4/10/2011

நிஜங்களே நீங்கள் வெல்லுங்கள்

கூடையில கருவாடு
கொண்டுபோறா தெருவோடு
வாடாமல் வாடுதுபார்
ரெண்டு  உசிரு!!!...........
வாழ்க்கை ஓடாகத் தேய்ந்ததடா
கொண்டு திரிந்து............

ஊராரு வாங்கையிலே                                                                                                        உரசிக்கிட்டே அவ உடலை
ஏதேதோ  சொன்னாங்க 
மனசு  கேக்கல அட
என்னான்னு கேட்டாலும்
வம்புதான் புள்ள.......

இப்படிப் போராடும்                                                                                              பெண்களுக்கு பொழுது
என்றோ விடியவேண்டிப்
பாடாத பாட்டெல்லாம்                                                                                                                  பாடி வச்சாங்க அதப்

பாளாப் போனவளும்                                                                                                 படிசுக்கிட்டாளே எங்கள 
பாடாப்படுத்த வேண்டி                                                                                      நடிச்சுக்கிட்டாளே!...இதனால்

நிஜம் இன்றும் கண்ணீரினிலே
நிழல் போகுதுபார் தேரினிலே
குடை சாய்ந்ததே கோவிலிலே!...
குப்பை  ஏறியதுபார் கோபுரத்திலே

உருவத்தின் ஒற்றுமையால்
ஒருபக்கம் வென்றதடா.....
உதவாமல்ப்   போனதுபார் நீதியும்கூட
உருக்குலைந்த சீதைகளின்
பாதையில் முள்ளாய்!!!!!.............

மனம்போன போக்கிலெல்லாம்
மானத்தை விட்டெறிந்தால்
சுகமான வாழ்வுக்கு பஞ்சமே இல்லை
அந்த சுகதேசி வாழ்க்கையில
ஏதும் அர்த்தமும் இல்லை.......

அநியாய உலகத்தில் நீதியே
நீ வென்றால் உள்ளத்தில்
இன்பம் எங்கும் தங்கும் 
இந்தச் சுமைதாங்கிகள் 
வாழ்க்கைச் சுமையும் நீங்கும்!.....
   

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/09/2011

இப்படியும் சில மலர்கள் ......

ரோஜா மலரை
முள்ளோடு படைத்தான்
செந்தாமரையை
சேற்றினில் படைத்தான்
சில பெண்களை ஏனோ
இரண்டுக்கும் நடுவில் படைத்தான்!....

இதயத்தில் தூய்மையையும்
இன்புறும் அழகையும்
கொடுத்த இறைவன் நல்
உதயத்தை ஏனோ வாழ்வில்க் 
காட்ட மறந்தான்!.................

பொருள் தரும் இன்பமோ 
பொறாண்மையின்  உச்சமோ
கலியுக மிச்சமோ இங்கே
கலங்குதே நெஞ்சம்!!!!........

உறவெனும் பாலமே
இன்று உயிர்ப்பலி கேட்பதால்
கனவுபோல் நினைவிது
கண்களில் துயரை மீட்டுதே!!!!........ 

வரும் பகை தீர்ப்பவர் 
பகைவராய்  ஆவதால்
மறைமுக வேதனை
மனதினை வாட்டுதே.......

கலகமே  வாழ்க்கையில்
கருந்திரை ஆனதால்
உலகமே இருளினில்
உள்ளதாய்த் தோன்றுதே!......

இத் திரைதனை அகற்றிடத்  
தீவினை தடுக்குதே!..........
நரைவிளும்வரைக் காத்திருத்தல்
பெரும்  நரகமாய்த் தோன்றுதே!!!...

  


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.