6/30/2013

வாக்குச் சுத்தம் தான் பெரிது வளமாய் என்றும் வாழ்வதற்கு

என்றன்  செயலதை உன்றன்  செயலதாய்
எடுத்துரைக்கும் அறிவிலியே
உன்றன்  செயலின் திறன் காட்டி
உண்மையுடுடன் நடந்தால் என்ன ?..!!

வன் செயலினால்  எந்நாளும்
வளம் பெருக்கும் உன்றன் குடி
வலி தாங்கிய இதயத்தால்
வலுவிழந்து போகும் ஒரு நாள்

மண் திண்டு போகும் உடலை
மறவால் அலங்கரித்துக்
கண்கட்டி வித்தை காட்டும்
கயவர் தமக்கும் புரியும் புரியும்

வாழ்க்கை என்னும் சக்கரத்திலே
வாக்கு என்பதே முக்கியம்- அதைத்
தாக்கி அழித்து வாழ்ந்தவர்  போல்
தாழ்ந்த குலத்தினர் யாருமில்லை

காக்க மறந்த நன்னெறியைக்
காலம் உணர்த்தும் அப்போது
தேக்கு மரத்தைப் புகழ்ந்த நாவும்
தேடிக் கழிக்கும் உன்றன் குணத்தை ....

வாக்குச் சுத்தம் நிறைந்தவர்க்கே
வாழ்க்கை என்றும் இனித்திருக்கும்
துயர் போக்கும் மனதைப் பெற்றுவிட்டால்
துன்பம் கூட  விலகி நிற்கும் ............

ஆக்கத் திறனால் உயர்ந்து என்றும்
ஆலய மணிபோல் நீ விழங்கு பிறரது
தூக்கம் கெடுக்கும் குணம் எதற்கு
தூய குணமே மனிதனுக்கழகு ........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/26/2013

வையகம் போற்றிட வாழ்ந்து காட்டு நீ கோழையல்ல


மனைவியின் மனதைப் பாரார்
மக்களின் பசியைப் பாரார்
தமதின்பம் ஒன்றே போற்றும்
தாழ்ந்தவர்க்கேது பாசம் ?........

தினசரி பொய்யில் வாழும்
தீயவர் நட்பிற்க்கிணையாய்
உலகினில் துன்பம் ஏது ?....!!
உருப்படாது இந்த வாழ்வு

மலர்களைக் கொய்யும் குரங்கை
மாலைக்குக் காவல் வைத்தால்
அது அது அதன் குணத்தை
அகற்றியா வாழ நினைக்கும்.....

பொறுமையில் பூமாதேவி பிறர்
போற்றிட வாழும் ஞானி
உலகினில் எவராயிருப்பினும்
நல்லொழுக்கத்தைத் தானே மதிப்பர்

குணமது குன்றிப் போன
குப்பையை வாழ்க்கைத் துணையாய்
நிரந்தர வாழ்வில் இணைத்தால்
நின்மதி கேள்விக் குறிதான் .

உனதுயிர் உனக்கே சொந்தம்
உடலதும் உனக்கே சொந்தம்
முடிவுகள் தவறெனத் தெரிந்ததும்
உயிர் மூச்சை நீ விடுவதால் என்ன பயன் ?... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/20/2013

உயிரே என் உயிரின் உயிரே...


உயிரே.....என் உயிரின் உயிரே
உணர்வும் நீயே வந்து விடு
நீயே வந்து விடு ........
இந்தத் தனிமை கொடுமை
கொடுமை இதனைக் கொன்று விடு
நீயே கொன்று விடு ...............

                   (உயிரே என் உயிரின் உயிரே...)
ஏழிசையில்  கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ
வந்ததென்ன ...¨

அந்த உறவைக் கலைத்து நம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....
அன்பே சென்றதென்ன .....

                        (உயிரே என் உயிரின் உயிரே...)

மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம் அதை
அறிய வேண்டும் அன்பே வா ....
ஒரு மெழுகைப்போல
 நீ உருகிப் போக 
என்னுள்ளம் பதறிப் போகும்
அன்பே வா ..........

அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா ...............

                              (உயிரே என் உயிரின் உயிரே...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2013

சிவ சிவ என்றிட சிந்தையும் மகிழ்ந்திடும்


எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......

தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........

வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்

மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய் 

பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/03/2013

உனக்கும் ஞானம் பிறக்கும்


பல்கிப் பெருகிய அறிவின் வளம்
பாடாய் படுத்துதோ மனிதா சொல் ?...
கல்விக் கனியைச் சுவைக்கும் முன் உன் போல்
கயவர் எவரும் இருக்கவில்லை !!!...............

இலையைக் குழையைத் தரித்தாலும்
இதயத் தூய்மை உடையவனாய்
மனிதன் வாழ்ந்த வாழ்க்கை எங்கே
மறைந்தே போனது போனதிங்கே ....

அறிவின் வளர்ச்சி அன்பைத் தான்
அகழ்ந்து பார்க்க உதவிடுமே
அனைத்தும் கற்ற பின்னாலே நீ
அகத்தின் தூய்மை இழந்தாய் ஏன் ?...!!

மதத்தின் பெயரால் இனவெறியை
மறைவாய் தூண்டும் உனக்கெல்லாம்
இந்த யுகத்தில் ஏது மன்னிப்பு
இருளே சூழக் கடவாய் போ .............

இடித்து நொறுக்கிய சிலை(கள் ) கண்டு
இடிந்து போன மனங்களின்று
வடித்த கண்ணீர் காய்வதற்குள் உன்னிடம்
வந்து சேரும் துயர்தனை எண்ணிப் பார்......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.