11/18/2011

இதனால் யாருக்கு என்ன நட்டம்!...

கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக என அந்த
வள்ளுவர் சொன்ன வாக்குக்கமைய 
வந்தேன் ஒரு கவிதை புனைந்திட.!


நீ சுற்றம் தழுவிடு 
வந்த சொந்தம் பெருக்கிடு 
நித்தம் பழகிடும் உறவோடு 
யுத்தம் துறந்திடு!
விட்டுக் கொடுத்திடு எதிலும் 
விழிப்பாய் இருந்திடு !
ஆசையை மட்டுப் படுத்திடு 
மனத்தைக் கொஞ்சம்  கட்டுப்படுத்திடு! 


எட்டுத் திக்கும் உன் பெயரை 
என்றும் உணர்ந்திட நற் கருமம் 
அதை விட்டுச் செல்லு பூமியிலே 
நீ வீழ்ந்தும் எழுவாய் மரம்போல!
நித்தம் நிகழ்த்தும் செயல்கூட 
பிறர்க்கு நிழல்போல் என்றும் உதவட்டும்! 


கொட்டும் மழைபோல் யாவர்க்கும் 
நாம் கொடுக்கும் பலனை மறப்பார் யார்!
முத்தம் தந்து சிரித்திடும் மழலை 
முகம்போல் மனத்தைக் காப்போமே!


சத்தம் இன்றி வாழ்வினிலே என்றும் 
தத் தம் பணிகளைச் செய்வோமே 
ஒப்புக்கொரு வார்த்தை சொல்லி 
ஓர வஞ்சனை அதைச் செய்யாமல் 
மிகு துக்கம் வந்த போதினிலும் அன்பின் 
தூய்மை காத்து நிற்போமே!


சத்தியத்தை மதித்து என்றும் 
வரும் சங்கடத்தைப்  போக்கிடுவோம்!
மிகு குற்றம் பார்த்து ஒதுங்காமல் 
பிறர் மேன்மை கருதியும் உழைத்திடுவோம்!
கற்றவித்தை அதன் பயன்கொண்டு 
இந்தக் கலியுகத்தை மாற்றிடுவோம்!


பெற்றவரும் மற்றவரும் எமைக்கண்டு 
பெருமைகொள்ளச் செய்திடுவோம் 
நற்றமிழைப் பயின்ற வாயால் 
எங்கும் நல்ல வார்த்தை பேசிடுவோம்!


துச்சமென மதித்து உயிரைத் 
துன்புறுத்தும் பாவிகளை 
எக்கணமும் எதிர்த்து இங்கே 
எதற்கும் குரல் கொடுத்திடுவோம்!
அச்சமின்றி இவ்விடத்தில் 
அனைவருக்கும் தோள் கொடுப்போம் 
இச்சைகளைக் களைந்து தினம் 
இருட்டை விட்டே வெளிவருவோம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

27 comments:

  1. >>பெற்றவரும் மற்றவரும் எமைக்கண்டு
    பெருமைகொள்ளச் செய்திடுவோம்
    உற்ற துணை இன்புறவும் கொஞ்சம்
    இரக்கம் காட்டி மகிழ்ந்திடுவோம்

    கேட்சிங்க் லைன்ஸ்

    ReplyDelete
  2. கொட்டும் மழைபோல் யாவர்க்கும்
    நாம் கொடுக்கும் பலனை மறப்போமே!.//
    இதைப் பழகிட்டா பிரச்சினைகள் எல்லாம் போயே போகுமே!!

    ReplyDelete
  3. ////நீ சுற்றம் தழுவிடு
    வந்த சொந்தம் பெருக்கிடு
    நித்தம் பழகிடும் உறவோடு
    யுத்தம் துறந்திடு .......
    விட்டுக் கொடுத்திடு எதிலும்
    விழிப்பாய் இருந்திடு
    ஆசையை மட்டுப் படுத்திடு
    மனத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திடு ////

    சிறப்பான வரிகள் மேடம்

    ReplyDelete
  4. அருமை அருமை
    இருட்டை விட்டு வெளிவர
    வெளிச்சம் காட்டிப் போகும் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. நீ சுற்றம் தழுவிடு
    வந்த சொந்தம் பெருக்கிடு
    நித்தம் பழகிடும் உறவோடு
    யுத்தம் துறந்திடு .......
    விட்டுக் கொடுத்திடு எதிலும்
    விழிப்பாய் இருந்திடு
    ஆசையை மட்டுப் படுத்திடு
    மனத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திடு //

    மிக அற்புதமான வரிகள்.. இதை பின்பற்றினாலே வாழ்வில் மேன்மை தான் நன்றி சகோ!

    ReplyDelete
  6. ஒவ்வொரு வரிகளும் உணரவேண்டிய வரிகள்.. அனைத்தும் அருமை சகோ! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. துச்சமென மதித்து உயிரைத்
    துன்புறுத்தும் பாவிகளை
    எக்கணமும் எதிர்த்து இங்கே
    எதற்கும் குரல் கொடுத்திடுவோம்
    அச்சமின்றி இவ்விடத்தில்
    அனைவருக்கும் தோள் கொடுப்போம்
    இச்சைகளைக் களைந்து தினம்
    இருட்டை விட்டே வெளிவருவோம்!....


    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  9. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சத்தியத்தை மதித்து என்றும்
    வரும் சங்கடத்தை வென்றிடுவோம்
    மிகு குற்றம் பார்த்து ஒதுங்காமல்
    பிறர் மேன்மை கருதியும் உழைத்திடுவோம்//
    அருமையான , உண்மையான வரிகள்.. அசத்தல் கவிதை சகோ..

    ReplyDelete
  11. //பெற்றவரும் மற்றவரும் எமைக்கண்டு
    பெருமைகொள்ளச் செய்திடுவோம்
    உற்ற துணை இன்புறவும் கொஞ்சம்
    இரக்கம் காட்டி மகிழ்ந்திடுவோம்
    நற்றமிழைப் பயின்ற வாயால்
    எங்கும் நல்ல வார்த்தை பேசிடுவோம்...//

    அருமை சகோ..உறவுகளின் மேன்மையை உணர்த்தும் வரிகள்

    ReplyDelete
  12. சகோதரி அவர்களுக்கு

    //நித்தம் பழகிடும் உறவோடு
    யுத்தம் துறந்திடு .......//

    யுத்தமா போதும் எங்கள் உறவுகளை இழந்தது

    //கொட்டும் மழைபோல் யாவர்க்கும்
    நாம் கொடுக்கும் பலனை மறப்போமே!..//

    மனிதனை பிறந்து ஒவ்வோருவருக்கும் உதவி செய்திட வேண்டும் என்பதை உணர்த்தும் மழை உதாரணம் அருமை சரியானது கூட

    //ஒப்புக்கொரு வார்த்தை சொல்லி
    ஓர வஞ்சனை அதைச் செய்யாமல்
    மிகு துக்கம் வந்த போதினிலும் அன்பின்
    தூய்மை காத்து நிற்போமே...........//

    சரியாக சொன்னீர்கள் ஒப்புக்கு கருத்துரை போடாமல் உணர்ந்து சொல்கிறேன் வாழ்த்துக்கள்

    சகோதரி என்று சொலவதுகூட ஒப்புக்கு அல்ல

    ReplyDelete
  13. திருக்குறளுக்கு உவமை கவியா?
    //ஒப்புக்கொரு வார்த்தை சொல்லி
    ஓர வஞ்சனை அதைச் செய்யாமல்
    மிகு துக்கம் வந்த போதினிலும் அன்பின்
    தூய்மை காத்து நிற்போமே...........//

    அருமையான வரிகள்.

    நம்ம தளத்தில்:
    நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

    ReplyDelete
  14. அருமை வரிகள் ,அற்புத வார்த்தைகள் .

    ReplyDelete
  15. புரட்சி எழுகுது பாரீர்...

    ReplyDelete
  16. //நீ சுற்றம் தழுவிடு
    வந்த சொந்தம் பெருக்கிடு
    நித்தம் பழகிடும் உறவோடு
    யுத்தம் துறந்திடு .......
    விட்டுக் கொடுத்திடு எதிலும்
    விழிப்பாய் இருந்திடு
    ஆசையை மட்டுப் படுத்திடு
    மனத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திடு


    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  17. குரல் கொடுப்போம்.
    நிச்சயம் இருள் விட்டு வெளி வருவோம்.

    ReplyDelete
  18. கவிதையின் மொத்த வரிகளுமே அருமை மட்டுமன்றி அனைவரையும் போய்ச் சேர வேண்டியவை.பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. இதுதான் வாழ்வாங்கு வாழ்வதோ?!நன்று.

    ReplyDelete
  20. //கொட்டும் மழைபோல் யாவர்க்கும்
    நாம் கொடுக்கும் பலனை மறப்போமே!...//


    மிகவும் அருமையான வரிகள் அம்மா. புவியில் ஒவ்வொருவரும் இப்படி இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  21. // சத்தியத்தை மதித்து என்றும்
    வரும் சங்கடத்தை வென்றிடுவோம்
    மிகு குற்றம் பார்த்து ஒதுங்காமல்
    பிறர் மேன்மை கருதியும் உழைத்திடுவோம்
    கற்றவித்தை அதன் பயன்கொண்டு
    இந்தக் கலியுகத்தை மாற்றிடுவோம்//


    நல்ல கருத்துக்கள்!
    புதிய ஆத்திச் சூடி போல
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. //கொட்டும் மழைபோல் யாவர்க்கும்
    நாம் கொடுக்கும் பலனை மறப்போமே!...
    முத்தம் தந்து சிரித்திடும் மழலை
    முகம்போல் மனத்தைக் காப்போமே!..//
    அருமை வரிகள்
    கவிதை சூப்பர்

    ReplyDelete
  23. வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..

    அருமை..

    ReplyDelete
  24. இச்சைகளைக் களைந்து தினம்
    இருட்டை விட்டே வெளிவருவோம்!....

    முதலும் முடிவும் அற்புதம்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........