உழைக்கும் மக்கள் வாழ்வுயர
ஒன்று சேருவோம் நாங்கள்
ஒற்றுமையாய் நின்றுலகில்
வெற்றி காணுவோம் .....
அடுக்கடுக்காய் உயருகின்றான் அரசியல்வாதி
அடிமைப் பட்ட ஏழைகளின் உழைப்பையே நம்பி
பிணத்து மேல நடந்ததெல்லாம் போதுமடா சாமி
பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...
மரத்துக்கும் மனிதனுக்கும் பேதமுண்டடா
மாசு பட்ட சிலருக்கு எல்லாம் ஒன்றடா....
இனத்துவேசம் காட்டிக் காட்டி வெட்டி எறிவார்
ஈன்றெடுத்த தாய் மண்ணைத் தட்டிப் பறிப்பார் ....
நடத்தை கெட்ட நாய்களுக்குப் புத்தியும் இல்லை
நம்பி நம்பி வாழ்வோர்க்குச் சக்தியும் இல்லை
குடத்துக்குள் எரியுதடா குத்து விளக்கு
கோவப் பட்டால் வந்திடுமே அந்த வழக்கு ...
படிச்சவனும் ஏமாந்து பல்ல இழிக்கின்றான்
பழக்க தோஷம் மாறாமல் கொல்ல நினைக்கின்றான் !
இனத்துக்குள் பாவப் பட்ட எம்மினத்தைப் பாரு
இரக்கமுண்டெல் எம்முடனே நீயும் வந்து செரு ....
தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும்
அநியாயம் செய்வோரை எதிர்த்திட வேண்டும்
ஆண்டாண்டு காலமாக நலன் பெற வேண்டும் ....
கலியுகத்தில் இதுவும் கடந்து போகும்....
(படங்கள் :இணையத்தில் பெற்றுக் கொண்டது .நன்றி )
சிறப்புக் கவிதை மிக மிகச் சிறப்பு
ReplyDeleteமே தின நல்வாழ்த்துக்கள்
தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
ReplyDeleteதோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும்//
அருமையான கவிதை.
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.
வாழ்த்துக்கள்.
சிறுவர் தொழிலாளர் வேண்டாம்.
பக்தி உள்ளத்திலும்
ReplyDeleteபாய்ந்து ஓடும்
சிவப்புச் சிந்தனைகள்!
மே தினம்! வாழ்த்துக்கள்!
த.ம.3
தொழிலாளிகளுக்கான கவிதையும், படங்களும் அருமை.
ReplyDeleteஅதிலும்
"//பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...//" - அருமை . அருமை.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய நாளுக்கான சிறப்புக் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
ReplyDeleteமே தின நல்வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதை.
ReplyDeleteமே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் வாழ்வுயர
ReplyDeleteஒன்று சேருவோம் - நாங்கள்
ஒற்றுமையாய் நின்றுலகில்
வெற்றி காணுவோம்!..
மே தின நல்வாழ்த்துக்கள்..
"தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
ReplyDeleteதோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும்" என்ற உண்மையை வெளிப்படுத்தியதில் கவிதை சிறந்து விளங்குகிறது.
உழைப்பின் மகத்துவம் புரியவேண்டும்
ReplyDeleteஒற்றுமையும் வெற்றியும் கிட்ட வேண்டும் ! என அழகாக முன் வைத்தீர்கள். வாழ்த்துக்கள் ...!
சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான கவிதை! மேதின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒற்றுமை ஓங்கிட்டால் வெற்றிதானே
ReplyDeleteஅருமையான கவிதை சகோதரியாரே
மே தின வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொன்ன அன்பு நெஞ்சங்களுக்கு அம்பாளடியாளின் அன்பு
ReplyDeleteகலந்த மேதின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !.
மே தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete