அடடா எதை எழுதுவேன் !..எவ்வாறு எழுதுவே !...மிகவும் பொறுப்பு வாய்ந்த ஆக்கத்தின் தொடரை எவ்வளவு தன்னம்பிக்கையுடன் தொடர இந்த அம்பாளடியாளின் வாசல் கதவைத் தட்டி அழைப்பு விடுத்தாரோ அந்த அமைதிச் சாரலின் அன்பு உள்ளத்தின் அழைப்பை ஏற்று என் எண்ண அலைகளில் தோன்றும் கருத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கின்றேன் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டி மன்னியுங்கள் .(எனக்குத் தெரியும் என் வலைத்தள உறவுகள்
எப்போதும் என்மீது தனீப்பாசம் உள்ளவர்கள் அதனை அடுத்த பதிவில் பார்ப்போம் !...........இப்போது
மழலைகள் உலகமே மகத்தானது .(தொடர் பதிவு )
தென்றலைப்போல் திங்களைப்போல் எங்களை வருடும் உங்களைவாழ வைக்கும் வழிகளை அம்மா நானும் சொல்லப் போகின்றேன் அழகிய மலர்ச் செண்டுகள் இவர்கள் அமுத விழி பார்த்தால் மனதில் ஆயிரம் இன்ப அருவிகள் கொட்டும் .இந்தப் பட்டாம் பூச்சிகளின் எண்ணம் ஓர் அழகிய சித்திரக் கூடம் .இதில் கற்க நிறைய நல்ல அற்புதமான விசயங்கள் உண்டு .குற்றமற்ற இந்த உள்ளங்களால் என்றும் யுத்தங்கள் நிகழ்வதில்லை .ஆனாலும் இவர்கள் வளர்ந்து வரும்போது எவ்வாறு வர வேண்டும் என்பதை எமது வாழ்க்கையின்
நடைமுறைகள்தான் தீர்மானிக்கின்றன .உதாரணத்திற்கு நேற்று உங்கள் உறவுகளுடன் நீங்கள் போட்ட சண்டை அல்லது தவறான வார்த்தைப் பிரயோகம் அல்லது சைகைகள் இவற்றை உங்கள் குழந்தை எவ்வாறு கிரகித்து அழகாய்ப் படம் பிடித்துள்ளான் என்பதை அவன் செய்து காட்டும்போது அந்த இடத்தில் உங்களை உடன் நினைவுக்கு அழையுங்கள் அதில் உங்கள் குட்டி பிம்பம் தோன்றி மறையும் !.....அதுமட்டும் அல்ல நீங்கள் செய்த அழகிய விசயமும் தெரியும் இதில் உங்கள் பிள்ளைக்குத் தேவை எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் ."
குழலினிது யாழ் இனிது என்பார் தம் மக்கள் மழலைச் சொல்
கேளாதவர்கள் "!......ஆகா........எத்தனை மகத்தான உண்மை இது !............அற்புதமான இந்த உணர்வை இன்றைய வளர்ந்துவரும் எமது சமூகத்தினரில் எத்தனைபேர்தான் பொறுமையாகக் கேட்டும் ரசித்தும் வந்துள்ளனர் ?..சொல்லப்போனால் இந்தப் பாக்கியத்தை அந்தக் குழந்தயை வளர்க்கும் ஆயாகூடப் பெற்று இருப்பாள் .பாவம் இங்கும் எத்தனை குழந்தைகளுக்கு நல்ல ஆயாக்கள் தம் அம்மா போல் கிடைத்திருப்பார்கள் ?இந்த இடத்தில்தான் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோர்களின் அன்பை அரவணைப்பை இழக்கின்றனர் !........
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வேலைநாள் போக .கிடைக்கும் ஓய்வு நாளில் வீட்டைச் சுத்தம் செய்யவும் ,வரும் விருந்தினரைக் கவனிக்கவும் ,விழாக்களுக்கு சென்றுவரவும் ,உறவினரை சந்திக்கவும் கொடுக்கல் வாங்கல் பார்க்கவும் ,தொடர் சீரியல் பார்க்கவும் தொலை பேசி அழைப்பு ,அதனால் வரும் யுத்தங்கள் விவாதங்கள் தீர்க்கவும் நேரம் சரியாக இருக்கும் .இதற்குள் பிள்ளைகளின் படிப்பு விசயத்தையும்கூட பார்ப்பதானால் பாசம் பொழிய வருகின்றதோ இல்லையோ கோவம் அதிகமாக வரும் .வரும் கோவம் அதுவும் கட்டுக்கடங்காமல் போனால் அடிதான் போடச் சொல்லும் .இப்படி
அடித்ததும் எங்கள் பிஞ்சுகள் மனதில் இவ்வாறுதான் எண்ணம்
எழும் .அதை எல்லாப் பிள்ளைகளும் இவன்போல் சட்டென
வெளிக்காட்ட மாட்டார்கள் .என்றோ ஒரு நாள் இதன் தாகத்தை
வைத்து ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டினால் எம்மால் தாங்க
முடியாது இல்லையா? அதனால் பெற்றோர்களாகிய நாம்தான்
கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் .அத்துடன் எம்
பெற்றோர்களிடம் வளர்ந்துவரும் போட்டி மனப்பாண்மை அதன் விளைவாக சில பெற்றோர்கள் பிள்ளைகளைத் தயார்ப்படுத்தும் விதம் பார்பதற்க்கே மிகக் கொடுமையாக இருக்கும் .உதாரணத்திற்கு யாரோ ஒரு பிள்ளை நடனம் பழகுகின்றான் ,சங்கீதம் ,வயலின் ,கணணி ,கறாத்தே பழகுகின்றான் என்றால் என் பிள்ளையும் அவன்போல்
நிறையப் பழக வேண்டும் என்று முடிவெடுத்து ஓட ஓட விரட்டி அதை பயிலத் தொடக்கிவிட்டு பின் எல்லாவற்றையும் அந்தப்பிள்ளையால் தொடரமுடியாமல்போக எல்லாவற்றையும் இடைநிறுத்தி விடுவார்கள் இந்தமாதிரிப் பெற்றோர்கள் நிட்சயம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் .இயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓரு திறமை கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம்
ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல்கொள்ளல்
மிக மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை புரிய முடியாது .அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் மெல்ல மெல்லத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு அடித்துத் துன்புறுத்தி கற்பித்துவந்தால் பிள்ளைக்கு அதனால் அதிகம் வெறுப்பும் பய உணர்வும் தொத்திக்கொள்ளும் .உங்களுக்கும் விரைவில் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு விடும் .நான் அறிந்து இங்கு
வெளிநாடுகளில் எமது பெற்றோர்கள் படும் துன்பம் சொல்லில்
அடங்காது ஒன்று அவர்களுக்கென போதிய அனுபவம்
இல்லாமை மற்றொன்று போட்டி மனப்பாண்மை இவ்விரண்டு விசயமும் மனதைக் குடைந்ததும் பேசாமல் நம் நாட்டுக்கு போய்விடவேண்டும் என்பார்கள் .எங்கு போனாலும் பிள்ளைகளின் விசயத்தில் பொறுமை அதிகம் வேண்டும் என்பதை எல்லாப் பெற்றோரும்
புரிந்துகொள்ள வேண்டும் .
அத்துடன் அதிக பிள்ளைகள் உள்ள இடத்தில் எப்போதும்ஒரு குழப்பம் இருக்கும் அதாவது அண்ணன் வாங்கிய மதிப்பீடு தம்பி வாங்க மாட்டன் இந்த இடத்தில் பெற்றோர்கள் மூத்தவனைத் தலை மீது தூக்கிவைத்து ஆடினால் இளையவன் மனம் நோகும் இது மாறியும் நிகழும் .பிள்ளைகளுக்கு மத்தியில் நாம் இவ்வாறு பாகுபாடு
காட்டிவந்தால் எதிர்காலத்தில் பிள்ளைகள் மனம் இதனால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் .பின் நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற நிலை வந்துவிடும் .அதனால் நாம்தான் மிக அவதானமாக செயல்பட வேண்டும் .என்றும் அடம்பிடிக்கும் பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள் .முடிந்தவரை
அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள் .
பிள்ளைகளை ஏசும்போதும் கண்டிக்கும்போதும் உங்கள் தனிப்பட்டபிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படாதீர்கள் பெற்றோர்கள் உங்களுக்குள் வாக்குவாதம் முற்றும்போது எப்போதும்
பிள்ளைகளை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள் .உறவினர்களுடன் உங்களுக்கு உள்ள புரிந்துணர்வு அற்ற குழப்பத்தை வளர்ந்துவரும் உங்கள் பிள்ளைகளிற்கு தவறான முறையில் ஒப்பிக்காதீர்கள் .முடிந்தவரை பிள்ளைகளை உங்கள் தீய பழக்கங்களில் இருந்து அதாவது கெட்ட வார்த்தை பேசுதல் ,சண்டை இடுதல் ,பிறரைத் தூற்றுதல் ,பொய் உரைத்தல் ,வன்சொல் பேசுதல் போன்றவற்றில் இருந்து அவர்களை நல்லபடியாக வாழ வழி செய்யுங்கள் .இதுதான் உங்கள் பிள்ளையை நாளை இந்த சமூகம் மதிக்கத் தக்க நல்ல
இடத்திற்கு இட்டுச் செல்லும் .அத்துடன் அவசர உலகில் நாம் எமது பிள்ளைகளுக்குக் காட்டும் எல்லாவித அக்கறையோடும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிக பொறுப்புடன் எங்கள் பதிலைக் கொடுத்துவந்தால் நிட்சயம் அந்தப் பிள்ளையின் அறிவு வளர்ச்சிக்கு அது மிகவும் உறுதுணையாக நிற்கும் .
குழந்தைகள் விரும்பும் பட்சத்தில் எம்மோடு இணைந்து
சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்கும் நாம் அனுமதி வழங்கல்என்பதும் வரவேற்கத் தக்கது .அத்துடன் சுத்தம் பேணுதல் ,சுயமாக தன் கடமையைத் தானே செய்யப் பயிற்றுவித்தல் ,பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடப் பயிற்றுவித்தல் வயதானவர்களுடன் அன்பைப்பேணக் கற்றுக் கொடுத்தல் என்பதும் எம் தலையாய கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .
நீங்கள் அதிகம் வசதி படைத்தவர்கள்
ஆயின் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் கேட்டதும் உடன் எதையும் வேண்டிக் கொடுக்காதீர்கள் .பிள்ளைகள் அடம் பிடித்தால் நாம் உடன் எதையாவது வேண்டிக் கொடுப்பதன்மூலம் எங்கள் பிரச்சனை தீர்ந்து விடலாம் .ஆனால் அந்தப் பிள்ளைக்கு இதனால் வருங்கால
வாழ்வில் பொறுப்புணர்வு அற்ற செயல் அதிகமாக கஸ்ரத்தைக்
கொடுக்கும் .இருக்கும்போது கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் பின் இல்லாத காலத்திலும் அந்தப் பிள்ளையால் உங்களுக்கு என்றும் அனுசரணையாக நடந்துகொள்ள முடியும் .முடிவில் ஒன்றை மட்டும் அறுதியும் உறுதியுமாகச் சொல்கின்றேன் .பிள்ளைகளை நாம் எதன்நலன் கருதாமல் அவர்களின் எதிர்கால நலன் கருதி மிக மிக பொறுப்புடனும் வளர்ப்போமானால் அந்தப் பிள்ளைகளே நாளை எம் பெயரையும் காப்பாற்றும் என்பதில் ஐயம் இல்லை .கவிதை
அடுத்த தொடரில் இடம்பெறும் .மிக்க நன்றி உறவுகளே வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் இன்றைய நன்னாள் உங்கள் வாழ்வின் சிறப்பான பொன்னாளாக மலரட்டும் .அத்துடன் இந்தத் தொடர்பதிவை தொடர அழைத்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றாகச் சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லோரும் ரசிக்கும் குழந்தைகளின் உலகத்தையும், உள்ளத்தையும்,பெற்றோர்க்கான ஆலோசனையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!
ReplyDeleteஐ... மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)))))
ReplyDeleteஎதைச் சொன்னாலும் சிறப்பாகச் சொல்லுதல்
ReplyDeleteஅம்பாளடியாளின் தனிச் சிறப்பு
இந்தப் பதிவும் விதிவிலக்கல்ல அருமை
வாழ்த்துக்கள்
த.ம 1
பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteகுழந்தைகள் தின சிறப்பு பதிவு மிகவும் சிறப்பாய் அமைந்துவிட்டது...
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு ஒரு கலை தான்...அதை கற்காமலே அத்தனை பெற்றோரும் கடைசி வரை இருந்துவிடுகிறோமோ என்பது என் கவலை...
வாழ்த்துக்கள்..
பல குழந்தைகளை வளர்த்த அனுபவசாலி போல் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தங்கா...
ReplyDeleteஉங்கள் பணி தொடரட்டும்.
அந்த குழந்தை போன் பேசும் படத்தில் உள்ள வசனங்கள் அருமை.....
ReplyDeleteகுழந்தைப்பருவம் மிகவும் சிறப்பானது...மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் குழந்தையாக முடியாதா என்று மனது ஏங்குவது குழந்தைப்பருவத்துக்குத்தான்
இயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு திறமை இருக்கும். அதை நாம்தான் கண்டறிந்து வளர்க்க வேண்டும். வற்புறுத்தி திணிப்பதால் கல்வி வராது... இப்படி பல நல்ல விஷயங்களை அருமையாகச் சொல்லியிருக்கீங்க. (இந்த தீம்ல நான் எழுதின சிறுகதை ஒண்ணு இருக்கு. அடுத்த பதிவா எதைப் போடறதுன்னு குழம்பிட்டிருந்த எனக்கு ஐடியாவும் கிடைச்சுட்டுது!) நன்றி!
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பெற்றோர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம்.அதனை சரி வர செய்தல் என்பது சற்று கடினமான பணி போல் தோன்றினாலும் சிறிது முயன்று அவர்கள் பங்கை சரி வர அளித்தால் மொட்டாக இருந்த குழந்தைகள் பின்னாளில் நறுமணம் வீசுவார்கள்.அதற்குத் தகுந்த யோசனைகளுடன் ஒரு நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள்.முக்கியமாக குழந்தைகள் முன் வாக்குவாதம் செய்யாதிருத்தல்,உறவினர் பற்றி தவறான கருத்தை ஒப்பிக்காதிருத்தல்,சிறு வேலைகளில் பங்கேற்கச் செய்தல், உதவும் மனப்பான்மையை வளர்த்தல் போன்ற கருத்துக்கள் இன்றளவில் முக்கியமானவை.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteஎங்கள் வீட்டு வாண்டு அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே " அ,ஆ , இ,ஈ" என்று பேசுவது கொள்ளை அழகு.
ReplyDeleteகுழந்தைகள் துல்லியமான கண்ணாடிகள், கவனமாக இருக்க வேண்டும் WELL SAID!!
சகோ.... கவிதைக்கு கட்டுரையும் தெரியும்னு காட்டியிருகிங்க. அழகான கருத்துக்கள்.
ReplyDeleteநல்ல கருத்து .. நன்றி
ReplyDeleteபிள்ளைகளை நாம் எம்
ReplyDeleteதன்நலன் கருதாமல் அவர்களின் எதிகால நலன் கருதி மிக மிக
பொறுப்புடனும் வளர்ப்போமானால் அந்தப் பிள்ளைகளே நாளை
எம் பெயரையும் காப்பாற்றும் என்பதில் ஐயம் இல்லை .
>>>
மிகச்சரியான வரிகள். வாழ்த்துக்கள் சகோ. த ம 4
குழந்தை வளர்ப்பு என்பது
ReplyDeleteஎவ்வளவு பெரிய மகத்தான விஷயம்.
மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.
அம்மாவைப்பற்றி அப்பாவிடம் முறையிடும் குழந்தையின் படம் அப்படியே மனதைக் கவ்வுகிறது. மீதீயை அப்புறமாகப் படிக்கிறேன்.
ReplyDeleteகுழந்தைகளுடன் அவர்கள் உலகத்தில் அவர்களுடன் வாழ்வது பேரானந்தம் இல்லையா...
ReplyDeleteஎழுத்துளை கொஞ்சம் பத்தி பிரிச்சு போடுங்கப்பா...
ReplyDeleteஇதைவிட அழகாக சொல்லமுடியுமா?சரியாக சொன்னீர்கள் சகோ!
ReplyDeleteவளரும் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்து
ReplyDeleteகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்
நல்ல பதிவு
புலவர் சா இராமாநுசம்
நிதானமாக கைப் பிடித்து பக்குவமாக வழி நடத்தி செல்கிறீர்கள். உங்கள் நடை, ஒரு குழந்தைக்கு போதனை செய்வது போல அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதே தலைப்பில் நானும் எழுதி உள்ளேன். நேரமிருந்தால் வந்து பாருங்கள்.
http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html
ஆஹா.. அசத்திட்டீங்க போங்க.. ஜூப்பரு.
ReplyDeleteநாலு பேரை நீங்களும் அழைச்சு தொடரச் செய்யுங்களேன் :-))
அம்பாளடியாள் வணக்கம். இந்தக் கட்டுரை படித்தேன். மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது காணப்படும் குணாதிசயங்கள் அவர்களது மூன்றாம் வயதுக்குள்ளேயே நிர்ணயிக்கப் படுவதாக மன வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனை வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில் பதிவிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்களேன்.
ReplyDeleteமழலைகள் உலகமே மகத்தானது
ReplyDeleteதென்றல் போல் திங்கள் போல் இனிமையானது..
என்றென்றும் மழலைகளைப் போற்றி சரியான ஆக்கபூர்வமான வழிகளில் வளர்ப்போம்.
அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
//எங்கு போனாலும் பிள்ளைகளின் விசயத்தில் பொறுமை அதிகம் வேண்டும் என்பதை எல்லாப் பெற்றோரும்
ReplyDeleteபுரிந்துகொள்ள வேண்டும் .//
.அருமையாக எழுதியிருக்கீங்க .வாழ்த்துக்கள்
//
ReplyDeleteஇயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓர் திறமை
கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம்
ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க
முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு
கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து
திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .
அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல் மிக
மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை
புரிய முடியாது .///
மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்...தொடர்பதிவில் இணைந்துகொண்டு அனைவரும் கூறும் கருத்துக்களும் மகத்தானதாகவே இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ..
சகோ முனைவர் இரா .குணசீலன் எனக்கு ஒரு இலக்கியத் தேனீ
ReplyDeleteவிருது கொடுத்தார் இதையும் தமிழ்மணம் ராங் பட்டியலையும்
என் தளத்தில் நிறுவ வேண்டும் .இதை சரியாக நிறுவவேண்டிய
இடத்தை (வலது பக்கத்தில் பிரபல இடுக்கைகள் அமைத்திருக்கும்
இடத்திற்கு மேல் அல்லது தமிழ் மணம் ராங்கும் அப்படியே போலோவர்ஸ்
இருக்கும் பட்டியலுக்கு கீழ் இன்ட்லி போலோவர்ஸ் இ .தேனீ
விருதென இணைக்க வேண்டும் .இந்த செய்முறையை என் கருத்து
பட்டியலில் சொல்லிவிடுங்கள் சகோ//
வணக்கம் சகோ! தாமதமான வருகைக்கும் பதிலுக்கும் மன்னிக்கவும் சகோ!
Dashboard => Design => Add a gadget என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு அதில் picture என்ற ஒரு ஆப்சனைத் தேடி அதைக் கிளிக் செய்யவும்... Choose file என்ற பட்டனைக்கிளிக் செய்து சகோ முனைவர் அவர் கொடுத்த விருது பிக்சரை அப்லோடு செய்யவும்... அதில் டைட்டில், மற்றும் கேப்சன் என்ற ஒரு பார் இருக்கும்.... அதில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை டைப் செய்யவும்... உதாரணத்திற்கு விருது கொடுத்த சகோ முனைவருக்கு நன்றி... பிறகு நீங்கள் விருப்பப்பட்டால் அதில் முனைவர் அவர்களின் லிங்க் கொடுத்து கடைசியாக Save எனபதை க்ளிக் செய்யவும்... அவ்வளவு தான்.
தமிழ்மணம் ரேங்க் பட்டியலுக்கு சென்றால் உங்கள் பிளாக்கின் embed code இருக்கும்.... அதை காப்பி செய்து... அதே போல் Dashboard => Design => Add a gadget என்பதை கிளிக் செய்து அதில் html/java Script என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதைக் கிளிக் செய்து .... காப்பி செய்த கோடை அந்த பாக்ஸில் போட்டு Save கொடுக்கவும்... அவ்வளவு தான்.
சகோ அசத்தலான பதிவு... அழகா சொல்லிருக்கீங்க... பேஸ்மட்டம் எப்பொழுது ஸ்டராங்கா இருக்கனும்னு சொல்லுவாங்க... குழந்தைகளையும் ஆரம்பத்திலேருந்து அவர்களை சரியாக பேணுவதில் முக்கியதுவம் கொடுத்தால்.. அவர்கள் எதிர்காலத்தில் ஜொலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை அருமையான விசங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநல்ல கருத்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துரு -- உங்கள் கட்டுரையை வாசிப்பதைக் கடினப் படுத்துகிறது.
இட்டாலிக்ஸ் இல்லாமல் -
சில இடங்களில் இடம் விட்டு எழுதினால் வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பு என்பது
ReplyDeleteஎவ்வளவு பெரிய மகத்தான விஷயம்.
மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்
தொடர்பதிவை கவிதையாகவே கலக்கிட்டீங்க!
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பற்றிய மிகவும் ஆழமான, மனோதத்துவ அஆவுடன் கூடிய பதிவு. மிக அருமை
ReplyDeleteஅனுபவப்பட்ட பதிவு.மிக மிக முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் அம்பாள்.வாசிப்பவர்கள் மனதில் பதிந்துகொள்வது நல்லது !
ReplyDeleteIthu Katturaiya illai Kavithaiya?
ReplyDeleteNalla mozhi nadai.
நல்லபதிவு வாழ்த்துகிறோம்! உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆதிரா
ReplyDeleteநன்றாகச் சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோதரி வரவிற்கும் வாழ்த்திற்கும் .
நம்பிக்கைபாண்டியன் :
ReplyDeleteஎல்லோரும் ரசிக்கும் குழந்தைகளின் உலகத்தையும், உள்ளத்தையும்,பெற்றோர்க்கான ஆலோசனையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!
மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
றமணி
ReplyDeleteஎதைச் சொன்னாலும் சிறப்பாகச் சொல்லுதல்
அம்பாளடியாளின் தனிச் சிறப்பு
இந்தப் பதிவும் விதிவிலக்கல்ல அருமை
வாழ்த்துக்கள்
த.ம ௧
மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்தும் வாழ்த்தும்
என் மனத்தைக் கவர்ந்தது .
விக்கியுலகம் :
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ!
உங்களுக்கும் என் நன்றிகள் சகோ
வரவிக்கும் கருத்திற்கும்
ரெவரி:
ReplyDeleteகுழந்தைகள் தின சிறப்பு பதிவு மிகவும் சிறப்பாய் அமைந்துவிட்டது...
குழந்தை வளர்ப்பு ஒரு கலை தான்...அதை கற்காமலே அத்தனை பெற்றோரும் கடைசி வரை இருந்துவிடுகிறோமோ என்பது என் கவலை...
வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
ஷர்மி :
ReplyDeleteபல குழந்தைகளை வளர்த்த அனுபவசாலி போல் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தங்கா...
உங்கள் பணி தொடரட்டும்.
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
k .s .k .raja
ReplyDeleteஅந்த குழந்தை போன் பேசும் படத்தில் உள்ள வசனங்கள் அருமை.....
குழந்தைப்பருவம் மிகவும் சிறப்பானது...மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் குழந்தையாக முடியாதா என்று மனது ஏங்குவது குழந்தைப்பருவத்துக்குத்தான்
மிக்க நன்றி சகோ வரவிற்கும் தங்கள் கருத்திற்கும் .
கணேஸ்:
ReplyDeleteஇயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு திறமை இருக்கும். அதை நாம்தான் கண்டறிந்து வளர்க்க வேண்டும். வற்புறுத்தி திணிப்பதால் கல்வி வராது... இப்படி பல நல்ல விஷயங்களை அருமையாகச் சொல்லியிருக்கீங்க. (இந்த தீம்ல நான் எழுதின சிறுகதை ஒண்ணு இருக்கு. அடுத்த பதிவா எதைப் போடறதுன்னு குழம்பிட்டிருந்த எனக்கு ஐடியாவும் கிடைச்சுட்டுது!) நன்றி!
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் .
ராஜி:
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பெற்றோர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம்.அதனை சரி வர செய்தல் என்பது சற்று கடினமான பணி போல் தோன்றினாலும் சிறிது முயன்று அவர்கள் பங்கை சரி வர அளித்தால் மொட்டாக இருந்த குழந்தைகள் பின்னாளில் நறுமணம் வீசுவார்கள்.அதற்குத் தகுந்த யோசனைகளுடன் ஒரு நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள்.முக்கியமாக குழந்தைகள் முன் வாக்குவாதம் செய்யாதிருத்தல்,உறவினர் பற்றி தவறான கருத்தை ஒப்பிக்காதிருத்தல்,சிறு வேலைகளில் பங்கேற்கச் செய்தல், உதவும் மனப்பான்மையை வளர்த்தல் போன்ற கருத்துக்கள் இன்றளவில் முக்கியமானவை.பகிர்விற்கு நன்றி
மிக்க நன்றி சகோ .விரிவாகக் கருத்திட்டுக் கௌரவித்தமைக்கு .
rufina rajkumar
ReplyDeleteஎங்கள் வீட்டு வாண்டு அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே " அ,ஆ , இ,ஈ" என்று பேசுவது கொள்ளை அழகு.
குழந்தைகள் துல்லியமான கண்ணாடிகள், கவனமாக இருக்க வேண்டும் WELL SAID!!
மிக்க நன்றி அம்மா தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .......
தமிழ்வாசி:
ReplyDeleteசகோ.... கவிதைக்கு கட்டுரையும் தெரியும்னு காட்டியிருகிங்க. அழகான கருத்துக்கள்.
ஆகா ...மிக்க நன்றி சகோ உங்கள் பாராட்டிற்கு .இனித் தொடர்ந்து கட்டுரை
எழுதவேண்டியதுதான் .
என் ராஜப் பாட்டை ராஜா :
ReplyDeleteநல்ல கருத்து .. நன்றி
மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .
இன்று என் வலையில்
ReplyDeleteஅவசியம் பார்க்கின்றேன் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
ராஜி:
ReplyDeleteபிள்ளைகளை நாம் எம்
தன்நலன் கருதாமல் அவர்களின் எதிகால நலன் கருதி மிக மிக
பொறுப்புடனும் வளர்ப்போமானால் அந்தப் பிள்ளைகளே நாளை
எம் பெயரையும் காப்பாற்றும் என்பதில் ஐயம் இல்லை .
>>>
மிகச்சரியான வரிகள். வாழ்த்துக்கள் சகோ. த ம 4
மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும் .
மகேந்திரன் :
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு என்பது
எவ்வளவு பெரிய மகத்தான விஷயம்.
மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.
மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
DRPKandaswamiPHD
ReplyDeleteஅம்மாவைப்பற்றி அப்பாவிடம் முறையிடும் குழந்தையின் படம் அப்படியே மனதைக் கவ்வுகிறது. மீதீயை அப்புறமாகப் படிக்கிறேன்.
மிக்க நன்றி ஐயா உங்கள் மனதைமட்டும் அல்ல என் மனதையும் கவர்ந்தது இந்தக் காட்சி .
நாஞ்சில் மனோ :
ReplyDeleteகுழந்தைகளுடன் அவர்கள் உலகத்தில் அவர்களுடன் வாழ்வது பேரானந்தம் இல்லையா...
உண்மைதான் சகோ....
நாஞ்சில் மனோ :
ReplyDeleteஎழுத்துளை கொஞ்சம் பத்தி பிரிச்சு போடுங்கப்பா...
சரி சகோ உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன் .மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் .
ஷேக் முஹைதீன்:
ReplyDeleteஇதைவிட அழகாக சொல்லமுடியுமா?சரியாக சொன்னீர்கள் சகோ!
வணக்கம்!.. புதிய உறவிற்கு என் வந்தணங்கள்.மிக்க நன்றி சகோ
உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் .உங்கள் வரவு
தொடர என் வாழ்த்துக்கள் .
வளரும் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்து
ReplyDeleteகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்
நல்ல பதிவு
புலவர் சா இராமாநுசம்
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .....
ரசிகன் :
ReplyDeleteநிதானமாக கைப் பிடித்து பக்குவமாக வழி நடத்தி செல்கிறீர்கள். உங்கள் நடை, ஒரு குழந்தைக்கு போதனை செய்வது போல அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
இதே தலைப்பில் நானும் எழுதி உள்ளேன். நேரமிருந்தால் வந்து பாருங்கள்.
மிக்க நன்றி சகோ .உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .அவசியம் உங்கள்
ஆக்கத்தினைப் பார்க்கின்றேன் .நன்றி பகிர்வுக்கு .....
அமைதிச் சாரல் :
ReplyDeleteஆஹா.. அசத்திட்டீங்க போங்க.. ஜூப்பரு.
நாலு பேரை நீங்களும் அழைச்சு தொடரச் செய்யுங்களேன் :-))
அவசியம் முயற்சிக்கின்றேன் சகோ .நீங்கள் எனக்குத் தந்த பணியை நிறைவேற்றி உங்களிடம் இருந்தும் ஏனைய உறவுகளிடம் இருந்தும் நன் மதிப்பைப் பெற்றுக்கொண்டேன் .இதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ .உங்கள் பணி சிறப்பாகத் தொடர வேண்டும் என்பதே என் ஆவலும் .
G .M .Balasupramaniyam
ReplyDeleteஅம்பாளடியாள் வணக்கம். இந்தக் கட்டுரை படித்தேன். மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது காணப்படும் குணாதிசயங்கள் அவர்களது மூன்றாம் வயதுக்குள்ளேயே நிர்ணயிக்கப் படுவதாக மன வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனை வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில் பதிவிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்களேன்.
வணக்கம் ஐயா உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .
அவசியம் தங்கள் ஆக்கத்தினைப் பார்க்கின்றேன் .நன்றி
பகிர்வுக்கு .
ராஜராஜேஸ்வரி :
ReplyDeleteமழலைகள் உலகமே மகத்தானது
தென்றல் போல் திங்கள் போல் இனிமையானது..
என்றென்றும் மழலைகளைப் போற்றி சரியான ஆக்கபூர்வமான வழிகளில் வளர்ப்போம்.
அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் அன்பு கலந்த நல் வாழ்த்திற்கும் .
angelin
ReplyDelete//எங்கு போனாலும் பிள்ளைகளின் விசயத்தில் பொறுமை அதிகம் வேண்டும் என்பதை எல்லாப் பெற்றோரும்
புரிந்துகொள்ள வேண்டும் .//
.அருமையாக எழுதியிருக்கீங்க .வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும் ....
ஷைலஜா :
ReplyDeleteஇயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓர் திறமை
கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம்
ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க
முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு
கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து
திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .
அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல் மிக
மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை
புரிய முடியாது .///
மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்...தொடர்பதிவில் இணைந்துகொண்டு அனைவரும் கூறும் கருத்துக்களும் மகத்தானதாகவே இருக்கிறது.
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் அன்பு கலந்த பாராட்டிற்கும் .
கருண் :
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
வாழ்த்துக்கள் சகோ..
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும்
வாழ்த்திற்கும் .......
மாயா உலகம் :
ReplyDeleteவணக்கம் சகோ உங்கள் தகவலின் துணையோடு இணைக்க வேண்டிய அந்த இரண்டு அலுவலும் நிறைவேற்றி விட்டேன் .மிக்க நன்றி சகோ என் வேண்டுகோளுக்கு இணங்கி மிக விரைவாக இந்தத் தகவலை வழங்கியமைக்கும் என் ஆக்கத்திற்கு கருத்திட்டுக் கௌரவித்தமைக்கும் !...........
அப்பு :
ReplyDeleteநல்ல கருத்துக்கள்..
வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துரு -- உங்கள் கட்டுரையை வாசிப்பதைக் கடினப் படுத்துகிறது.
இட்டாலிக்ஸ் இல்லாமல் -
சில இடங்களில் இடம் விட்டு எழுதினால் வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .அத்துடன் தாங்கள் சொன்ன ஆலோசனையை அவசியம் என் கருத்திற்கொண்டு செயல்படுகின்றேன் மன்னிக்கவும் சிரமம் கொடுத்தமைக்கு .
laksmi
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு என்பது
எவ்வளவு பெரிய மகத்தான விஷயம்.
மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்
வணக்கம் அம்மா தங்கள் வரவும் கருத்தும்
என் மனதை மகிழ வைத்தது .மிக்க நன்றி
தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
சென்னைப் பித்தன் :
ReplyDeleteதொடர்பதிவை கவிதையாகவே கலக்கிட்டீங்க!
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொன்னால் சரிதான் .
உங்கள் எழுத்துக்களை அதிகம் ரசிப்பவள் நான் .
ஆதலால் உங்கள் பாராட்டும் என் மனத்தைக்
கவர்ந்தது .நன்றி ஐயா வரவிற்கும் பாராட்டிற்கும் .
சிவகுமாரன் :
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பற்றிய மிகவும் ஆழமான, மனோதத்துவ அஆவுடன் கூடிய பதிவு. மிக அருமை
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் ........
ஹேமா :
ReplyDeleteஅனுபவப்பட்ட பதிவு.மிக மிக முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் அம்பாள்.வாசிப்பவர்கள் மனதில் பதிந்துகொள்வது நல்லது !
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் ......
துறைடேனியல்:
ReplyDeleteIthu Katturaiya illai Kavithaiya?
Nalla mozhi nadai.
வணக்கம் புதிய உறவுக்கு உங்கள் வரவும் பாராடும்
என் மனத்தைக் கவர்ந்தது .மிக்க நன்றி சகோ உங்கள்
வரவும் உறவும் தொடரட்டும் .
புதிய தென்றல் :
ReplyDeleteநல்லபதிவு வாழ்த்துகிறோம்! உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் ......
புதுமை பெண்ணே வந்தேன் ....வேலை பளு காரணமாக கருத்தும் ஓட்டும் இடவில்லை ...மற்றபடி பலமுறை வந்து தமிழ் பருகி சென்று உள்ளேன் ..நன்றியுடன் ..ரியாஸ்
ReplyDeleteமழலை உலகை படம் பிடித்து காட்டி விதம் அருமை
ReplyDeleteபதிவு பிரமாதம்.... தமிழ்மணம்-12... என்ன தேதி கூட தமிழில் இருக்கு settings சென்று மாற்றுங்கள்...
ReplyDelete