11/14/2013

தமிழீழத் தாயின் தன்னிகரற்ற வாழ்த்துக்கள்அன்பாய்ப் பேசும் பேச்சினிலும்
அழகாய்ச் சிரிக்கும் சிரிப்பினிலும்
தென்பாய் நடக்கும் நடையினிலும்
தேனே உன்னில் என்னைத் தான் கண்டேன் !!!

வெண்பா எழுதத் துடிக்கையிலும்
வெறுப்பாய் என்னைப் பார்கயிலும்
கண்பார்வையின் அசைவினிலும்
கனியே உன்னில் என்னைத் தான் கண்டேன் ..!!!

அண்ணன் தம்பி தங்கையுடன்
ஆடிப் பாடி மகிழ்கையிலும்
மலர்ந்த முகத்தில் எதைக் கண்டேன்
மலரே உன்னில் என்னைத் தான் கண்டேன்...

சட்டப் புத்தகம் போல் என் முன்
நீ சண்டைகள் போடும் போதெல்லாம்
கண்ணே மணியே எதைக் கண்டேன்
கரும் புலியே உன்னில் என்னைத் தான் கண்டேன் !

கொட்டும் மழையில் நீ நனைகையிலும்
கொள்கை மாறா உன் பேச்சினிலும்
கட்டிக் கரும்பே எதைக் கண்டேன்
கண்ணே உன்னில் என்னைத் தான் கண்டேன் ...

தமிழிச்சி என்று சொன்னாலே இன்றும்
தரணியில் அனைவரும் வியப்புறுவர்
உன்றன் பரம்பரை  தழைத்திடவே
ஒவ்வொரு நாளும் வாழ்த்துரைப்பேன்

அகர முதல  எழுத்தையே
அன்றும் இன்றும் சுவாசிக்கும்
எங்கள் பரம்பரை உட்பட
அனைத்துக் குழந்தைகளும் வாழியவே ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. செல்லங்கள் வாழ்க வாழ்கவே.....

  ReplyDelete
 2. குழந்தைகள் எங்கள் குதூகல மன்றோ
  இழந்திடாமற் காப்போ மினிது!

  குழந்தைகள் தினக் கவிதை அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 3. அழகு!

  தேனே உன்னில் என்னைத் தான் கண்டேன் !!! என்பதை,
  எனைக் கண்டேன் என்றால் சந்தம் , ஓசை நயம் ,இன்னும்
  சிறப்பாக இருக்கும்!

  ReplyDelete
 4. அனைத்துக் குழந்தைகளும் வாழியவே ....

  தமிழச்சியின் படைப்பு அருமையோ அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 5. அருமை! குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. குழந்தைகள் தினத்தை - தாங்கள் கொண்டாடிய விதம் அருமை!.. அழகான நயமான கவிதை!..

  ReplyDelete

 7. ஈழத் தாயின் வாழ்த்துக்களுக்கு - ஓர்
  ஈழவனின் பாராட்டுகள்.

  ReplyDelete
 8. குழந்தைகள் தின கவிதை - மிகச் சிறப்பாய் அமைந்தது சகோ...... பாராட்டுகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........