4/27/2013

சுமை தாங்கிக் கல்லே நீயும் சுகப்பட வேண்டும் இங்கே !


கடமை ஒன்றே வாழ்க்கை என்று
கலங்கிப் போகாதே மனக்
கலக்கத்தாலே  உலகை வெறுத்துக்
கவிதை வடிக்காதே !.................

பழகப் பழக பாலும் புளிக்கும் அங்கே
பகையை வளர்க்காதே மாறாய்
உலகைப் புரிந்து வாழப் பழகு
உன் வாழ்க்கை உனக்கும் தான் இங்கே

கொடுக்கக் கொடுக்க கேட்போர் உள்ளம்
கொலைஞர்கள் வாழும் பள்ளம் அதை
நிறைக்க முயன்றால் நீயும் தோற்பாய்
நிதமும் நாம் கண்டதிந்த உண்மை........

வரவுக்கேற்ற செலவு இல்லாதார்
வருத்தப் பட்டால் என்ன?...!! அவர்கள்
வாங்கும் கடனை அடைப்பதற்க்காக
வாழ்க்கைப் பட்டால் இதில் என்ன நன்மை !....

ஒருவர் முதுகில் பலரது பயணம் இதில்
ஒற்றுமை எங்கே தான் இருக்கு ?.........!!
இதைத் தொடரும் போதே துயரும் பெருகும்
இதை விட்டு வா நீ என்றும் வெளியே.......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/23/2013

பச்சிளங் குழந்தைகளையும் பலி கொள்ளும் பாலியல் வெறியர்களே ஒழிக!...


எத்திசை நோக்கினும் 
இத்துயர் பெருகுதே 
கொற்றவன் குடையிங்கு 
சரிந்து தான் கிடக்குமா !......

பெற்றவள் துடிக்கிறாள் 
பெண் பிள்ளையைக் காத்திட 
இத்தனை ஆயிரம் படைகள் 
இருந்தும் தான் பயன் என்ன !..

சற்றுமோர் பயமின்றிச் 
சரித்திரம் படைத்திடும் 
காமுகக் கூட்டத்தைக்  
கருக்கிட வழி என்ன ?.....!!!!

பெண்ணினம் படும் துயர்
பெருகிடும் இப் புவிதனில் 
அண்ணனும் தம்பியுமான நீர் இங்கு 
அடங்குதல் முறையோ !.................

கண்ணியம் நிறைந்த உறவுகளே 
கல் மழை பொழிந்திடுங்கள் 
தன்னிலை மறந்து மழலைகளையும்
தன் பசி போக்க அழிப்பவர்கள்  மேல் 

புண்ணியம் இதுவென போற்றிடும் இப் 
புவிதனில் உள்ள உயிர்களெல்லாம் !..
அன்னையை மதிப்பவர் எவராயினும் 
அன்பொடு இக் கடமையை நிறைவேற்றிடுங்கள் .......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/18/2013

சிவபுராணம் சொல்லச் சொல்ல சிந்தை மகிழும் தன்னாலே !


உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம்  என்ன செய்வோம் இறைவா சொல் !..

மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம்  தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........

விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ

சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்

தேவர்கள்  படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/07/2013

விடியலைத் தேடும் பறவைகளாய் நாமும் இங்கே.....


பட்டினி கிடந்து மடிந்தாலும்
பத்தியே தீயில் எரிந்தாலும்
சற்றுமோர் கவலையில்லாமல்
சரித்திரம் படைக்குது அநீதியிங்கே !.....

இத்தனை தூரம் உயிர்களுக்கு
இல்லையோர் மதிப்பு உலகினிலே
கற்றவர் மற்றவர் யாவருமே இன்று
கடந்து செல்லும் பாதை எது ?.........!!

அக்கினித் தாண்டவம் ஆடுது மனம்
அவனியில் மனிதனின் செயல் கண்டு
நற் குடி உய்ய வழியுமுண்டோ
நலன் மிகக் கெடுக்கும் பாவிகளால் !.....

கற்பனை சிதையுது எந்நாளும் இதனால்
கனவு போல் இருக்குது வாழ்க்கையிங்கே
எம் துயர் போக்க யார் வருவார்
என ஏங்கிடும் மனங்களை யாரறிவார் ....!!

நித்தமும் பாடும் பாட்டினிலே இதை
நினைவு தான் படுத்துவோம் எந்நாளுமிங்கே
கேட்ப்பவர் மனமது இளகும் என்றால் சில
கேள்விக்குப் பதிலாய் நாமிருப்போம்

குளிர் காற்றிலும் பனியிலும் நீதி கேட்டு தம்
குரல் வளை அதிர அழும் உறவுகள் முன்
எம் பணியிதனையும்  நாம் தொடர்வோம்
எழுது கோலின்  வல்லமை துலங்கும் வரை !....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

வேல் கொண்டு வா இங்கே வேலவா


கொத்துக் கொத்தாக   உயிர்களைக்
கொன்று தின்னும் மிருகம் ஒன்று இங்கே
பல லட்சம் மக்களின் கண்ணீரில் தான்
பகலும் இரவும் குளிக்குது அது என்றும் !.......

இதை விட்டு வைத்தாய்
இறைவா சொல்  ஏன் !....
விடியலைத் தேடும் மனிதர்களின்
விழிகள் பிதுங்கிப் போகுதே இன்னும் !

ஒரு முறை பூமியை உற்று நோக்காயோ
ஒவ்வொரு உயிர்களும் படும் துயரறியாயோ
தினசரி தீபத்தை ஏற்றி வைத்தோம் நீ எத்
திசையினில் வருவாய் எனக் காத்து நின்றோம்

இடியது வீழ்ந்து சருகாமும் எங்கள்
இதையத்தைக் குமுற வைக்காதே
கட கட கடவென இப்போதே நாம் கண்டிட
அதன் எலும்பெல்லாம் உடைத்தெறிவாய்

ஒரு மொழியது  உயிர்களை இழப்பது 
இது தகுமென  இங்கு நினைப்பவனா  நீ.....
எம் செம்மொழி காத்திடும் தேவனே உன்றன்
சந்நிதி அதனுள் சரண் புகுந்தோம் ...........

அரக்கரைக்   கொன்று தேவர்களைக் காத்தவா
அருள் புரிய வேண்டும் இக்கணமே  !..............
மரக்கும் எம் மனம் மகிழ்ந்து உனைப் பாட
எமக்கொரு வரத்தை அளித்திட வா முருகா.......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/06/2013

இவைகள் ஆவிகளா அல்லது பாவிகளா....


செருப்பு மாலை அணிவித்து
விளக்கு மாறால் பூஜை செய்து
எரித்த பின்னாலும் பிணமது நடந்து வந்து
எப்படி மீண்டும் சிரிக்கின்றது ?.............!!!!

பகட்டு வாழ்வில் இத்தனை சுகமா
இதற்கென பயிற்சி வேறு எடுத்திருப்பார்களோ?....!!
நினைத்துப் பார்க்கவே வரும் அருவருப்பால்
நெஞ்சுக் குழியில் நீர் வற்றிப் போகுது

அழுத்தமான எச் செயலும்
அரக்கர்கள் வாழ்வில் சுணைக்காதா ?...!
கொடுத்து வைத்த பிறவிகளப்பா
இவைகளுக்கு கவலைகள் என்பதே தெரியாது

அடுத்தவன் உயிரைப் பறிப்பவனுக்கு
ஆண்டவன் கொடுக்கும் தண்டணை என்ன?....!
விரைந்ததைக் கொடுக்க மாட்டானா சில
விடியலை இங்கே காட்டானா ?............!!!!!

மருத்து நீர் வைத்து குளித்த அன்றே
என் மனதினில் எழுந்த கேள்வியிது
அடக்கிட முயன்றும் இன்று தோற்று விட்டேன்
அது தான் இன்று வந்த செய்தி கண்டு .....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/05/2013

ஏழைகள் நாங்களும் மனிதர்கள் தான் ஐயா .....


போகுமிடம் எல்லாம் வெறும்
துன்பமும் துயரமும் தான்
இங்கு நின்மதி தேடித் தான்
அலையுது எம் மனம் தான் ....

கூடும் ஒரு வகைக்
காற்றினில் குலையுது
குருவியும் தன் வழி
தவறியே பறக்குது !.....

காணும் கனவுகள்
பொய்யாய் போவதால்
கண்வழி துயரங்கள்
கரைந்தே ஓடுது !!........

ஏறும் விலை வாசியே
நீ இறங்க மாட்டாயா? ....!!
ஏழைகள் எமக்காகவேனும்
கொஞ்சம் உறங்க  மாட்டாயா !......

எந்நாளும் வளர்ந்திடும் நாகரீகமே
உன்னால் நாம் படும் துயரம் போதும்  போதுமே
காடும் தரும் சுகம் அதைக் கூட தேடி
அழித்திங்கு எம்மைத் தெருவில் விட்டாய் ஏன் ?...!!!

ஏரைப் பிடிப்பவன்  வருந்துகின்றான் எந்நாளும்
ஏமாற்றிப் பிழைப்பவன் சிரிக்கின்றான்
யாரை யார் தான் நோவதிங்கே மனம்
நசுங்கிப்  போகுது தேரை போல !


வாழும் உரிமைகள் இங்கு எமக்கில்லையா...!!!!!
பெரும் வசதிகள் படைத்தவர்களே சொல்லுங்கள் ஐயா ?....!
காரில் போவதில் ஒன்றும் தவறில்லை  எம்மை இங்கு
காறித்  துப்பும் நிலைக்குத் தள்ளாதீர்கள் !..........

நோட்டுக் கட்டுகளுக்கு நடுவினிலே என்றும்
நோகாமல் படுத்துறங்கும் உங்களுக்கு
கூலிக் காரன் படும் துன்பம் புரிந்திருந்தால்
மனம் கூசாமல் விலை வாசியை ஏற்றுவீர்களா!....

காட்டை அழித்து நாட்டை அழித்து
வீட்டைக் கட்டி ஏசியைப் போடுங்கள்
ஓட்டுப் போட்ட குற்றத்துக்காக எம்முயிர்
ஓலம் போட்டே  இங்கு மடியட்டும் !.................. 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/04/2013

நான் தானுங்க கவிஞர் வைரமுத்துவையே அறிமுகம் செய்த நான் ஹி ..ஹி ...


எதிர்ப்பதைப் போல் எதிர்ப்பார் !
எல்லா உடைகளையும் தான் அணிவார்
கருத்துக்கள் சொல்லும் போது மட்டும் ஏனண்ணே
கண்ணுக்கு பட்டதெல்லாம் தப்பாய் தெரிகிறது !...

பெயரில்  தான் மயிலிருக்கு உன்னிடத்தில்
பெருமை கொள்ள என்ன இருக்கு !............
ஆடக் கற்கும் முன்னரே பிறரை
ஆட்டிப் படைக்க நினைப்பது தப்பில்லையா ?...!

ஒப்பற்ற பண்பாளன் ஒரு போதும் தன்
ஒழுக்கத்தை மறந்தென்றும் பேச மாட்டான்
தப்பாக நீ பேசக் காரணம்  வேறொன்றும் இல்லை
தலைமைப் பொறுப்பு இன்று உன்னிடத்திலில்லையே

இந்த நப்பாசை உனக்குள்ளே உள்ளவரை
எந்நாளும் நள் இருட்டுக்கு  நீ தான் ஏற்ற துணை !..........
தப்பாட்டம் ஆடாதே இங்கு முடிந்தவரை
தானாக வளர்வோர்க்கே  என்றும் துணையாக நிற்பது போல!...

உன் கொப்பாட்டான் முப்பாட்டன் பெயரைச் சொல்லி
இனியேனும் கொலை வெறியாட்டம் ஆடாதே வெகுளி போல
தப்பாகத் தான் போகும் இந்த வாழ்க்கை மேலும்
தரம் உள்ளோரின்  செவிக்குள்ளே ஊற்றும் பாணியாலே.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/03/2013

கவச குண்டலங்கள்....


கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை ........

தனன னானே னானே
தனன னானே னானே
தனன னானே னானனனே
தன தனன னனனே
தன னனனே
தானே னானே
தானன்னன்னே

உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல  தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை ...

                        (கவச குண்டலங்கள்)

மெழுகில்  திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை

மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?...
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை
                          (கவச குண்டலங்கள்)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.