ரோஜா மலரை
முள்ளோடு படைத்தான்
செந்தாமரையை
சேற்றினில் படைத்தான்
சில பெண்களை ஏனோ
இரண்டுக்கும் நடுவில் படைத்தான்!....
இதயத்தில் தூய்மையையும்
இன்புறும் அழகையும்
கொடுத்த இறைவன் நல்
உதயத்தை ஏனோ வாழ்வில்க்
காட்ட மறந்தான்!.................
பொருள் தரும் இன்பமோ
பொறாண்மையின் உச்சமோ
கலியுக மிச்சமோ இங்கே
கலங்குதே நெஞ்சம்!!!!........
உறவெனும் பாலமே
இன்று உயிர்ப்பலி கேட்பதால்
கனவுபோல் நினைவிது
கண்களில் துயரை மீட்டுதே!!!!........
வரும் பகை தீர்ப்பவர்
பகைவராய் ஆவதால்
மறைமுக வேதனை
மனதினை வாட்டுதே.......
கலகமே வாழ்க்கையில்
கருந்திரை ஆனதால்
உலகமே இருளினில்
உள்ளதாய்த் தோன்றுதே!......
இத் திரைதனை அகற்றிடத்
தீவினை தடுக்குதே!..........
நரைவிளும்வரைக் காத்திருத்தல்
பெரும் நரகமாய்த் தோன்றுதே!!!...
"உறவெனும் பாலமே
ReplyDeleteஇன்று உயிர்ப்பலி கேட்பதால்"
நெஞ்சைத் தொட்டது ஓசையற்ற வரிகள்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே............
ReplyDeleteஅருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு நன்றி..
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே......
ReplyDelete