2/28/2013

கற்றார்க்கே சென்ற இடமெல்லாம் சிறப்பு !..


அடக்கு முறைக்குள்
சிக்குண்டு தவிக்கும் எம் 
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !.........

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் எதனையும் வென்று காட்ட
புத்தியுள்ள மனிதர்களுக்கு 
சக்தி கிடைத்தால் போதுமடா

குத்திக் குத்தி உடல்களைக் கிழித்து
அச்சம் ஊட்டி வென்ற வெற்றி
எச் சமயத்திலும் தோற்க்குமடா
தோற்றால் உந்தன் நிலைமை என்ன!...

உன் காட்டு முறாண்டித் தனத்திற்கும்
இந்தக்  கையாலாகத் தனத்திற்கும்
வேட்டு வைக்க  ஒரு நாள் வரும்
வரும் வரைத்தான் இத்துன்பம்

மாட்டைப் போல சொன்னது கேட்டு
மடியில் இருப்பதை உன்னிடம் தந்தும்
ஏன் நாம் எட்டுக் கல்வியைத் தொடர வேண்டும்
இதுதான் இறுதியில் வெல்லுமடா !.............

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/26/2013

நீதி செத்துப் போனதா இங்கே!....



வாரங்கள் நான்கிலும்
வருந்தித்தான் பிழைக்கின்றோம்
ஏனம்மா எமைப் படைத்தாய்
ஏக்கம் கொண்டு வாழ்வதற்க்கா!..

சாவுக்கே சாவு மணி
சர்ச்சை இன்றி நாம் அடிப்போம்
நீ வந்து துணை நின்றால்
நீங்காதோ எத் துயரும் !........

கோரப் பல் முகம் காட்டி
கொடியவர்கள் ஆட்சி செய்ய
நீதிக்குத்  தண்டணையை
நீ விரும்பி ஏற்பாயா........!

போருக்கு அழைத்தவர்களும் 
போகுகின்றனரே  பாராளுமன்றம்
போர்க் குற்றவாளி என்று எம்மைப்
போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!...

யாருக்குத் தான் தெரியாது
யாதும் இங்கே போலியென்று பிறர் அறிய
சேதத்தை எடுத்துரைத்தும் மேலும் எம்மை
சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு !!!!........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/21/2013

சக்தி கொடு நாம் வெற்றி பெற.....



தட்டிக் கொடுத்த போதெல்லாம்
இரண்டு வரிகளுடன் நின்ற கவிதைகள்
ஏனோ தட்டிக் கழிக்கப்பட்ட பின் தான்
நான்கு வரிகளாகின !!!..........

தீட்டத் தீட்ட கூர்மையான கத்தி போல்
பிறர் தூற்றத் தூற்ற தூய்மையான புத்தி போல்
ஏமாற்ற மாற்ற உறுதியான நெஞ்சம் போல்
எனை வாட்ட வாட்ட வந்த வரிகளா இவைகள்!.......

காட்டுத் தீயே துரத்தி வரினும் இனிக்
கவலை கொள்ளேன் கவிதை வடிப்பேன்!....
எனை மாற்ற முயன்று தோற்றவர்க்கும்
மனமுவந்து நன்றி சொல்வேன்

சீற்றத்தோடு எடுத்தெறிந்திருந்தால்
சித்தப் பிரம்மை தானே பிடிக்கும்!...
ஆக்கம் சிறக்க வலிமை வேண்டும்
அயராதுழைக்கும் துணிவும் வேண்டும்

எதிரி கொடுக்கும் இந்தப்  பரிசும்
இன்று கசக்கும் நாளை இனிக்கும்
மருத்துவருக்கும் நன்றி சொல்லும் காலம்
உடல் சுகத்தைப் பொறுத்துத்தான் உள்ளது எப்போதும்!

பொறுமையும் முயற்சியும்
புத்துணர்ச்சி தரும் !...........
வறுமையைக் கண்டு வாடியவனை விட அதை
எதிர்த்துப் போராடியவன்தானே வெற்றி பெறுவான் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/20/2013

செய் அல்லது செத்து மடி.....



குப்பைக்குள் கிடக்குதென்றும் குண்டுமணி
குப்பையோ ஏறுது பார்  கோபுரத்திலே !
அப்பப்பா உலகம் ரொம்ப மாறிப் போச்சுது
அதனால்த்தான் துன்பம் எல்லை மீறிப் போச்சுது!

முகம் பார்த்து முடிவுகளைத் தானே வகுக்குறார்
மீறி முன்னேறிச் செல்வோரைப்  பின்னே இழுக்குறார்!
உறவுக்குக் கை கோர்த்து உயர்த்தி விடுகிறார் சிலர்
உட் பகையை மனதில் வைத்து ஒதுக்கி விடுகிறார் !

வளர்கின்ற சந்ததியின் வாயை அடைப்பதும்
தனக்கு வருமானம் பார்த்து இங்கே தலைமை ஏற்பதும்
இது நாகரீகம் என்று சிலர் ஏனோ நினைக்கின்றார் !
இதில் ஏதும் அறியாதவர்களும் இங்கே கூட்டுச் சேர்கின்றார்.......!

தங்க முலாம் பூசி விட்டால் அது தங்கமாகுமா !!
இது  தப்பென்று தெரிந்து விட்டால் வந்த வெக்கம் போகுமா ..
கருக் கலைப்பைப் பாவம் என்று உயிர்கள் நினைக்கையில்
இப்படிக் கருக் கலைத்துச் செல்வோரை என்ன சொல்வது!

உருப்படியாய்த் தகமைகளை ஊக்குவிப்பதும்
உள்ளுர சேவைக்கென தன்னை அர்ப்பணிப்பதும்
மிகப் பெரிய பண்புகளில் ஒன்றாகுமே இதை
உணர்ந்து  மனிதன் செயற்ப்பட்டால் நன்றாகுமே !.......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/19/2013

காவல் தெய்வம் நீ எங்கே!......



ஏழரைக் கோடி மக்களைக் கொன்ற
அரக்கனின் வாழ்வும் சிறப்புறும் போது
ஒரு பாவமும் அறியாப் பாமர மக்கள்
பயந்ததென்றும் வாழும் நிலை தகுமோ!

மாவிலைத் தோரணம் ஆடவும் இல்லை
மனதினில் வந்த துயர் போகவும் இல்லை
சாவினைத் தழுவிய சந்ததி இதற்க்கு
இச் சங்கடம் மேலும்  தொடர்வது எதற்கு!....

நீதியை அநீதி புறக்கணிப்பதனால்
நித்தமும் வாழ்வில் சித்திரவதைதான்
எம்மை நாடி வந்த இத் துயர் தீர்ப்பவர் யாரோ!
நன்மைகள் தினம் அருளும் எம்பிரானே !!........

எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !
இத்தனை காலமும் பொறுத்தது போதும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாய்  என்ன வாழ்க்கை !

ஓடி ஓடி அலுத்த பாதங்கள்
ஓரிடத்தில் நிற்ப்பது எப்போ !
வாடிக் குரல்வளை அடங்கும் முன்னே
வையகத்தில் எமக்கொரு தீர்ப்புச் சொல்லு.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/15/2013

என்ன கொடுமை இது !!!!.....


புற்றுக்குள் பாம்பைப் போல
புறஞ் சொல்லித் திரியும் நட்பே
எதைக் கற்றுத்தான் வந்தீர் உலகில்
கல்லான நெஞ்சத்தோடு !!!!........

வற்றித்தான் போகும் உள்ளாம்
சொல்லாத வார்த்தைகள் காதில் கேட்டால்
எட்டப்பன் கூட்டம் இதனால்
என்றென்றும் துயரே வாழ்வில் !!!............

பக்கத்தில் வந்தால்க் கூட
பழி வந்து சேரும் என்று
எட்டித்தான் போக வேண்டும்
இனம் கண்டு கொண்டால் அன்றே!.....

ஒப்புக்குக் கூட சுகத்தை
ஒரு போதும் கேட்க்காதிருந்தால்
வெக்கத்தில் தலை குனியும் போது
சில மாற்றங்கள் வந்தே தீரும்...

நட்பல்ல பகையும் அல்ல
நல்லோர்கள் இவர்கள் அல்ல என
நாம் கற்றுத்தான் தேற வேண்டும்
கயவர்கள் எம்முடனே இருந்தால்!...

செய் நன்றிக் கடனைப் பார்த்து
உன் மனதைச் சேதாரம் ஆக்க வேண்டாம்
பொல்லாத கூட்டம் இதனைப்
புறந்  தள்ளி முன்னேறு வாழ்வில் .....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/12/2013

அம்மன் பாடல்கள்!........


நலிந்து கிடக்கும் உள்ளத்தைத்
தட்டி எழுப்பிய துரதிஸ்டம்
அதன் இஸ்டம்போல ஆட்டிவித்தால்
இதயத் துடிப்பு எப்படி இருக்கும்!.....

கணக்கில் இட்டால் தாங்காது பின்
கண்கள் இரண்டும் தூங்காது வரும்
வழக்கில் மட்டும் புலனைச் செலுத்திக் கொண்டால்
வருந்தும் மனம்தான் என்ன செய்யும்.........

மறந்து போக நினைப்பதையே
மறக்க முயன்று தோற்றுப் போகும்
அவரவர் குணத்திற்கேற்ப பாதிப்புகள்
குறைந்த பட்சம் வந்தே தீரும்!......

தவிர்க்க முடியாத் தண்டணை  இதைத்
தவிர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி
அம்மன் துதியே அவ்வழியாகும்
அகிலம் போற்றும் நல்வழியாகும்!.....

சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
சிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....

அரிய பாடல்கள்  இதைக் கேட்டே
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
உரிய முறையில் பயிற்சிகளை ஊட்டி
எம் சந்ததியையும்  வளர்த்திடுவோம்.....




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/11/2013

கலைமகளே நீ கண் திறவாயோ!........



காக்கையும் குயிலும் ஒன்றாகுமா!
வேசம் கலைந்தால் மேலும் நன்றாகுமா!
பாற்கடல் முத்தைத் திருடிய நத்தை
பதுங்கியே செல்வது எதனாலே !!!......

ஆக்கமும் திறனும் அவரவர் சொத்தெனில்
உலகம் போற்றுதல் இங்கே  முறையாகும்
தன்னைத் தேற்றிடக்  களவினைக் கற்றவர் உள்ளமே
நற் கலைகளைத் தெரிந்தே கொல்லும் பெரும் பள்ளமடா!...

ஊக்கமும் முயற்சியும் உள்ளவர் மனங்களை
ஊக்குவிப்பவன் நற் தலைவனடா இங்கும்
முகம் பார்ப்பவன்  ஒருவன் இருந்து விட்டால் போதும்
ஊழ்வினை மட்டுமே  வெல்லுமடா !!!!!!..........................

ஆற்றிட முடியாத் துயரதில் ஒன்று
அடுத்தவர் படைப்பதைத் தன் படைப்பெனக் கேட்டல்
நேற்றிதன் வலியதை  நின்றுணர்ந்ததனால்
நின்மதி எங்கோ துலைந்ததடா ................:( 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.