3/25/2011

உன்கனவு நினைவாகும் காலமிது!......

பாரதியே உம்மை நாம்  வணங்குகிறோம் !
பகலிரவு உன் பேச்சில் மயங்குகிறோம்!
நீதி சொன்ன மன்னன் இங்கு நீயல்லவோ!
நிமிர்ந்து நிற்கும் பெண்ணினத்தின் தாயல்லவோ!
சூளையில் இட்ட செங்கல் மனையானது !
மனையாளின்  மனமறிய மனம்  என்றும்  கல்லானது!

பாரதி உன் மனமோ இதனால் புண்ணானது!
மறத்தமிழன்  பாட்டு  எமக்குத் துணையானது!
சாதிவெறி கொண்டவர்க்குக் காலனாய்  நின்றாய்! 
சங்கடத்தில் நின்றவர்க்கு சக்தியாய்  நின்றாய்!
வீரமற்ர மனிதர்கள் முன் வேங்கையாய் நின்றாய்!
வியர்வை சிந்தும் உழவருக்குத் தோழனாய் நின்றாய்.!

சாத்திரங்கள் பெண்ணினத்தின் வாழ்வை இருட்ட
சந்திரனாய் சூரியனாய் வந்த  பாரதியே!
பாட்டிசைக்கும்  வல்லமையால் பாரதத்தை வென்றாய்!
பாவையரின் சுதந்திரப் போர் வீரனாய் நின்றாய்!
ஏட்டினிலே  எமை வாழ வைத்த தெய்வம் நீ!
எங்கிருந்த போதினிலும்  உன்னை மறவோம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........