நீல மேகம் குடை பிடிக்க
நிலா வந்து ஒளி கொடுக்க
நாமும் உந்தன் மடிமீது
நனைகின்றோம் தினம் விழிநீரில்!
தூக்கத்தை துக்கம் முழுங்கியது
தூசி தட்டியே பல இரவுகள்
தூங்காமல் இங்கு விடிகிறது!
ஏக்கத்தில் எம் மனம் தவிக்கிறது!
எதிர்பார்த்த சுதந்திரமோ இங்கு
எதிரி கையில் இருக்கிறது!
காக்கும் தெய்வம் உறங்குவதால்
காவலின்றி மனம் புலம்புகிறது!!
தீக்குளித்தே நெஞ்சுக்குள்ளே
தினம் தீயணைப்பு நிகழ்கிறது!
போர்க்களத்தில் எம் வாழ்க்கைப்
போராட்டம் தொடர்கிறதே!
இதை ஊக்குவிக்கும் பல மிருகங்களும்
எம் உணர்வுகளை உணர மறுக்கிறதே!
முட்டாள்கள் தினத்தன்று இவர்களுக்கும்
முடி சூட்ட யார் வருவாரோ!
பல அற்பர்களின் ஆசைக்கெல்லாம்
அடங்கிப் போகும் எங்கள் வாழ்க்கைச்
சக்கரத்தைச் சுழற்றிச் சுழற்றி
சதிசெய்யும் விதியே எமை விட்டுப் போகாயோ !
கர்ப்பம் தரிக்கும் வயதின் எல்லை
காணாத சிறிய முல்லை மொட்டு
கயமை கொண்ட வண்டினத்தால்
கருவுற்றுக் கருகிப் போகுதே காவலற்று!
சற்றும் இரக்கம் காட்டாது
சாக்கடையில் வீழ்த்தி எம்மை
அச்சுறுத்திப் பெற்ற இன்பம்
அழிக்காதோ இவர்கள் வாழ்வை!
இந்த முட்டாள்கள் கொள்ளும் வெறி
முன்னேறும் பாதை எங்கும்
பற்றாதோ தீயாய் இங்கே
எம் பத்தினிகள் விட்ட சாபம் ஏற்று!
////தூக்கத்தை துக்கம் முழுங்கியது
ReplyDeleteதூசி தட்டியே பல இரவுகள்////
அருமையான வரிகள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
மிக்க நன்றி சகோதரரே!......
ReplyDelete