித்தமைக்கு நான் 
என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்  .
                 
                 
                                             முனைவர் இரா .குணசீலன்

                                         
                                             திரு .நிலாவன்பன்
                                           
                                           
                                             திருமதி .லக்ஸ்மி அம்மா

                                           
                                                திரு .வை .கோபாலகிருஸ்ணன் ஐயா

                                                 
இதுவும் கோபாலகிருஸ்ணன் ஐயாதான். இவர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி உறவுகளே
உங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்துகளுக்கும் .

                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/19/2012

போடா போ!.......மண் சுமந்து வளர்த்த உடல்
மனமுடைந்து கிடக்கையிலே
பண்பிழந்து வாழ்பவரை இன்னும்
பாசம் உள்ளவர் என்பீரோ !!!......

விண் மீனை விலைபேசும்
வீறுகொண்ட தந்தையாக
எந்நாளும் உளைத்தவரை
எடுத்தெறிந்து பேசுபவரை

கண் என்று கருதியதும்
அவன் கால்பிடித்து முகந்ததுவும்
என்னென்று சொல்வது இதுதான்
பெற்ற மனம் பித்தென்பதோ!......

முள்ளுக்கு வேலி போட்டு
முடிந்தவரை காவல் நிண்று
தள்ளாடும் வயதில்தான்
தன் தவறு இங்கு புரிந்ததுவோ!....


மாடி வீட்டின் ஓரத்திலும்
மடங்கிக் கிடக்க ஓர் இடமில்லையாம்!...
பின் மகன் என்று சொல்வதற்கு
இவன் வாழ்வு இங்கெதற்கு!!.....

பெற்றவர்கள் கூலி கேட்டால்
அந்தப் பிரமனுக்கும் முடியாது!...
கற்றவர்கள் நாம் இதனைக்
கணக்கில் இட்டால் இத் தவறு நிகழாது!...

அற்ப சுகம் வாழ்வினிலே அது
என்றும் நிலைக்காது எமைப்
பெற்றவரை அரவணைத்தால் இனி
இப் புவிதனிலே பூகம்பமும் நிகழாது!.......

சுற்றத்தார் புகழ்ந்திடவே தினமும்
சுடு சோறு போடும் உன்னை
பெத்து இங்கு வளர்த்தவர்கள்
செய்த குற்றம் என்ன நீ கூறு ???!!

கட்டிக் கொள்ளத் துணி கொடுக்க
கஞ்சி ஊத்தி உனை வளர்க்க
பட்ட கஸ்ரம் போதாமல் பெரும்
பட்டப் படிப்பும் படிக்க வைத்தாரே!....

இன்று சட்டம் பேசும் வக்கீல் நீ
உன் சட்டைப் பையில் பல கோடி இந்தக்
கெட்டித் தனத்தை வைத்துக் கொண்டும்
கீழ்த்தரமாய் போனாயே !!!...........

ஒரு பொட்டப் புள்ள பேச்சைக் கேட்டு
உறவை விட்டெறிந்து போபவனே
உந்தன் முத்தத்திலே நின்றால்கூட
எமக்கு முதுகெலும்பு இல்லைஎடா ......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/16/2012

கொன்றால் தீருமோ உயர் சாதி வெறி!....கொடியிடை நெளிந்தாட
ஒரு நொடிதனில் மனம் அலை பாய
இது என்ன மோகம்!............
இரு விழிகளின் தாபம்!!!.....

அவளில்லையேல் இங்கு நான் இல்லை
நான் இல்லையேல் அங்கு அவள் இல்லை என
இரு மனங்களும் சதிராட அந்த
இறைவனும் படைத்தானே!.............

இது என்ன இறைவனின்  தவறா!...
இல்லை இயற்கையின் தவறா!...
உலகமே மயங்குது விடை தெரியாமல் இதில்
உனக்கென்ன கோவம் ஏதும் அறியாமல்!...

தலைகளைக் கொய்திடும்  மனிதனே
உன் தவறினை ஒரு கணம் நினையாயோ!!....
பிற உயிர்களை வதைத்திட நினைப்பவனே
அதன் அருமையும் பெருமையும் அறிவாயோ!...

இன வெறி மத வெறி கொண்டலையும்
உனக்கிங்கு அன்பு கிடையாது
விழிகளில் ஓடும் நீராலும் உன் மனம் அது
இளகிடும் என்பதும் பெரும் தவறாகும் !!!.....

உனக்கென வந்து பிறந்தாளே
உன் உதிரத்தில் உடலை  வளர்த்தாளே
எதற்கென நீயும் நினைத்தாயோ
இன்னலைத் தந்து உயிர் பறிப்பவனே!....

இரு மனங்களை மனங்கள் ஆதரித்தால்
இயற்கையும் அதற்க்கு வழி விடுமே
பிணம் தின்னும் ஆசை உனக்கெதற்கு
மனிதன் பிறப்பது என்பதே இங்கு வாழ்வதற்கு.

சாதிகள் இரண்டேதான் இங்கிருக்கு
உன் சங்கடம் எல்லாம் அயலவரே
யார் எவர் என்ன நினைப்பாரோ என
ஜாதகம்  பார்த்து நீ இனியும் அழியாதே!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/14/2012

ஜெயஹிந்த்!......


வாழ்க்கை என்னும் படகினை
வளமாய் ஓட்டிச் சென்றிட
நம்  நாட்டின் சுதந்திரம் என்பது
நலமாய் இருத்தல் வேண்டுமே !...

கூட்டம் போட்டு தினம் தினம்
கொள்ளை அடிக்கும் அரசியல்
நாட்டம் மிகுந்து போனால் அங்கு
நாட்டின் வளங்கள் செளிக்குமோ!....

பண்டைக் காலம் முதற் தொட்டு
படை எடுக்கும் வரலாறு அது
இன்றும் தொடர்ந்து வந்தாலே
நாடு இரண்டுங் கெட்டான் ஆகாதா!...

சொந்த மண்ணில் அடிமைகளாய்
சுறணை கெட்டு வாழ்வதற்கு
எந்த உயிரும் விரும்பாதே
இந்த நிலையது முதல் மாறாதா!!!....

லஞ்ச ஊழல் செய்வோரும்
சுய லாபம் கருதி வாழ்வோரும்
எந்த அரச தொழிலிலும் இனி
இருக்கும் பதவி இழந்தால்தான்
அன்று பெற்ற சுதந்திரம் இனி
அழகாய் மலரும் இந்நாளில்
துயர் வென்று பகைமை தீர்ந்தொரு
சுமூக நிலைமை தோன்றட்டும்

பஞ்சம் பட்டினி என்பதே ஒரு
பழைய கதையாய் போகட்டும்
இனி எஞ்சி உள்ள யீவன்களுக்கு செல்வம்
இரண்டு மடங்காய் பெருகட்டும் !.......

சட்டம் ஒழுங்கு நாட்டினிலே
சமத்துவமாய் தொடரட்டும்
குற்றம் குறைகள் தவிர்த்தே நல்ல
குடும்பம் போல நாடு தழைக்கட்டும்!....

பாரத மாதா மடிதனிலே இங்கு
பாவிகள் யாரும் இல்லை என்று
கூடியே நாட்டியம் ஆடிடுவோம் அந்த
குலமகள் நெற்றியில் சுதந்திர பொட்டணிவோம்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/13/2012

தாமதம் ஏன் வாருங்கள் உறவுகளே.


இறந்தும் இறவா நல் வாழ்வுபெற
இறைவன் கொடுத்த வரம் இதனை
இரங்கி நீயும் கொடுத்துப் பார்
இன்னல் நிறைந்த தருணம் அதில்

உயிர்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியால்
உள்ளம் மகிழும் தன்னாலே அதை
உகர்ந்து நீயும் ஏற்றுக்கொண்டால்
உனக்கும் மனதில் மாற்றம் வரும்!...

பரந்த உலகில் எம் கனவுகளை
பலிக்கச் செய்யும் நோக்குடனே
பகலும் இரவும் பாடுபட்டு நாம்
பட்ட துன்பம் மறந்திடவே

சின்னச் சின்ன தானங்களை
சிறப்பாய் நீயும் செய்து வந்தால்
சிறந்த மனிதனாய் மட்டும் அல்ல
சிந்தை குளிர்வாய் ஓர் நாளில்!!!...

மரணம் என்பது இயல்பாகும்
மண்ணில் பிறந்த உயிர்களுக்கு
மனதில் ஆசையை தூண்டிவிக்கும் கண்
மறைந்தும் மறையா வாழ்வு பெற

இறக்கும் முன்னே ஓர் சாசனம்
இன்றே எழுது உன் மனம்போலே
இருக்கும் இதயம் அதைத் தந்தும்
இறைவன் ஆவாய் எந்நாளும்!!!.....

எரியப் போகும் உடல் இதனில்
எந்த தானம் செய்தோமோ அதை
எட்ட இந்த உலகத்திலே
எதுவும் இல்லை அதை நாம் அறிவோம்!...

பகட்டு வாழ்க்கை வாழ்ந்து இங்கே
பட்டுப் போகும் முன்னாலே
பலரின் உயிரை வாழ வைத்த
பண்பால் நாமும் உயர்வோமே!!....


வறட்டுக் கெளரவம் தோல்விகளால்
வலிமைகொண்டு உயிர் துறக்கும்
வந்த பயனை அறியாத நாமும் இங்கே
வலி மறந்து நல் வாழ்வளிப்போம்!....

தவிக்கும் உயிர்கள் நன்மை கருதி
தரணி எங்கும் பரந்து  வாழும்
தன்னலம் அற்ற உறவுகளே
தயவு செய்து தோள்கொடுங்கள்!....

உயிர்க்கு உயிர் செய்யும் தானம்
உயிருள்ளவரை மறவாதே இதை
உணர்ந்த நாமும் முடிந்தவரை பிறர்
உணரச் செய்வதும் எம் கடன்தானே!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/11/2012

வரிவுடை நாயகியே ...

வரிவுடை நாயகியே நல்
வரம் தரும் தாயே உன்
அருள் இல்லையேல்
மண்ணில் நற் பொருளேது !...........
கொடியவர் மனங்களில்
தினம் ஒரு நினைவலை
அது தரும் துயர் இங்கு
அறுபட  வழி ஏது !!!...........

விடை கொடு தாயே
உயிர் விடு படும் முன்னே
ஒரு கணமேனும்
நீதி நிலைத்திடவே
உறையுது ரெத்தம் இது
உயிர் விடும் யுத்தம்
துடைத்தெறி களங்கம்
என் தூயவளே!.................

எரியுது எரியுது
நல் மனங்கள் இங்கே!!!....
இடரது கொடியென
தொடர்வதென்ன!.....
மலைகளைக் கடந்து 
நதியென வருவாய் 
தீய விதி இதை முடித்து 
உன் அருள்மழை பொழிவாய் 
இரு கரம் தொழுதேன் வா முன்னே 
துயிர் படும் துயரது  அறிபவளே 
அறமது பாடி முடித்துவிட்டேன்
 இனி உன் திருவடி சேர
 ஒரு வரம் அருள்வாய்.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2012

வாழ்க பல்லாண்டு!.....

உடல் கூனிப் போனாலும்
உழைப்பேதான் தெய்வமட
என இங்கு வாழ்வதற்கு
என்ன புண்ணியம் செய்தனரோ!!!....

முதுமையிலும் இளமை பொங்கும்
முக மலர்ச்சி அதை என்ன சொல்ல!....
பழங்கால வாழ்வு முறைதான் இதோ
பார் பெண்ணே கண் குளிர!!!...........

பச்சைக் காய் கறிவகைகளும்
பாலோடு நிறை  கனிகளும்
முட்டைக்குள் நல்லெண்ணையும்
முடிந்தவரை தானியங்களும்

உணவுண்ண ஏற்ற நேரமும்
ஒழுங்கான உடற் பயிற்சியும்
மனம் விட்டு பேசும் தன்மையும்
மகத்தான வாழ்க்கைத் தத்துவத்தை

தினம்தோறும் கடைப்பிடித்தார்
நம் முன்னோர்கள் அவர்களுக்கு
நோயில்லை பிணியும் இல்லை
மனம் நோகின்ற நிலையும் இல்லை!...

வாழ்கின்ற காலம் எல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்தார் அன்று!...
எம்  காலத்தின் நியதி பாரு!!!.....
மிகு கஸ்ரம்தான் வாழ்வில் இன்று!...

சோறாக்க விறகும் இல்லை
சோம்பலுக்கும் எல்லை இல்லை
குளிரூட்டிய பெட்டிக்குள்தான்
கூட்டிக் கழித்து எம் வாழ்வின் எல்லை!..

அளந்து அளந்து பார்த்தே தினமும்
அமைதி குலைது போச்சுதிங்கே
வளர்த்துவரும் தொப்பை இதனால்
வலுவிழந்த மனிதர் ஆனோம்!.........

சுதந்திரமாய் உணவு உண்ணும்
சூழ்நிலையும் எமக்கு இல்லை
இதுவே நிரந்தரம் என நினைத்தால்
அதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை!..

பரந்த உலகம் சுருங்கியதுவேன்
இறைவன் படைத்த இயற்க்கையை
மனிதன் அழித்ததுவும் ஏன்!!!........
சிறந்த பதிலைத் தந்திடுவீர் என்றும் 
மரங்கள் இன்றி நல் வளங்கள் ஏது?....
மறைந்து போகும் உயிர் திரும்பாது 
சிறந்த இயற்க்கை வளத்தால்தானே 
சிந்தை மகிழும் எந்நாளும்!........... 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே 
நாம் இரசிக்கும் இவ் உலகம் நிலைக்காது 
பரந்த நோக்கம் எமக்கிருந்தால்
நற்  பயிர் செழிக்க உதவிடுவோம்

வளைந்து குனிந்து வேலை செய்தால்
எமை வாட்டும் நோய்கள் நெருங்காது  
இரந்து கேட்க்கும் பிச்சையை விடவும் 
எந்தத் தொழிலும் சிறப்பாகும்!............

அடுத்து வரும் எம் சந்ததிக்கே 
எடுத்துக்காட்டு எம் வாழ்க்கையடா 
இதை நினைத்துப்பார்த்து நீயும்கூட
மன நிறைவோடு பயிரிடவும்  பழகு!!!....     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.