5/26/2013

மறக்க முடியாத நினைவு


மறக்க முடியாத நினைவு இதை
மறந்து தானாக வேண்டும்
பிரிக்க முடியாத உறவு இதைப்
பிரிந்து தானாக வேண்டும் என
எடுக்கும் முடிவால்
இதயம் வலிக்கும்
இதையும் அறிவார் யாரோ !.............
பொருள் கொடுத்து வாங்கு
பணம் கொடுத்து வாங்கு என்றும்
உயிரை வாங்காதே .....................

                          மறக்க முடியாத நினைவு

மனதின் நினைவை
அழிக்கும் போது
மலர்கள் தாங்காது
உயிர் துடிக்கும் துடிப்பில்
உனது நினைப்பும் பெருகும் ஓயாது ....

அழுது புலம்பும்
இதயம் அதற்க்கு
அமைதி இருக்காது
அது எடுக்கும் முடிவில்
துயரம் இருக்கும்
எதையும் நினைக்காது ........

                        ( மறக்க முடியாத நினைவு)
கடலின் ஆழம்
உனக்குத் தெரியும்
உன் கணக்குப் பிழைக்காது
அட இவளின் மனதை உணரத் தெரிந்தால்
இதுவும் நடக்காது ................

உயிர் உயிரை வதைக்கும்
கொடிய நோயே
காதல் தான் இங்கே
இந்த விதியின் சதியை
உலகம் உணர்ந்தால்
மோதல் ஏனிங்கே ?...!!
                             
                       ( மறக்க முடியாத நினைவு)
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/19/2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா !


மலரிலும் மெல்லிய
மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு என்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட நற்
கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி


இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துங்கள் உறவுகளே
அந்த வாழ்த்தொன்றே போதுமிங்கே !!தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/15/2013

தூக்குத் தண்டணை இவர்களுக்குத் தான் பொருத்தம்குடித்து விட்டு வாகனத்தை ஓட்டாதே உன்றன்
கொலைவெறியை மக்கள் மீது காட்டாதே.......
துடிக்கும் அந்த இதயமதைப் பார்த்தாயா ?.......!!
ஏய் துஷ்ரனே உன் குணத்தை மாற்றாயா ?...!!

அடுக்கடுக்காய் சாலைகளில் விபத்துக்கள்
அதைத் தடுக்க வழியிருந்தால் சொல்லுங்கள்
நடுத் தெருவில் கிடக்கும் அந்தப் பிணங்களை
நாம் கடந்து செல்லும் போது மனம் வலிக்கிறதே :(

கண்மணிகள் போல் வளர்த்த எம் செல்வங்களைக்
கட்டையிலே வைதெரிக்க மனம் வருமா ?......
உண்மையிலே நான்   அழுகின்றேன்   இந்நாளில்
இரண்டு உடல் கிடந்த கிடையதனை என்ன சொல்ல :((

வெண்ணிலவும் குளிர இங்கே மறுக்கின்றதே
விடிய விடிய அதே நினைவு வந்து வாட்டுகின்றதே
என்ன  ஓர் ஓட்டமிங்கே வாகனங்கள் .........................!!!!
எவர் உயிரை எவர் நினைத்தார் இவ்வேளையிலே .....

பன்மடங்கு தண்டணைகள் வேண்டுமிங்கே
பாழாய் போன குடிகார சாரதிகளுக்கு
இன்னுயிரைப் பறித்ததற்குத் தண்டணையாய்
இத்தனை நாள் சிறைவாசம் என்றால் அது போதுமா?..


இன்று இது யாருக்கோ நாளை இது எமக்காகவும்........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/09/2013

சுமைதாங்கி ஏன் இன்றும் அழுகின்றது..!


நற் குணம் நிறைந்த மாந்தர்களா
நன்னெறி தவறி நடந்திடுவார்?.....!!!!
நரிகளின் கூற்றினைக் கேட்டவுடன்
நம்மவர் படும் துயர் புரிகிறது ........

வலிகளை மறைத்திட முடியாமல்
வருந்திடும் உள்ளங்கள் தான் இங்கே
அவரவர் எண்ணம் போல் ஆட்டிவிக்க
அவஸ்த்தையும் படுகிறார் எந்நாளும் .....

உறவொன்றை மாற்றிட நினைப்பவர்க்கு
உகந்த நல் ஆயுதம் பொய்யொன்று தான்
இதை விட கொடியதோர் தண்டணையை
இவ்வுலகினில் பெண்களுக்கு யார் தருவார் ?..!!

திருமண வாழ்க்கையே இன்று சங்கடம் தான்
தித்திக்கும் வாழ்வென்றிதனை யார் சொல்லுவார் ?...
அறுபதைத் தாண்டியும் தகராறென்றால் அதை
அழுத்தமாய் சொல்லவும் இங்கு வார்த்தைகள் இல்லை!...

மண முறிவென்பது அவரவர்
மனங்களைப் பொறுத்தது இங்கும் நற்
குணம் குறி தவறாமல் பெண் தன்
குலத்தினைக்  காப்பதே நல்லது .......

பகைவர்கள் தம் போக்கினில் சென்றாலும்  என்றும் 
பழி சொல்லும் வழிமுறைகளைக் கைவிட வேண்டும் 
பெண் ஒரு முறை கெட்ட பெயர் கேட்டு விட்டால் 
அவள் இந்த உலகினில் வாழ்வதில் அர்த்தமில்லை ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/07/2013

இப்படியே போனால் ஒரு நாடு என்னாகும் !...பால் போன்ற நெஞ்சும்
சிலைதைப் பகிர்ந்திட இங்கே அஞ்சும்
தேள் போன்ற மனத்தவர்களின்
தேவைகள் சொன்னால் துயர் மிஞ்சும் !...

கால் மீது கால் போட்டுக்
காலத்தைக் கழிப்பதற்கு
ஊழல் தான் பெருந் துணையாம்
ஊர் போற்றும் சில மனிதரிங்கே!....

வாள் மீது வைத்த நம்பிக்கை
வாழ்க்கைக்குக் கை கொடுத்தாலும்
வீழ்கின்ற போது அறிவாரே
வீணாகிப் போனவர்கள் விட்ட கண்ணீரை....

ஊரெல்லாம் பெரும் விபத்து
ஊர்திகளால் வந்த தத்து  
காசாலே மறையுதப்பா
காலத்தின் கொடுமையைப் பார் !.....

தார் போட்ட தரையிதென்று  பிறர்
தலை மேலே தொப்பி போட்டு
கூட்டாக அடிச்ச சொத்து அவர்கள்
கூத்தியாளின் பெயரில் இன்றும்

உள்ளூரில் நடக்கும் களவு
உலகுக்குத்  தெரிந்தால்  கூட
கண் மூடி பூனை போல செய்த 
களவைத் தான் செய்கின்றார்கள் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/06/2013

நீ நீயாக இருந்தால் தான் நிம்மதி பெறுவாய்நல்லதை  நினைத்தார்
நல்லதையே  பேசினார்
நல்லதே நடக்கும் என்றிருந்தார் சில
நல்வர்களும் இங்கே கூடிப் பழகினார்

வில்லங்கமும் வந்தது
விடை சொல்லச் சொன்னது
விரும்பாத அதன் செயலைக் கண்டு
விலகித் தான் போனார் !......

அல்லல்கள் கொடுத்தனர்
அவதியுற வைத்தனர்
அவலத்தின் மத்தியில்
அழுதும் தான் பார்த்தார் !.....

சில்வண்டு போல சிதைந்தாரேயொளிய
சிறப்பான வாழ்வதனை யார் தான்
சிறப்பித்துப் பார்க்க நினைத்தார்!.. ஏனோ எம்
சிந்தனையை வாட்டுதிங்கே இந்த நினைவு!...

கந்தனுக்கு வந்த கதி
கவலையிங்கே அளித்தாலும்
கர்வம் கொண்ட சிலரைப் பற்றி
கருத்தொன்றும்  சொல்ல வேண்டும்

சிந்தையிலே ஆயிரம் தான்
சிறப்பான நற் குணமிருந்தாலும்
சிலரிடத்தில் மாட்டிக் கொண்டால்
சிதைந்து விடும் எம் வாழ்வும்!..

இந்த விதி மாறிடவே
இரக்கமற்ற அந்த மனிதர்களை
இருந்த இடம் தெரியாமல்
இப்படியே மறப்பது தான் நன்று ...

ஒழுக்கமற்றவர்களின் கேள்விக்கெல்லாம் 
விடை தேடி அலைவது தற்கொலைக்குச் சமன்.   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/02/2013

மூன்று முடிச்சதனால் உயிர் மூச்சை நிறுத்தாதே


அடித்து உடைத்து
நொருங்கிய இதையம்
மீண்டும் துடித்து எழுந்து
தொடருது அதன் பயணம் !.......

படித்த படிப்பு மறந்திடலாம்
பகைவர்கள் எமக்குத் துயர் தரலாம்
நாம் எடுத்த பிறப்பு எதற்கென்று
எண்ணிப் பார்த்தால் விடிவுண்டு ...

உடல் சுகத்தை நினைத்தால்
ஆண்  துணை வேண்டும்
மன சுகத்தை நினைத்தால் நல்
மனங்கள்  தான் வேண்டும்

தொடுத்த விலங்கது துயர்  தந்தாலும்
தொடரும் பயணம் தடையின்றிப் பெண்
பணத்தைக் கொடுத்தும் அழியப் பிறந்தவளல்ல
பண்பு குறைந்த இவ்வுலகினிலே !...................

அழுத்தமான மனம் வேண்டும் இங்கு
அம்மா தன்னைத் தேற்றிட  வேண்டும்
வருத்தப் பட்டு மனம் சோர்ந்து விட்டால்
வருந்தும் மழலைகளுக்கு யார் துணை வருவார் ...

பொருத்தமற்ற திருமண வாழ்வால்
பொய்யாய்ப் போகும் பெண்களின் வாழ்கை
கருத்த மேகம் போலிருந்தாலும் அவள் தன்
கடமை தவறாத தாயுமாவாள் !..................... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.