8/31/2013

ஏழைகளின் வயிறு எரிந்தால் இனி இறைவன் கூடத் தப்ப முடியாது"கலி" யாணமாம் "கலி" யாணமாம்
கலி யாணமாம் .................!
கலி முத்திப் போன இந்நாளில் 
ஊர்வலமாம்..............................!!!!!!!!!! 

அறியாத பருவத்தில் தப்புப் பண்ணி 
அடைந்தாளே தன் துணையைத்தான் எங்கள் ஜிம்மி !
தெருவெல்லாம் கொண்டாட்டம் நாயணங்கள் 
திரை மறைவிலே மினிஸ்ரரின் வாழ்த்துரைகள் .....!!!!

கருவாட்டுக் குழம்போடு எலும்பும் வைத்துக் 
கனிமூனைக் கொண்டாடும் நாய்களுக்குத்  
துணையாக நிக்குது கூலிப் படை ........... 
விரைவில் குட்டியைப் போட்டிங்கே தந்திடணும்

இரவெல்லாம் தூக்கத்தைத் துறந்த நாய்கள் 
இது போல இன்பத்தைக் கண்டதில்லை 
மலர்(கள் ) போட்ட பஞ்சணை மீதினிலே 
மடிசாரு கட்டிய நாயினைப் பார் ........!!!!!


தெருவோரம் தூங்கிடும் எங்களுக்கோர் 
நற் திசையைத் தான் காட்டிட யாருமில்லை 
கொசுவெல்லாம் கொண்டாடும் எங்கள் வாழ்க்கை 
கொடியதோர் மரணத்தின் கைகளிலே.......... 

நடமாடும் பிணமாக நாம் நிற்கையில் 
நம் நாட்டு நாய்களின் கூத்தைப் பாரு ....!!!!!
அழியாதோ இவ்வுலகம் தான் அழியாதோ என 
அடி வயிறெல்லாம் பத்தித் தான் எரியுதிங்கே......

குடிகாரன் பேச்சைப் போல் வாக்குறுதி 
குப்பைக்குள் கிடக்குது வெகுநாள் கருகி 
அடிமாடு போலெங்கள் நெஞ்சினிலே 
அடி வாங்கிக் களைத்தது தான் மிச்சமிங்கே ....

புதிதாக நாம் சொல்ல என்னவுண்டு 
புரியாதார் காதுகளில் ஊரும் வண்டாய் 
இது கூடத் தீமைக்கே வழி வகுக்கும் 
எங்கள் இரங்கல்ப் பா எப்போது காதுகளில் கேட்க்கும்?...!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/27/2013

குப்பையில் தூக்கிப் போட்டாலும் குண்டு மணி மங்காது நான் தமிழிச்சிடா


உழவர் குலத்தில் பிறந்த எமக்கு
உலகம் முழுக்க மதிப்பு இருக்கு
களவு பொய்யைக் களைந்து வாழும்
கருணை நிறைந்த இதயமதானால் !

வரவு செலவு பார்த்ததில்லை என்றுமே
வடித்துக் கொட்டும் உணவு அதற்க்கு
உடலை வளைத்து வேலை செய்யும்
உறுதியான மனத்தின் உயர்வு

கடலை மலையைத் தாண்டி நிற்கும்
கதிரைப் போல பயனும் அளிக்கும்
உழவர் குலத்தின் வாழ்வின் சிறப்பை
உறுத்தலின்றி நல் மனமும் ஏற்கும்

பூமித் தாயை மதிக்கும் எமக்குப்
பூகம்பத்தைப் பிடிக்காது மனம்
சாமிக்குத்தான் அடிமையாகும்
சாத்தானுக்கு கிடையாது ............

வேதம் ஓதும் நாவின் முன்னே சில
வேடிக்கைகள் நீ செய்தால் அதைத்
தாங்கிக் கொள்ளும் சக்தியிருக்குத்
தானாய் சண்டை கிளம்பாது

நாதியத்த உயிர்கள் வாழ்வை
நாசம் செய்ய நினைப்பவர் முன்
உயிரைக் கொடுத்தும் உழவன் காப்பான்
உனக்கு இதுவும் புரியாது ....................

அமைதியாக வாழும் மனத்தில் உன் 
அரசியலைக் காட்டாதே என்றும் 
தமிழை உயிராய் மதிக்கும் எம் முன் 
தடங்கல் போட  நினைக்காதே ............

ஒன்றைக் கொடுத்து இரண்டைப் பறிக்கும்
ஒழுக்கமற்ற உன் குணத்தைக்
கண்டு கொள்ளும் காலம் வரும்
களவு என்றும்  நிலைக்காது .......!!!!!!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/21/2013

கழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை !!கழுகினைப்  போல் காத்திருந்து
கண்களிரண்டும் பூத்திருந்து
அருந்தும் இரத்தம் ஒன்றே சொர்க்கம்
என அறிந்தவர்க்கு ஏது துக்கம் !!........

வலையில் வீழும் குஞ்சினத்தில்
வண்ண நிறம் அது எதற்கு ?......
எலும்பும் சதையும் போதுமிங்கே
எச்சில் ஊறத் தின்பதற்கு ............

கொழு கொளுத்த கழுகினைத் தான்
கொத்தித் தின்ன யாருமில்லைப்
பரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்
பரிகசிக்குது இது தான் கூத்து ................!!!!

அறிவிழந்த கழுகுக்கென்றும்
அடுத்தடுத் துன்பம் வந்தால்
தெரிந்து கொள்ளும் எங்கள் துயரைத்
தெரிவிப்பவர் யார் தான் இங்கே  ..........!!!!

மது மயக்கம் மனதை மயக்க
மதியிழந்து இட்ட கருத்தால்
கொதி கொதித்துப் போனது உள்ளம் இந்தக்
கொலைக் களம் தான் மாறுவதெப்போ ...!!

அருவருப்பாய் பெண்ணினத்தை
அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத் 
தொழுவத்திலே கட்டி வைத்துத்
தோலுரிக்க வேண்டுமிங்கே ...............  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/17/2013

திருந்தாத ஜென்மங்களுடன் இருந்தென்ன லாபம்


கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தேன்
உனக்கும் எனக்குமான ஒற்றுமை என்பது
கேள்விக் குறிகளாய் தான் தொடர்கிறது இன்னமும்
முற்றுப் புள்ளிகளைத் தகர்த்தெறிந்த வண்ணம்...!!

ஆயிரம் தலைமுறைகள் தாண்டினாலும்
ஆதவன் தன்னொளி இழந்தாலும் கூட
சேரவே சேராது இந்த உறவென்று மனம்
செதுக்கியே செல்கிறது பல சுவடுகளை

பாதகம் புரிவோரின் நெஞ்சமதைப்
பகைத்திடத் துடித்திடும் மனமிதற்கு
தீதெனத் தெரிந்திடும்  உனதுறவைத்
தேர்ந்திடல் தகுமோ நல் வாழ்வினிலே

வேரொடு அழித்திடத் தான் துடிக்கும்
வெண்ணிற ஆடையைத் தான் விரும்பும்
ஊரவர் நலந்தனைக் கெடுக்குமுந்தன்
உறவதை இங்கே யார் மதிப்பார் ............

பாரினில் இது போல் பெண்களெல்லாம்
பகைத்திடத் துடித்தால் போதுமிங்கே
வாழ்வில்லை இவன் போல் கொடியவர்க்கு
வரையறு பெண்ணே உன்றன்  வாழ்வெதற்கு ?..!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/12/2013

சட்டெனெ எடுத்துப் பொட்டென வையுங்க முடிந்தது கதைஅற்ப ஆசைகள் மனத்தைக் குடைய
அழைப்பு மணியைத் தொடுக்கின்றார்
வெக்கமின்றி முன் பின் தெரியா
பெண்களைப் பேசச் சொல்கின்றார் .....!!

விக்கித் தக்கி சில வார்த்தைகள்  பேசி
விரட்டியடிக்க முயன்றதுமே
சுற்றி வளைத்து வேறோர் பெயரில்
சிலுமிசம் செய்து பார்க்கின்றார்

அர்த்தமற்ற இதுபோல் அழைப்பால்
அவதியுறும் உறவுகளே சில
கட்டுப்பாட்டை நாம் மீறாதிருக்கக்
கற்றுக் கொண்டால் போதுமிங்கே

தொழில் நுட்பம் பெருகிக் கிடக்கும் உலகில் சில
தொல்லைகள் தீர்க்கவும் வழியுமுண்டு இதைத்
துணையாய் இணைத்து வரும் வினையை வெல்வோம்
துன்பம் இங்கே எமக்கெதற்கு ?.......................

கண்ணைக் கசக்கும் நிலைக்கு எங்கள்
கவனம் சிதறிப் போகாமல் எம்
மண்ணை மதிக்கும் மனத்தை அறிந்து
மனம் போல் பேசி மகிழ்வோமே ............

அசடு வழியும் மனத்தை நாம் ஏன்
அலசிப் பார்க்க வேண்டுமிங்கே
தெரியாதொருவர் அழைப்பை விடுத்தால்
தெளிவாய் தொடர்பைத் துண்டிப்போம் .
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.