12/04/2012

பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்....


பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்
தேன் துளி விட்டுச் செல்லும் தேனீக்கள்
யார் இதை அழித்திட நினைத்தாரோ ...அந்த
வாசகர் நெஞ்சம் என்றும் வீண்தானே !...........

காகித ஓடம் நான் தொடுத்தேன் அம்மா......
கங்கையில் கண்ணீரைச் சேர்த்து விட்டேன்
பூமகள் பாதம் சேர்ந்திட வேண்டும்
புண்ணிய நதியே வந்துதவு!!! .................¨

                             ( பா மரம் பட்டுப் போகும் )
நீதியின் கண்கள் மூடியதாலே
நெஞ்சினில் தீப்பொறி பட்டதென்ன .....
பாவிகள் போகும் பாதையில் மட்டும்
சிலர் பாரிய முட்களை நட்டதென்ன !!!....

கோவிலில் இருக்கும் சிற்பத்தை எவரும்
தெருக் கோடியில் போட்டு உடைப்பாரா .....
கேள்விகள் எழுந்தால் கேலியாய்ப் பதிலைக்
கேட்பவர்க்கெல்லாம் உரைப்பாரோ !....

ஆயிரம் ஆயிரம் வேதனை  நெஞ்சினில்
யார் இதன் காரணம் அறிவாரோ .............
கூவிடும் குயிலின் குரவளை அதனில்
இனியும் கூரிய கத்தியை வைப்பாரோ !!!......

                           (   பா மரம் பட்டுப் போகும் ....)

நீதியே  கண்களை நீ  திறவாயோ ........
நீ மழையாய் இங்கு பொழியாயோ ...
ஓர் துளி ஈரம் பட்டாலும் போதும்
உள்ளத்தில் அமைதி தங்கிவிடும்

பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
தீந்தமிழோடெம்மை  வாழ விடு ........

                        (   பா மரம் பட்டுப் போகும் ....)


                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. நீதி நிச்சயம் கண்களை திறக்கும்
    மழையாய் இங்கு பொழியும்

    ReplyDelete
  2. தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
    தீந்தமிழோடெம்மை வாழ விடு ....//

    தொடர்ந்து இன்று போல்
    தமிழுடன் வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
    பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
    தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
    தீந்தமிழோடெம்மை வாழ விடு ..

    அழகான அர்த்தமுள்ள வரிகளில் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //கூவிடும் குயிலின் குரவளை அதனில்
    இனியும் கூரிய கத்தியை வைப்பாரோ !!!......//

    அருமையான பாடல் சந்தத்தில் முடியவில்லை வார்த்தைகள் கூர்தீட்டிய கத்தியை போல உள்ளே இறங்குகிறது அருமை தோழி ஆழ்ந்த உணர்வு

    ReplyDelete
  5. தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
    தீந்தமிழோடெம்மை வாழ விடு ........
    கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  6. பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
    பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
    தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
    தீந்தமிழோடெம்மை வாழ விடு ........

    ஆழ பொருள் பொருந்திய வரிகள் மனதில் சம்மனமிட்டு அமர்ந்தன சகோ.

    ReplyDelete

  7. படமும் அழகு வடித்த பாடலும் அழகு!

    ReplyDelete
  8. பாரினுள் துயரம் பொங்குகையில் பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்! அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மனக்குமுறல்...!!

    பாடலும் பொருளும் அருமையாக உள்ளது.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........