9/30/2012

நேற்றைய பொழுது நினைவில் இல்லையே...


                                              ஞாபகசக்தியே உயிர்களின் சக்தி!..... 
                                                 
நேற்றைய பொழுது நினைவில் இல்லையே
இன்றைய பொழுதும் அரையும் குறையும்தான்
நாளைய பொழுது என்ன ஆகுமோ அதை
நினைத்தால் நெஞ்சில் பயமோ  !!!!...........

பார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
மனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!...
இசை மீட்டிடத் துடிக்கும் வீணையின் நரம்பு
அறுந்தால் துன்பம் தாங்காது !......

நேற்றில்லை இன்றில்லை என்றுமே
மன நின்மதி வேண்டும் வாழ்விலே!..
நாம் ஏற்றிடும் துயரோ...  எந்நாளும்
இறுதியில் தரும் நோய் இதுதானே !....

வீக்க தூக்கம் பார்க்க வேண்டாம் நீ
விட்டுத் தள்ளு வரும் துயரை என்றும் 
ஏற்ற காலம் வரும் வரைக்கும் இதில்
எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்!.....

போட்டியில் போகுது உலகமிங்கே
நீ எது சொன்னாலும் புரியப் போவதில்லை
உன்னை வாட்டிடும் செயலே அதிகமாகுமே
வருந்துவதால் இங்கு பயன் என்ன !.........

கூட்டிக் கழித்து நன்மை அறிவாய்
கொண்ட கொள்கை தாண்டி நீயும்
இதய சுகத்தில் நலனைக் காட்டு
இதை நீ தாண்டினால் சுடுகாடே !....

நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
அடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/29/2012

அபி நீ இன்னுமா தூங்கவில்லை !.....கணனித் திரையில் முகம் புதைத்து
தினமும் காணும் காட்சி கண்ணுக்கு
இயமனாய் முடியுது பாரிங்கே !!!!......
இது தொடர்ந்தால் வாழ்க்கை என்னாகும் !.....

இளமை இருக்க முதியவர்போல்
இது என்ன கண்ணுக்கு கண்ணாடி!...
சிரமம்தானே வாழ்நாளில் இதைத்
தாங்கிச் செல்லும் சிறுவர்கழுக்கு !.....

முகத்தைப் பாரு வறண்ட தோற்றம்
முற்றிலும் கண்ணில் கருவளையம்!....
எதற்கும் ஒரு அளவு இருக்கு இது என்ன
இரவு பகலாய் கணணி முன்னே!...

அடக்க மறந்தால் பிள்ளைகளை
அடக்கி வைக்கும் பல நோய்கள்
குறுக்க குறுக்க பேசுகின்றாள் பார்!....
குறைகள் ஏதும் இல்லை என்று !!!!....

கூனி இருக்க முதுகு வலியும்  பெரும்
கொடைதான் பின்னே வேறேது !...
ஊதிப் பெருகும் உடல் குறைக்க
இவளை ஓட விடு தெருவினிலே !...

நாலு பேரு பார்க்கும் போது இதெல்லாம்
நல்லாய்த் தாண்டி இருக்கும் உனக்கு !...
வேற வேலை என்ன இருக்கு ............
வீட்டில் நடக்கும் கூத்தைப் பாரு !...

பாலும் தேனும் கலந்து முகத்தில்
பத்துப் போடு இந்த வரட்சி போக
ஆளப் பாரு அலங்கோலமாய்......!
அவளைக் கொஞ்சம் தூங்கப் பழக்கு !....

போற போக்கில் புத்தகங்கள்
பூச்சிகள்  உறங்கும் நல் மாடம் ஆகும்
ஆளுக்காளு கணணி இன்றி
நாட்டை ஆழ முடியாதென்றால்

தேடிப் பார்க்க நன் நூலதனை
என்ன தேவை இருக்கு கணணி இருக்க!!!..........
போற பொழுதும்  இதனில் போகும் இன்று
பிள்ளைகள் வளரும் முறையும் இதுதானே!!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உன்னைத் தேடிடும் கண்கள் இங்கே!....


நெஞ்சைத்  தொடும் இராகங்கள்
இவை கேட்டால் என்றும் மோகம்தான்
இன்னும் இன்னும் வேண்டும் என்று
இதயம் மகிழ்ந்து கேட்க்கும் இதையே!!....

தந்தாய் இன்ப வெள்ளத்தில்
தவழ்ந்தோம் நாமும் உன்னாலே
உந்தன் பாட்டே  எமக்கு யீவன்
என்றால் அதுவும்  மிகையாகாது !......

சின்னச் சின்ன மெட்டெடுத்து இசையில்
பெரும் சிகரம் என  நிற்கும் ஐயா
உன்னைக் காணும் ஆவல் எமக்கு
உள்ளத் திரையில் தினமும் ஓடுதிங்கே....

இந்தக் கங்கை நதியின் அடையாளம்
உன் கண்ணில் பட்டால் அது யோகம்
கல்லை முள்ளைத் தாண்டி வந்தும்
உன் காலைத் தொட்டால் அது போதும்!....

சொல்லுக்கிதமாய் மெட்டெடுத்து  மனம்
சொக்க வைக்கும் உன் திறனை என்றும்
வெல்ல இங்கே யாரால் முடியும் என
வியந்தே நிக்குது எம் மனமும் ஐயா!....

பையைப் பைய துயர் நீங்கும் உன்
பாட்டொலியைக்  கேட்டால் இங்கே
இந்த வரம் தந்த இறைவன் அவனை
இதயம் மகிழ்ந்து வணங்குகின்றோம்.....

இன்னும் ஜென்மம் பல நூறு
இணைந்தே வாழத் தமிழிசையோடும்
அள்ளிக் கொடுப்பாய் நல் வரமிங்கே
அதுவே போதும் எம் இறைவா வா!......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/28/2012

இதற்கொரு பதில் சொல் இறைவா !...

ஆணுக்குப் பெண்
சமம் என்று இங்கே
அழகாகத் தோன்றும்
தெய்வம்தான்  எங்கே!...

வீணுக்குப்  பகைமை
விளைகின்ற தேசம்
நாளுக்கு நாளிங்கே
முன்னேறும் போது!...

நீதிக்குத் துணையாய்
நீ இல்லை இங்கே
இந்தப்  பாதிப்புத்  தொடர்ந்தால்
உன்னைப் பாராட்டுவதெங்கே!...

கோதி பூத் தலையில்
குடிகொண்டும் என்ன
மன பாதிப்பு எமக்கு
மலை போல இருக்க!!!!.....

சோடித்த பொம்மை அவள்
சிரிக்கின்ற போது துயர்
ஓடித்தான் ஒழியும்
இதுதானே பெண்மை !.....

கூடித்தான் இகழ்வார்
கூட்டத்திற்கு அழகாய்
ஏன் எம்மைப் படைத்தாய்
பெண் என்று !!!!............

நாலுக்குள் இரண்டு என
நவில்கின்றபோதும் பலர்
காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற
மலர்போல் அவள் இங்கே!...

வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம்
அது அகலாது என்றால்
வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2012

சிறகொடித்த பறவை போல என்றும்....


ஊரு விட்டு ஊரு வந்து 
உருப்படியாய் ஒரு வேலை செய்து 
மாடி வீடு கட்டணுமாம் அவன் 
மனசுக்குள்ள போட்ட கணக்கு இது!....

யாரு பெத்த பிள்ளையோ ஒரு 
நாதியற்று அலைகிறான் என 
வேவு பார்க்கும் நிலையில் இங்கே 
வேகுது பார் அவன் உசிரு !..............

கோடி முறை சொன்னாலும் கொண்ட 
கோலம் அதில் மாற்றம் இன்றி 
தேடி இங்கே வருகின்றாரே!......
இவர்கள் திருந்துவது எக்காலம் !....

காடு வெட்டிப் பிழைத்தாலும் 
கவலை இன்றி வாழலாம் 
நம்ம நாடு போலதான் வருமா இங்கு 
நாயாய் பேயாய் அலைகின்றோம்!...

ஓலைக் குடிசை நடுவினிலும் 
உறக்கம் நெஞ்சைத் தழுவுமடா ...
அதற்கும் நாதியற்றுத் தானே நாமும் 
நடுத்தெருவில் நிற்கின்றோம் ..........

ஓடி அலுத்த கால்களும்தான்  
உள்ள பலத்தை இழந்ததிங்கே 
குளிர் நாடு தந்த பரிசு இதனால்
குனிய நிமிர முடியவில்லை.....

பாதி வயசு முடிவதற்குள் நல்ல 
பாட்டன் போல ஒரு தோற்றம் 
இதில் காதில் பூவை வைக்கும் கூட்டம் 
கண்டு தினமும்  மனதில் வாட்டம் !...

ஆறுதலைத்  தேடிப்போனால் 
யார் வருவார் எம் எதிரினிலே 
வேறு வழி இல்லையட தம்பி 
விடியும் வரை இந்தச்  சுவர்கள் 
நடுவிநிலேதான் எம்  வாழ்க்கை!!!!...........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அட ச்சீ வாய மூடு கழுத ....


மாத்தி மாத்தி யோசிச்சு
மனசு ரொம்ப வீக்காச்சு !..............
பாத்திக்குள்தான் நாற்று நிக்குது
படரும் கிருமி விரையம் ஆக்குது!...

பூச்சி மருந்தும் வாங்க முடியல
பணப் புழக்கம் எனக்கும் அதிகம் இருக்கல
தோட்டக் காரன் கவலை புரியுதா????.....
தோளில்  ஏறிக்கோ மந்தி நீயும்!.....

ஏற்ற இறக்கம் இருக்கும் இடத்தில
இரண்டு காலும் நடக்க முடியல
வீட்டுக்காரி மனசு போலத்தான் நான்
வேலை செய்யிறேன்டா நாச்சி முத்து !...

ஊத்து விஸ்க்கிய மனசு தாங்கல
ஊரக் கெடுக்கிற மாப்பிள்ளையாம் நான்
காத்து வாக்கில இதக் கேட்டுப்புட்டேன்
அட காட்டுறன் பார் என்தன்  வித்தைய !.....

பாட்டெழுதிக்  கொல்லப் போகிறான்
இந்தப் பாண்டியன் என நீ சொல்லிப்புடு..
வேத்துக்  கொட்டி மனசுக்குள்ள நான்
விட்ட எறும்பு கடிச்சுத் துலையட்டும் !!....

சொன்ன வாய மூடி முடிக்கல அந்த
சுப்பன் தலையும் வெடிச்சு சிதறிச்சு!!!!....
இதிலிருந்து என்ன புரியுது குழந்தை  உனக்கு!....
இறைவன் இருக்கிறான் என்று தெரிஞ்சுக்கோ!!!!.....

                                          இன்றைய குறள் இதைக் கேட்டு இவர் ஏனுங்க  இப்படி ஓடுறாரு !....ஹா...ஹா....ஹா ...(துன்பத்திலும் ஓர் இன்பமடா சாமியோய்!..)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/26/2012

free coppyright எடுங்கோ ...எடுங்கோ ...எடுங்க உறவுகளே .

                                                 
                                         பிரசவித்துப் பார் வலி தெரியும் !.............

கூடு விட்டுக் கூடு பாய்ந்து
குருவி போலே மனதைக் குடைந்து
நாம் பாடு பட்டு எழுதும் இந்தப்
பாக்களைத்தான் திருடாதே !!!!:......:(

தேடிப் பாரு தீந்தமிழில் என்றும்
சொல்லும் பொருளும் நயம்படவே
உடல் வாடிப்போகும் எந்நாளும்
இந்தத்  தேடல் எமக்குள் இடம்பெறவே!...

வானும் மண்ணும் சிறக்க என்றும்
கவி பாடும் மனிதன் வாழ்க்கையிலே
தினமும் தேடி அடையும் இன்பம் இதைத்தான்
திருடிச் சென்றால் உயிர் தாங்காது !!!!!.......

என் மாடி வீடு சிதைந்து போனால்
மனதில் துன்பம் கடுகளவும் அதையே
நீ திருடிப்  போட்ட கவிதை
உன் தளத்தில் கண்டால் இத் துயர் மேவும்!....

அட கேடி உனக்குப் புகழை வேண்டிக்
கீழ்த்தரமாய் நடக்காதே இந்தக்
கீறல் விழுந்த இதயத்தின் வலியைக் கூட
கணக்கெடுக்காமல் செல்லாதே !........

ஆயிரம்தான் பொருட்கள் இருந்தும்
அதனில் இன்பம் என்ன இன்பமடா
எம் ஆருயிரில் வரைந்த கவிதை
அதுவே சொர்க்கம் சொர்க்கமடா !!!!......

பா எழுதும் நாவிருந்தால் எம்மைப்
படைத்தவனும் அடிமையாவான்
இந்தப் பாக்கடலில் முத்தகளும்  உனக்கு
பயந்தவர்கள் தேவை கருதி இருக்கவே இருக்கு .

                                                                   free coppyright
                                             
இப்ப நின்மதியாய் தூங்குவோமில்ல மியாவ்வ்வ்வவ்வ்வ் ........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/25/2012

துன்பத்திலும் இந்த இன்பத்தைத் தேடு....பாரதி ஏங்கினான் வறுமைதான் காரணம்
கூறடி பெண்ணே யார் இதன் காரணம்!....
நாவினில் சக்தி நீ நலந்தரும் போதினில்
ஏழ்மையை எதற்கோ நீ கொடுத்தாய் !!!!...

வான் மழை என இங்கு கவி சுரக்க சில
தோல்வியும் நன்றே வாழ்வினிலே அவை
நாளைய பொழுதை நலன்பெற அமைக்க
எமக்கும் நல்லதோர் தருணம் என்றாகிடுமே!....

கேள்விகள் பிறந்தது எதனாலே அதைக்
கேட்டதால் வந்ததே நல் வளங்கள் எல்லாம்
பாவியாய் நாம் இங்கு இருப்பதை விடவும்
பாட்டினில் நல்வழி காட்டிட வேண்டும் !......

ஆணோடு பெண்ணும் பெண்ணோடு ஆணும்
இவைதான்  வாழ்க்கை என்றில்லை
தீவிர சிந்தனை தேன்துளி போல் எங்கும்
திரண்டு நற் பயன்தரும் இன்பம் பேரின்பம்!......


நானிலம் போற்றும் பாரதிக்கும்
அன்று நல்லவர் படும் துயர்( வறுமை )வாட்டியது
கோடியில் இவர்போல் ஒருவரே இருப்பர்
இந்தக் கொடுப்பனை அத்தனை சுலபம் இல்லை !!!!.......

பாரினில் இவர்போல் வாழ்ந்துயிர் நீங்க
இந்தப் பகுத்தறிவே என்றும் பெரிதெனக்கொள்வீர்
பிற வேள்விகள் எமக்கென்றும் விடுகதைதான்
அதைப் புறம்தள்ளி வாழ்வில் முன்னேறிடுவீர் .

சோதனையே இது பெரும் வேதனையே  இந்த
வாழ்க்கை என்றும் சுமையென உணரும்
மானிடனே உனக்கிது போதும் எனில் நல்
வாழ்வு வரும் என்றும் இதைச் செய்யத் தயங்காதே !...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அம்மா உனக்கே இது நியாயமா!....

ஆணுக்குப்  பெண் சரி சமம் என்று
அழகாய் புகையைத்  தினம் தினம் இங்கே
ஊதித்தான் தள்ளுகின்றார் எங்கும்
இது உருப்படாத பாதை என அறிந்தும்!!!.......

தாயுக்கும் இந்த ஆசை மிகுந்தால்
பின் சேயுக்கும் இது நோயென உணர்த்தும்
கண்ணுக்குத் தெளிவாய் எங்கும் பல
காட்சிப் பலகைகள் வைத்தால் என்ன .....

நாளுக்கு நாள் முன்னேறும் பெரும்
நாசம் தரும் புகைப்பழக்கம் இதனால்
ஊருக்குள் உள்ள குழந்தைகளும் கூட
கொந்தளிக்கிறது மனம் அதை எப்படிச் சொல்ல!!!....

                                   இளமையில் கல்வி சிலையில் எழுத்து !!!!.....

ஈன்றவளே கற்றுக் கொடுக்கும் செயலா இது!...
இதயத்தில் இருப்பது புகையோ அன்போ !!!.....
உயிர் மாண்ட பின் அழுவார் தொகையில் இவள்
வேண்டும் என்றே இணைத்த வினைப் பயனல்வோ இது!....

காண்பதெல்லாம் புகை மயமாய் இந்தக்
கலியுகத்தில் பரவும் தீமைகள் இவைகள்
மாள்வதெப்போ மனிதன் மீள்வதெப்போ !...
மனதில் இக் கேள்விகள் என்றும் பெரும் சுமையே .......

ஏன் படைத்தான் மனிதன் இதனை
இயமனுக்கும் இவனே  துதனைப்போல்!...
"யார் தடுப்பார் இப்பொருளை "என
யாசிக்கின்றோம் நல் இதயங்களே !......

நான் தடுக்க நாதியில்லைக்  காரணம்
நானுன் வயிற்றில் கற்ற இன்பம் இதை
ஏன் தடுக்க நினைக்கின்றாய் இங்கே
எனக்கோர் நீதி உனக்கோர் நீதியா !!!.......

வீண் விவாதம் பிரிவை ஊட்டும்
விட்டுச் செல் நீ இவ்விடம் இருந்து
அவள் பால் குடித்து வளர்ந்த பிள்ளை
இப்படிப் பாதை மாறினால் மீண்டு வருமா !........

காலை எழுந்ததும் புகை இவன்
கணக்குப்  பிழைத்தால் உயிர் வதை
என எந்நாளும்  தொடரும் சிறுவர் யுத்தம்
இதையா விரும்புது இவ்வுலம் இப்போ!!!!.....

கோளைப் பிள்ளைகள் இவர்களுக்கு
கொலையும் செய்யத் துணிவிருக்கு
ஆளை ஆளிங்கு பார்த்துதான் தினமும்
ஐயோ கெடுகிறதே நல்ல எதிர்காலம்!:....

தாயும் சேயும் நலன் பெறவே
தவிர்ப்போம் இதனை அன்போடு
எம் காலம் எமக்கே பயங்கரமாய்
இருந்தால் அதையும் உள்ளம் தாங்காது!...

இந்தக் கோரப் பிடியில் இருந்து உறவுகளே
உன் குடும்பம் காக்க நல் வழிதனைத்  தேடு
பின் பாரம் இந்த வாழ்க்கை என்று பெரும்
பள்ளம் தேடி அதனுள் விழும் முன்னே !............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2012

விரைந்து வா நீ அது போதும் .இரவைப் பகலாக்கினாய்
பகலை இரவாக்கினாய் என்
உணர்வில் கலந்தவளே நீ இன்று
என்னை என்ன செய்யப் போகிறாய் !....

மனதைக் குடைந்து மறுபடியும்
உன்னை நான் தேட என்னுள்
உறைந்து கிடந்து கொஞ்சம்
சந்தம் தர நீ மறுக்க நான் ஏங்கவோ!....

சொல்லில் பொருளில் மேலும்
மேலும் பிழைகள் கண்டு நான்
உன்னைத் திருத்த நீ என்னைத் திருத்த
நெஞ்சம் அலை மோதும் வலி தாங்கவோ...

சொன்னால் புரியாது நான்
உன்னால் படும் பாடு !!........
பின்னால் தொடராதே என நானே சொல்லி
உன்னை நானே அழைக்கின்றேன் !!!............

தேனும் பாலும் தெவிட்டவில்லை உன்னை
எந்நாளும் அணைக்கத் துடிக்கின்றேன் !...
இந்த வானும் மண்ணும் கூட இங்கே
இதற்காக அலைவதைப் பார்க்கின்றேன்!...

இனி போதும்  என நான் அடங்க மாட்டேன்
இளம் பூவே என்னை வாட்டாதே தினம்
நீயும் நானும் சேர்ந்திருந்தால் அதில்
திரளும் இன்பம் பல கோடிபெறும் !..........

நாம்  வாழும்போதே இந்த சுகம்
வளமாய் அமைய எந்நாளும்
இங்கு காணும் காட்சி அத்தனையும்
என் கவிதைப்  பெண்ணே   நீயாக வேண்டும் !!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2012

கண் எனத் தகும் எழுத்துக்களா இவைகள் !.......


தூங்காமல் விழித்திருந்து தினமும் 
தூசி தட்டி பல நினைவுகளை 
ஏன்தான் இங்கு எழுதுகின்றார்கள்  
எல்லாமே பயன்தரும் செய்தி என்றோ !....

நாம் பாடும் பாட்டு அது ஒரு 
நால்வகைக் கூற்று பாரிதை!!!!........
கண்டதும் கேட்டதும் கற்றதும் 
உணர்ந்து நாம் பெற்றதும் 

எத்தனைக் கெத்தனை உண்மைகள் 
இத்தனை வகையாம் எழுத்தினிலே !....
நல்லதை மட்டும் நாம் நிறைப்போம் 
அதையே நலன்பெற இங்கே எடுத்துரைப்போம்!...

சொன்னவர் பெயரும் நிலைத்திடவே 
மிகு "சுகம் தரும்" செய்திகள் பகிர்ந்திடுவோம் 
இல்லையேல் துறவு நாம் பூண்டிடுவோம் 
இனியவை தொடர்ந்திட வாழ்துரைப்போம்!...

இல்லை ஓர் குறை இங்கு உலகினிலே 
இருக்கவே இருக்கிறது பல நன்னூல்கள் 
உள்ளதைச் சொன்னால்  இவை போதும் 
மனிதன் உருப்படியாக இங்கு வாழ்வதற்கு !...

என்னமோ போங்க உறவுகளே 
எமக்கும் உள்ளது  பற்றுதான் தமிழ்மீது 
இல்லையேல் ஏன் இங்கு கிறுக்குகிறோம்!...
எம்மவர் படித்துத்  திட்டிடவா !!!!.......

தொல்லைகள் நீங்கிட பாடுபடுவோம் எதிலும் 
ஒரு தோழமையோடு செய்தி பகிர்வோம் ......
நல்லதையே என்றும் நினைத்திடுவோம் 
நாம் தமிழர் என்றே தினம் வாழ்ந்திடுவோம்!....

பொல்லாப்பு இங்கு எமக்கெதற்கு!!!!.......
புவி போற்றும் நல் வாழ்வு கூட இருக்கயிலே! ..
எல்லோரும் மகிழும் நிலை வேண்டும் 
இதற்காக எழுதுங்கள் அன்பு உறவுகளே 

கண்டதைக் கேட்டதைக்  கற்றதை மற்றதை 
அற்புதம் அற்புதம் என மனம் மகிழ்ந்து 
உங்களைப்  பிறரும்  வாழ்த்திட போற்றிட எழுதுங்கள் 
எழுதிடும் எழுத்தினைக் கண் என மதித்திங்கு..........!

                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/22/2012

பலிபீடம் ஏறிடும் அடுத்த ஆடுகள் தர வரிசை !!!......மஞ்சள் தண்ணி ஊத்தி அது
நிறம் மாறி அங்கே ஓடும்போது
என்னதான் நினைப்பார்களோ.....
இறைவன் படைத்த உயிர் துடி துடிக்க!.....

இந்த வழியில் இன்னொரு ஜாதி
அதுதான் இங்கு பெண்களடா ......
என்ன சொல்கிறார் பெற்றவர்கள்
இதையும் கொஞ்சம் கேட்டு உணர்வோமா !!!!......

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் ஆசை வைத்து
அவள் கண்களிலே கண்ணீரை  ஏன் தொடுத்தோம் 
இந்தப் பெற்றவர்கள் வேதனை புரியாமலே 
அட மற்றவர்களும்  ஏறி இங்கு  மிதிப்பதேனோ !!..............

பத்து ரூபாய் குறைவதைப் பார்த்தவர்கள் 
அந்தப் பச்சப்புள்ள மனச நோகடிக்க 
எட்ட நின்று கேட்கும் எமக்கிங்கே அட 
என்ன நீதி சொல்லுமம்மா இந்த உலகம்!....

கெட்டுக் குட்டிச் சுவராய் ஆவதற்கோ 
பெண்ணை பெற்று இங்கு  நாமும்  வளர்த்தோமே!...
சட்டம் பேசும் மக்கள் முன்னாலே இந்த 
பெற்றவர்கள் செய்த பாவம் என்ன !!!........

எங்கள் முத்தழகி மனதில் முள்ளுத் தைக்க 
நாம் வைத்த குறை தேடி அலுத்தொமே!..... 
குற்றம் ஏதும் இல்லை என்றபின்பும் அவளைக் 
கொல்லும் வரை யார்தான் காத்திருப்பார் !......

பெற்றவர்க்கு பேசும்  உரிமை இல்லையாம்!!!!.... 
அடடா பிய்த்து எறியும் குரங்கு சொன்ன கதை 
இதை ஒத்துக்கொண்டால் வாழ்க்கை என்னாகும்!!!..... 
நித்தம் வரும் செய்தியில் இதுவும் ஒன்றாகும்!....             காஸ் சிலிண்டர் வெடித்து குடும்பப் பெண் பரிதாப மரணம் !!!......
                                   


அத்தனைக்கும் பொறுமை எமக்கில்லை 
அறுத்தெறிந்த வாழ்விலும்  பயனும் இல்லை 
பெண்ணைப் பெத்த பாவம் அது என்றும் போவதற்கு 
இன்னும் எத்தனை துயர்தான் நாம்  இங்கு பட வேண்டும் !!!!!.....

ஒற்றையடிப் பாதையில் நம் எதிரினிலே
ஓரம்கட்ட முடியாத  நிலைமையிலே
வைத்த அடி பின்னோக்கும் நிலை வந்தால்
சற்றே இதை யோசி நீ என்ன செய்வாய் !!!!......

விட்டுத்தான் விலக நேரிடும் சில கொள்கையினை
வீண் வீறாப்பால் அழியும்  பல உயிர்கள்  என்றால்
இதில் குற்றம் என்ன கண்டாய் மானிடனே
உன் கொள்கையிலும் உயர்ந்தது மனிதநேயமே!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2012

தேடு உனக்குள்ளேதான் அது ....மருதாணி போடாமலே
சிவக்கின்றதே கன்னம்
ஒரு தாவணி போட்ட
அந்நாள் முதல் !!!!..........

எழிலாய் நடை பயிலக் கற்றுக்கொண்டாள்
இதமாய் பேசும் அழகைப் பெற்றாள்
ஒரு தாய் உணர்த்தும் செயலைக் கூட
எளிதில் புரியும் ஆற்றல் பெற்றாள் !....

இதுதான் பருவ மாற்றம் என்றோ ....
எனக்கும் வியப்பை ஊட்டுதிங்கே !!!...
பூனையும்  நாயும் ஏனைய யீவன்களும்
தாய்மை அடைந்தால் தங்கப் பதுமை தானோ !!!....

யார் எவர் இதனைக்
கற்றுக் கொடுத்தார்!....
யாவையும் புதுமை இறைவன்
படைப்பில் என்றும் !!!!!..............

தீது நாம் பழித்தல் இங்கே  
தெய்வம் இல்லை என்றால்
இது எதுவும் நிகழாது என
கோடிடு மனதில் நீயும்

கொண்டு வந்த செல்வம் என்ன !!....
நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !..
ஒன்றும் இல்லை உலகினிலே
உயிர்கள் மீது காட்டும்  அன்பைத் தவிர ...

நாம் வந்ததற்கு மூன்று சாட்சி
எம்மை வாழ வைக்கும் மன சாட்சி
என்றும் பொழுதுகள் மகிழ்வாய் இருக்க
இனியவை  பேசு நீ அது போதும் !!..........

நொந்தவர் மனதை நோகடிக்கும் மாபெரும் 
நோக்கம் இவை என்றுமே தவறென்று
வந்தவர் யாவரும் அறிந்திருந்தால்
வரும் துயர் எல்லாம் நீங்கிடுமே!!..........

சிந்தனை செய் இதை நல் மனமே
தீங்கில்லை இதனால் சுகம் வருமே!...
நிந்தனை வேண்டீர் உலகினிலே
நிஜம் இல்லை எதுவும் என்ற பின்பும் ....

சண்டைகள் வேண்டாம் எமக்கென்றும்
சமத்துவம் இருந்தால் அது போதும் என
என்றிதனை  மனிதன் உணர்கின்றானோ
அன்றுதான் உலகம் அமைதி பெறும் ....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/19/2012

அன்று போல் என்றுமே ....


என்னைப் பெத்த ராசா உனக்கு
நான் எழுதும் கவிதைப் பூக்கள் இதோ!....
இன்னும் நூறு ஜென்மம் இங்கே
உனக்கே மகளாய் பிறக்க வேண்டும் .

கண்ணுக்குள்ளே எம்மை  வைத்துக்
காத்த உன்னைக் கலங்க வைக்க
என்ன பாவம் செய்தேனோ
எனக்கும் ஒன்றும் புரியவில்லை!!!.....

பொன்னைப்போலே என்னை மதித்தாய்
பூச்சூடித்தானே நீயும் மகிழ்ந்தாய்
என் அன்னை இல்லாக் குறையைக் களைந்த
ஐயா நீயும் ஏன் நடை பிணம் ஆனாய்!!!........:(

கண்ணில்லாத உலகம் இதில் உன்
கண்மணி நானும் தனித்தேன் என்றோ
அள்ளித் துயரை நெஞ்சில் நிறைத்தாய்
ஐயோ பாவம்  நான் என்ன செய்வேன் !!!....

பெண்ணாய்ப்  பிறந்த பாவம் இதற்க்கு
இரு பொழுதும் கண்ணில் கண்ணீர் எதற்கு
உன்னைப் பிரிந்தால் இந்த உலகை வெறுக்கும்
என்னை விட்டுப் போக நினைக்காதே!!!....:(

ஒற்றையடிப் பாதையிலே உன்
பின்னால் தொடரும் இன்பம் போதும்
நீ கற்றுத் தந்த நன்னெறிகள் எனக்கு
காலம் முழுவதும் கை கொடுக்கும்!...

பிச்சை எடுத்துப் பிளைத்தாலும்
பெண் பெருமையாக வாழ்ந்திடலாம்
இச்சைக் கடிமையான மனிதர்கள்
உடன் இருந்தால் அதுவும் கறைதானே!...

விட்டுத் தள்ளு துயர்களை என்றும்
வீண் வருத்தம் உடலுக்காகாது
எம்மைப் பெற்று  வளர்த்த  தந்தை நீ அழுதால்
இந்தப் பேதை மனம் அதைத் தாங்காது !!!....

வெட்டி முறிந்து வேலை செய்து
எம் விருப்பம் போல நீ நடந்தாய்
அந்தக் கெட்டித்தனத்தில் விளைந்த முத்து
என்றும் கீழோர் தயவை நினைக்காது .....

அச்சம் ஏனோ ஐயா உனக்கு!!!............
ஆண்டவன் எம்  பக்கம் இருக்கையிலே
இடர்களைத்  துச்சமாக நினைத்தால் போதும்
கார் இருளைக் கடக்கவும் நல் வழி பிறக்கும்!....

நீ தச்சுத் தச்சு போட்ட சட்டை
தாறு மாறாய்க் கிழிந்தாலும் அவைகளை
என் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்தேன்
உன் பாசம் விட்டுப் போகாமல் !.........

இனியும் என்னைத் தட்டிக் கழித்து மேலே செல்ல
உனக்குக்  கெட்டித்தனமும் உண்டோ சொல் .......
தலையில் குட்டி வளர்த்த செல்லக் கைகள் பற்றி
நானும் கூட வருவேன் உன் பின்னாலே !!!.........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/18/2012

200058978656....இன்னும் இன்னும் ஏற என்ன வழி சாமி !....

பிணம் தின்னும் பேய்களுக்கு
புத்தன் என்ன காந்தி என்ன !!!..
வரும் பசியைத்  தீர்பதற்கு
வந்த உடல் போதும் என்றால்

சந்தணமும் ஜவ்வாதும் பெரும்
தெய்வீக மணம் கமளக் கண்டும்
அந்தணர்போல்  விலகிச் செல்ல
அவைகளுக்குத்   தெரியாதே !..........

இதில் எந்த நியாயம் சொல்லி நாங்கள்
இன்னுயிரைக் காப்பதிங்கே !!!.......
பந்த பாசம் அறுந்து நிற்கும்
பாவப்பட்ட ஜென்மங்கள்  முன்!..

கந்தன் அருளும் தோற்றதிங்கே
அரிய காவசங்களும் மரத்ததிங்கே
என்ன பாவம் செய்தோம் என்று
இழுத்து மூடித் தூங்கும் நெஞ்சோடு

பஞ்சு டயலாக் பேசுது பேய்கள்
பார்த்து மனம் நோகும் வண்ணம்
இந்த உலகம் அழிவது எப்போ !!!...
ஏன்தான் இவைகள் இப்படி !!!......

சொந்தமாக முன்னேற சுய
செய்தி ஒன்றும் இல்லை என்றால்
வந்து பார்க்கும் (சனத் )தொகையைக் கூட்ட
எந்த செய்தி போடலாம் என ஏங்கும்

கில்மா பதிவு நாயகர்களே நீரே
கீழோர் குணத்தில் மேலாவீர் !!!!!.......
எல்லாம் தெரிந்தும் தெரியாத பல
உண்மை எதுவென உணர்வீரோ!.....

சும்மா கிடந்த சங்கை ஊதித்
துயரை என்றும் கூட்டாதீர் .....
உன் அம்மா வயிற்றிலும் மகள் பிறந்தாள்
அதனால் இழிவாய்ப்  பெண்களை எழுதாதீர் !!!!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2012

சந்தம் இது சந்தம் என .....சந்தம் இது சந்தம் என
எல்லோரும் கொண்டாட வந்தேன்
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு

சிந்தும் நதி எங்கே?
கடன் வாங்கும் என் தோழி
சொன்னார் ஒரு கேலி
இதில் உண்மை என்னடி என் தோழி?
                                        (சந்தம் இது சந்தம் )
கங்கைக் கரை ஓரம்
நீ வந்தால் அது  போதும்
இன்பம் என்றும்  பொங்கும்
தன்னாலே !
விண்ணும் உடன் கை தட்டும்
கண்ணில் அங்கே நீர் சொட்டும்
நான் சொல்லும் கவி கேட்டே
மனம் கூத்தாடும்

 உன்னில் என்னைக் காண
அடி என்னில் உன்னைக் காண
சொல்லில் புது அர்த்தம்
என்றும் தனியாகும்!
புல்லுக்கிறைத்தாலும்
என்னை நெல்லுக்கிறைத்தாலும்
மண்ணில் என்றும் பயன் நான்
தருவேனே
                               
பன்னீர் மழை தூவும்
பொன் மேகம் என்னைத் தாங்கும்
இவள் இல்லை எனில் இங்கே
உயிர் வாடும் !
அல்லிக்  கொடியே நீ
என்னைத் தொடும் போது
என்னுள் சுக ராகம்
என்றும் அலை மோதும்!

கன்னித் தமிழ் இன்பம்
என் சொல்லில் குறைவா?
அது இல்லை எனில் இங்கே
நீ வர வேண்டும்
உன்னைத் தொழ நான்
நீ என்னுள் உறைவாய்
எங்கும்  கண்ணுக்களகாய்
மனம் பூத்தூவும்!
                          (சந்தம் இது சந்தம் என)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/11/2012

ஏன் பெண் என்று பிறந்தாய் !.....


வஞ்சி மகள் குடை கேட்க்க
வானவில்லை வளைத்தேனே
என் குஞ்சு இன்று சிறகு முளைத்துக்
கூடு விட்டுப் பறந்ததெங்கே !!......

பஞ்சம் என்று பார்க்கவில்லை
பகல் இரவாய் உழைத்தேனே என்
நெஞ்சினிலே தூங்க வைத்து
நெடுநேரம் விழித்திருந்தேனே!...

தஞ்சம் என்று என்னருகே
தாவி வரும் பொன்மானே
உன்னைக் கொன்று தின்ற
அரக்கரது குடி மூழ்கிப் போகாதோ!!!......

பெத்த வயிறு பத்தி எரியுதிங்கே
பிணம் தின்னிகள் இதைப் புரிவதெங்கே!..
அச்சுறுத்தி அச்சுறுத்தி
அடங்கி வாழும் பெண்ணினத்தை

அடிமை என்னும் சாசனத்தோடு
இழிவு படுத்தி முன்னேறும் அரசியல்
கொடுமையிலும் கொடுமை என்று
கொட்டும் முரசு கொட்டாதோ !!!!.....

துப்பாக்கி முனையிலேதான்
எமக்கிங்கே சுதந்திரமாம்!!!.......
ஒரு துளியிங்கு அசைந்தாலும்
உயிர்தன்னாலே  விடைபெறுமாம் !!!.......

இப்பாக்கியம் அடைவதற்கோ
நாம் இங்கு வந்து பிறந்தோம்!........
இதமாகச் சொல்கின்றார் சிலர்
எமக்கும்தான்  சுதந்தரம்  வந்ததென்று!!!...

அன்பில்லாத உலகம் இதனில்
பெண் ஆனந்தமாய் வாழ்வதெங்கே
அழிவுப் பாதை வகுப்பவர்க்கே
கலியுகமும் கை குலுக்குது பார் இங்கே!!!......

வாயிருந்தும் ஊமைகளாய் வார்த்தையின்றி
அழியும் இனத்தின் சங்கதியை
தெளிவு படுத்த முயன்றாலுமே
தீமை தன்னால் வந்து ஒட்டிக்கொள்ளும்!!!...

அச்சம் மிகுந்த வாழ்க்கைச் சக்கரம்
அதுதான் பெண்களின் உலகமடா !!...
அதிலும் துச்சமாக இவர்களை மதிக்கும்
 துரோகம் நெஞ்சைப் பிளக்கிறதே!!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/10/2012

பாரதியார் கவிதைகள் !........

அன்னையின் திருவடி
போற்றிடும் மகாகவி
உன் எழிற்   கவிதையே
என்றும்  எம்  உயிராகும்!!!!.......

வன்முறை ஒழியவும்
வளம் பல பெருகவும்
பொன் எழுத்தாலே
புகுத்தினாய் நல் அறிவதை!!.....

இன்னமும் பாடிட
இனிக்குதே தேன்  என !!!...


என்ன உன் ஞானம் !!!!...........
எழில் வனம் தோற்றிடும் ........

செந்தமிழ் காவலா
தீந்தமிழ் உன்னதா !!!......
கொண்டதோர்  தாகம் அதனால்
கொட்டியதே கவிதைத் தேன் மழை¨.....

வென்றது வென்றது இன்றுமே
உன் பெயர் சொல்லியே
மகுடம் ஏற்குது எம் தமிழ்
கவிதைகள் கண்டீரோ!!!...

வெண் குடை நிழலில்
உன் சிலை வலம் வரும்
இன்னொரு நாளைக் கண்டிடவே
ஏங்குது எம் மனம் மகாகவியே!......

சாதிகள் ஒன்றென நீ முழங்க அன்று
வந்தது  சங்கடம் உனக்கு பல நூறு!...
ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்
மத யானைபோல் துணிந்தங்கு நின்றாயே!!!..

மா தவம் செய்தோம் மாந்தரும் நாம்
மண்ணினில் சுதந்திரம் பெற்றிடவே
நீதியை நீ அன்று  உரைத்ததனால்
நீங்கியதே பல  அடிமை விலங்குகள் இங்கே!!!........

ஏழை எளிய மக்களுக்கும் உன்
உழைப்பால் நன்மை நீ தந்தாய்
நாளைய சந்ததி நல் வளம் பெறவே
எந்நாளும் கவிதை நீ வரைந்தாய் !!....

அதிலும் பாமர மக்களும் பயன்பெறவே
உன் பாட்டினில் புதுமையை நீ படைத்தாய்!...
அந்தத் தீவிர முயற்சியின் பயன் இன்று
திரளுது கடலலைபோல் புதுக் கவிதைகள் பார்!!....


ஆயிரம் மலர்கள் தூவியே உந்தன்
காலடியினைத்   தொழ நாம் விரும்புகின்றோம்..
எம் தேவைகள் அறிந்த மானிடனே உயர்
தீந்தமிழால் உன்னைப் பாடுகின்றோம்!!.......

வாடிய பயிர்கழும்  உயிர்த்தெழும் இன்று
வான்மழைபோல் உன் நினைவதனால்
கூடியே கும்மி கொட்டிடுவோம் எங்கள்
குலமது தழைக்க வழி வகுதவனே உனை நினைந்து!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/09/2012

பொன்னான வாழ்வு மண்ணாகி போமா!......

சிறகொடிந்த பறவைபோல
விழுந்து கிடக்கிறோம் நாம்
சிந்துகின்ற கண்ணீரில்தான்
தினம் குளிக்கிறோம் !!!!........

உறவிருந்தும் திரும்பிப் பார்க்க
நேரம் இல்லையே !!!............
உழைக்கும் வர்க்கம் எங்களுக்கே
வாழ்வில் உயர முடியவில்லையே !!....

பணம் படுத்தும் பாடு இங்கே
ரொம்பத் தொல்லையே !......
படுத்து உறங்க நேரம் தேடி 
மனம் அலுத்துப் போனதே !!........

பொருட்கள் விலை குறைந்தால் ஒளிய
இனி இங்கு வாழ்வு இல்லையே !!............
இந்தப் புரிதலினால் மனித வாழ்க்கை
தினமும் வெறுத்துப் போகுதே !!............

அடுத்து வரும் சந்ததியைக்
காத்துக்கொள்ளவே -கொஞ்சம்
வரும் பணத்தில் சேமித்து
காப்புறுதி செய்து கொள்வோமே !....

பணம் இருப்போர் தைரியமாய்
வீண்  செலவு செய்கிறார்!!!.........
இவர் படுக்கையிலே வீழ்ந்துவிட்டால்
குடும்பம் உய்யுமா ???................!!!


கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
பின் கடவுள் இல்லை என்றெங்கும்
அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் ....                                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/08/2012

யாருக்குத்தான் இங்கே துன்பம் இல்லை !.....


துன்பம் துன்பம் துன்பம் என்றே
துவண்டு விழுதல் நன்றோ சொல்லு !...
இன்பமான வாழ்வு அதுவும் உந்தன்
மனதில்தான் உண்டெனக் கொள்ளு !....

வம்பு தும்பு பண்ணாமல் இடர்
வாட்டும் செயலை செய்யாமல்
என்றும் வாழக் கற்றுக் கொண்டால்
இதையம் அமைதி கொள்ளும் அதனால்!...

பட்ட துன்பம் மறந்து வாழ
பகவான் நினைவே பெரிதென எண்ணி
பத்து நிமிடம் தியானம் செய்தால்
மனம் பஞ்சாய் பறப்பதை உணர்வீரே !...

கெட்ட எண்ணம் நற் குடி கெடுக்கும்
கீழோர் செயலை நினைக்காதே ........
திட்டம் போட்டு தவறு இழைத்தால்
தீமை என்றும் விலகாதே !!..............

நல்ல மனதிற்கு சோதனைகள்
எந்நாளும் வருவது துயர்தானே !...
இந்த இன்னல் தீர்க்கும் வழிகளில் ஒன்று
இன்னும் இருளில் கிடப்பவரை நினைப்பதுவே!....

                                                  சோமாலியா !!!!!!...............

                                       
                                                  இந்தியா !!!!!.............

                                             
                                               இலங்கை !!!!............

இங்கே ஆடம்பரமாய் வாழ முடியவில்லை
அழகு சேர்க்க மேலும் வழிகள் இல்லை
தேடிச் சென்ற இன்பம் கிட்டவில்லை
தீதே இந்த வாழ்க்கை என்றால்

உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....

ஒரு கச்சைத் துணியைக் கட்டிக் கொண்டும்
கஞ்சி கிடைத்தால் போதும் என்றே நல்ல
நெஞ்சம் இருந்தால் அந்த நினைப்புத் தோன்றும்
அதுவும் இல்லை என்றால் உன் துன்பம் என்றும் வீணே!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2012

.பின்தொடர் வாழ்வு இனிக்கும்!.......


யாசிக்கும் கரங்களை நேசிக்க மறந்து
நாம் சுவாசிக்கும் காற்றிலே இங்கு
இருந்தென்ன  பயனோ !..........என
யோசிக்க வைக்கும் மனிதர்கள் இவர்கள் !...

கால் பட்ட மண்ணும் பொன்னாகும்
கை தொட்டால் துன்பம் கரைந்தோடும்
தேசத்தின் நன்மை தன் நன்மை என்றே
பெரும் தியாகத்தால் வாழ்வில் உயர்ந்தாரே!...

அறிவுக்கும் அன்புக்கும் குறைவற்ற மேதைகள்
அகங்காரம் இல்லாத ஆனந்த ஜோதிகள்  இவர்கள்
உருவத்தை மனதிலே   நிறுத்தி வைத்தாலே
உள்ளத்தில் என்றும் தெளிவு பிறக்கும் !...........

ஆங்காரம் கொண்ட சில மனிதர்களுக்கும்
வண்டின் ரீங்காரம் கூட தாங்காது என்றும்!....
நாம் வாழும் வாழ்க்கைப் பாதைகள் இங்கே
நலமாக அமைய பெரும் துணை வேண்டும் எனவே

தொடருங்கள் இனிய  நல் இதயங்களே
தூயவர் இவர்கள் பாதச் சுவடுகளை
கொடிபோல படரும் அறியாமை நீங்கும்
கொடை  வள்ளல் ஆகும் குணம் தன்னால் வளரும்!...

கண்களில் பட்ட தெய்வங்கள் இவர்கள்
கருணைக்குக் கடலென சொன்னாலும் தகும்!....
விண் போற்ற இங்கே வாழ்ந்தாலும் கூட
வீணாக புகழுக்கு கொடி ஏந்தவில்லை !!!!.....

பிறர் வாழ்த்த வாழும்
குணம் ஒன்று இருந்தால் 
பிறவிக்குப் பெருமை
தன்னாலே சேரும் !.......

மிதம் மிஞ்சும் கர்வம்
அழிவுக்கே அர்த்தம்
இதை ஏற்றுக்  கொண்டால்
வாழ்க்கை இதமாகத்  தோன்றும் !....

நிலையில்லா செல்வம்
தினந்தோறும் தேடி
அழியாது இனியும் நாம்
மனிதராய் வாழவே  இவர்களைத்தான்!!!......
                                                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/06/2012

பூந்தளிர்த் தென்றல்க் காற்றே...

பூந்தளிர்த் தென்றல்க்  காற்றே
பூ வாடை வீசும் பெண்ணே ........
பாவாடைத்  தாவணியில் வந்ததென்னம்மா...
குளிர் நீரோடை போல நெஞ்சைத்
தொட்டுச் சென்றதென்னம்மா !...........

மானாட மயிலும் ஆட
மனம் போல நீயும் ஆட -இந்தக்
குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கிறதா? !......
உந்தன் கொலுசும்தான் தாளம் போடப் பார்க்கிறதா?!....

முல்லைப் பூப்போல் என்றும்  சிரிக்கின்றாய்
முக அழகாலென்னை வதைக்கின்றாய் !..
பெண்ணே என்னைக் கொன்றுவிடு
இல்லை என்றால் இங்கே வந்துவிடு ......

என் எண்ணம் எங்கும் உன் விம்பமெடி
நான் ஏழை ஆனேன் என் பைங்கிளியே
இரு கன்னம் தொட்டு நான் மகிழ
ஒளி  மின்னல் போலே நீ வந்துவிடு  ......

சின்னச் சின்னக் கதை பேசி
சிணுங்கும் உன்னை நான் அணைக்க
வெட்கப்பட்டு செந்தாமரைபோல்
இரு விழிகள் மூடி எந்தன்
தோழில் வந்து சாய்ந்து விடு...

என் அத்தை பெத்த ரத்தினமே
அழகு மயில் சித்திரமே !.........
ஒத்தையில உன் நினைப்பால்
ஒதுங்கி நிக்குதடி நித்திரைதான்...........

                                              (பூந்தளிர்த் தென்றல்....) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/01/2012

அணையைத் தாண்டுது துயரம் இங்கேஅணையைத் தாண்டுது                           
துயரம் இங்கே அம்மா வருவாளா!.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயா.... நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயா...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக!!!....

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அறியாமை அழித்திடும் நல் உயிரை....இருப்பதை எல்லாம் எடுத்துக்கொள்
பெரும் இன்னலைத் தந்து வதைத்துக்கொள்
உருப்படியானது மனிதனுக்கு இவ்
உலகினில் என்றுமே தன் மானமடா!!....

அடுக்கிடும் நகையில் அர்த்தமில்லை...
அழகது என்றும் நிலைப்பதில்லை
எமைத் திடுக்கிட வைக்கும் உணர்வு அது
தீயவர் என்ற பெரும் பளிச்சொல்லே!!.......

குன்றினில் இட்ட தீயாக மனம்
குமுறிடும்  என்றுமே  தணியாமல்
கன்றையும் ஒதுக்கும் தாயுள்ளம்
கசிந்திட்ட   வதந் "தீ" அதனாலே!!!.......

கொன்றிடும் துயரது போக்கிடவே
தற் கொலையிலும் ஆவல் பெருகிடுமே
நன்றிதோ நமக்கு அறியாமை !!........
நல்லவர் உயிரைப் பறிக்கும் என்றால்!....

சிந்தை செய் மனமே எந்நாளும்
சிறப்புற நல் வார்த்தை பேசிடவே
கண்டதை வைத்தும்  வெறும் கற்பனையால்
களவுற எதையும் உரைக்காதே !!!.................

நொந்துதான் போவார் நல்லவர் இங்கே
வார்த்தை அம்புகள் கீறிய வடு அதனால்
குந்தகம் அற்ற செயல்த் திறன் கொண்டு
கண்டுகொள் உண்மை அது என்னவென்று!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.