11/28/2013

காலை இளந் தென்றற் காற்றே


காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ!
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே!

சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே!

                                              ( காலை இளந் )

தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..

ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான்  போட
மீசை துடிப்பதேன் மச்சானே! - நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே?

                                                       
கூவும் குயிலும் மயிலும் எங்கே
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகமே!

ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மச்சானே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம்தான் ......

                                                      (  காலை இளந்)


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

29 comments:

  1. வணக்கம்
    புனைந்த கீதம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகான ரசிக்க வைக்கும் பாடல்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா கனிவான இந்த வாழ்த்திற்கு .

      Delete
  3. Replies
    1. நன்றி கருத்துப் பகிர்வுக்கு .

      Delete
  4. காலை இளந் தென்றல் கதகதப்பாகப் பாட வைத்துவிட்டதோ?...:)

    அருமை! மிகவே ரசித்தேன்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்களின் ரசனைக்கு .

      Delete
  5. இது சினிமா பாட்டா ? இல்லை நீங்களே எழுதினதா ? சூப்பர்ப்....!

    ReplyDelete
    Replies
    1. என்றைக்காவாது ஒரு நாளைக்கு இதுவும் சினிமாப் பாடலாக
      வலம் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் உங்களைப் போன்றவர்கள் இதற்கொரு வடிகாலாக அமையட்டுமே .மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  6. காதல் கீதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  7. அருமை,வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  8. ரஸித்தேன். பாடல் நல்லா இருக்குது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அருமையான பாடல். . .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  11. சிறப்பான பாடல்.
    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரே வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  12. MTG வலையிலிருந்து இங்கு வந்தேன் .
    முதலில் இது சினிமாப் பாடலென்றே நினைத்தேன். பிறகு தான் புரிந்தது இது உங்கள பாடலென்று மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற லட்சியத்துடன் தான்
      இவ்வாறு பாடகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகின்றேன் .மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  13. எந்த சினிமாவுக்காக எழுதிய பாடல் என்பதையும் சொல்லியிருக்கலாமே! (காதல் சுவை நனிசொட்டச்சொட்ட எழுதியிருக்கிறீர்கள். காதலுக்கு எப்போதுமே மார்க்கட் உண்டு தானே!)

    ReplyDelete
    Replies
    1. விரைவில் இந்த வாய்ப்பும் கிட்டும் என்ற நம்பிக்கையில் தான் ஐயா எழுதி வருகின்றேன் .ஆதலால் இன்னும் எந்த சினிமாப் படம் என்று சொல்ல இயலாதையா :) .மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  14. பூவோடு சேர்ந்த நாருக்கும் வாசம் உண்டு என்பர். அதுபோல உங்கள் பாவில் "நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
    எந்நாளும் இங்கே கொண்டாட்டம் தான்..." என்ற அடிகள் நினைவுக்கு வர வைத்தது.
    உங்கள் பாவிற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  15. பூவோடு சேர்ந்த நாருக்கும் வாசம் உண்டு என்பர். அதுபோல உங்கள் பாவில் "நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
    எந்நாளும் இங்கே கொண்டாட்டம் தான்..." என்ற அடிகள் நினைவுக்கு வர வைத்தது.
    உங்கள் பாவிற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  16. நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட
    சித்தம் வைத்தீரா செப்பிடுவீர் அம்பாளே!

    ReplyDelete
    Replies
    1. சித்தமதில் கவிதையின்றி உங்கள் அம்பாளின்
      சீவனது நிலைக்காதே ஐயா !!

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........