கவிதை மழையில் நனையும்போது
உறையும் பனியும் சுடுகிறதா !!!!.......
இந்த விதியை மாற்ற முயலும்போது
உன் மதியில் சஞ்சலம் எழுகிறதா......
பிறர் அருமை பெருமை தெரிந்திருந்தால்
அன்பைச் சிதைக்க மாட்டாயே உன்
வலிமை கொண்ட எழுத்தினாலே
நல் வாழ்வை அழிக்க மாட்டாயே .....
கருவில் இருந்து தெருவில் வந்து
களங்கம் உற்ற பின்னாலும் இந்த
உயிரைக் குடிக்கத் தூது எதற்கு இனி
ஊன் உடலும் இதனை ஏற்காதே !!...
அமைதிப் பூங்கா நடுவினிலே அன்று
அக்கினிக் குண்டை ஏன் எறிந்தாய்!.....
உன் நிழலைக் கூடக் காணா மனிதரும்
நின்மதி இழந்து தவிப்பதர்க்கா !!!!...........
கருணை உண்டா உன் இதயத்திலே
களங்கம் சொல்லிப் போகின்றாயே
இன்று எரிமலையைப்போல சிதைந்த மனம்
இனியும் அமைதி கொள்ளாதே ....................
வறுமைக் கோடும் வதைக்கா மனதை
சில வார்த்தை என்றும் அழித்துவிடும்
பிறர் உணர்வைக் கொன்று பெருகும் புகளில்
அப்படி என்ன ஓர் இன்பம் வந்து விடும் !!!!.....
நல்ல வரிகள்... உணர வேண்டிய வரிகள்...
ReplyDeletetm1
சில வார்த்தைகள் போதும் மனதை அழிக்க.
ReplyDelete////பிறர் அருமை பெருமை தெரிந்திருந்தால்
ReplyDeleteஅன்பைச் சிதைக்க மாட்டாயே உன்
வலிமை கொண்ட எழுத்தினாலே
நல் வாழ்வை அழிக்க மாட்டாயே .....///
என் மனதையும் பாதித்த வரிகள்
சகோதரி கவலை கொள்ளாதீர்கள்
இதே போன்று நான் எழுதியது (உங்க அளவுக்கு எழுத தெரியாது நீங்கள் கவிதையே மூச்சாக கொண்டவர் )
ReplyDeleteநீ சுட்டிய சொல்லில்
சுருண்டு போனேன்.
ஒரு தீக்குச்சியின் உரசல்
வெடி மருந்து கிடங்கில்.
விரல் நீண்டது என் பக்கம்
குத்தியது உன் கண்களை
இருபக்க கூர் கொண்ட
கத்தி அச்சொல்
என் கூட படித்தவனே
என் மனதையும் படித்தவனே.
இதுவரை அப்படி
ஒரு சொல்
சொல்லியதில்லை.நீ
யாரோ சொன்னார்களாம்
அச்சொல்லை சொல்ல
தனியாக சொல்லியிருந்தால்
தவித்து இருக்க மாட்டேன்.
பொதுவில் சொன்னயாடா
போங்க வாங்க என்று.
போலித்தனமான உலகில்
உன் போடா வாடா
என் நிஜ உலகம்
அதை கலைத்து விடாதே
சத்தியமான வார்த்தைகள் சகோதரி....
ReplyDeleteபிறர் உணர்வைக் கொன்று வரும்
புகழில் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு தேவைதானா???
உணர்ந்துகொள்ள வேண்டிய விடயம்...
நயமான கவிதை நன்று.
ReplyDeleteவறுமைக் கோடும் வதைக்கா மனதை
ReplyDeleteசில வார்த்தை என்றும் அழித்துவிடும் //
நிச்சயமாக
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி வரிந்து கட்டிக் கொண்டு
வார்த்தைகள் வந்து விழுகின்றன
பொறாமையாகத்தான் உள்ளது