6/13/2014

பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே


சத்தியத்தைப் புறக்கணிக்கும் மானிட வாழ்வு
சாக்கடையில் தான் மிதக்கும் மூடரே  கேளீர்!
வித்தைகளை யாம் படித்து வெற்றி கொள்ளலாம்
வென்ற வெற்றி தோல்விதனைத் தழுவிச் செல்லலாம் !

மட்டமான நினைப்புளால்  மரணம் கிட்டலாம்!
மாறு வேடம் போட்ட உண்மை மனத்தைக் கொல்லலாம்!
திட்டமிடும் சதிச் செயலால் சக்தி இழக்கலாம் உயர்
தீமைகளே வாழ்நாளை அலங்கரிக்கலாம்!

உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமா!
ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமா!
கொத்த வரும் பாம்பிற்கும்  தீங்கு நினையாதார்
கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ!

பத்துமாதம் சுமந்து அன்னை பெத்தெடுக்கிறாள்
பகலிரவாய்க் காத்தும்  எம்மை வளர்த்து விடுகிறாள்
எத்தனையோ கனவு சுமந்து ஏங்கித் தவிக்கிறாள்
எதிரிகளின் கண் படாமல் மறைத்தும் வைக்கிறாள்

பெத்தவளின் மனம் துடிக்கக் காவு கொள்வீரோ!
போதையினால் அறிவிழந்த மூடர் தாம் இங்கே
வெற்றியென நினைத்ததெல்லாம் வெற்றியுமல்ல
வேண்டி நிற்கும் ஆசைகளும் அழியுமே மெல்ல!

இன்றுணர மறுக்க வைக்கும் இளமையும் சாகும்!
அன்று துயர் கொன்று தமை ஆட்டியும் படைக்கும்!
என்றொருவர் அழிவை எண்ணிக்  குழி பறித்தீரோ
அன்று முதல் காத்திருப்பீர்  அக் குழி வரவேற்கும்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. வணக்கம்
    மண்வெட்டியை சிலர் கையில் எடுப்பார் அது தன்பக்கம் திரும்பி இருக்கு என்று தான்அறியமாட்டர்
    மிக அருமையாக சொல்லியுளள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பொட்டில் அடித்தாற்போல
    ஆணித்தரமான கருத்துக்களுடன்
    கவிதை மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமோ
    ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமோ!!
    கொத்த வரும் பாம்பிற்கும் தீங்கு நினையாதார்
    கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ ! சரியாக சொன்னீர்கள் தோழி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. அருமை அம்மா...

    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி. (923)

    ReplyDelete
  6. உண்மையான வரிகள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  7. போதையினால் அறிவிழந்த மூடரைவிட பேதையினால் அறிவிழந்த மூடர்தான் அதிகம்

    ReplyDelete
  8. மிருகங்களாகி விட்ட மாந்தர்கள்! கடும் சட்டங்கள் மட்டும் கட்டுப்படுத்த முடியும்!

    ReplyDelete
  9. "மட்டமான நினைப்புக்களால் மரணம் கிட்டலாம்" என்ற
    வழிகாட்டல் உண்மை தான்!

    எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  10. நல்ல அறிவுரை.....

    த.ம. +1

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........