11/01/2011

வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க .....




வட்டிக்குக் கடன் எடுத்து 
வந்தவரைக்கும் ஆட்டம்போட்டுக் 
குட்டிச் சுவராய்ப் போனவனும் 
கொண்டாடினான் பூப்புனித நீராட்டு விழா!.....

இதில் மந்தையிலே  ஆட்டைப்போல 
மச மசவென்று திண்டவர்கள் பின் 
சொன்னவார்த்தை கேட்டால் சாமி அதை 
எனக்குத்  திரும்பிச்சொல்லக்கூட  முடியவில்லை!....

என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும் 
இத்தனை பெரும் எடுப்புத் தேவையா!...........
குத்தவச்ச பொண்ணுக்குக்கூட இதனால் 
மிகுந்த மனக்குழப்பம் வெளிநாடுகளிலே.....

சொல்லச் சொல்லக் கேக்காமல் 
சொடினைகளும் மணவறைகளும்
என்னய்யா நடக்குதிங்கே ஏட்டிக்குப் போட்டியாய்!...
எல்லாமே சினிமாவில் போல்.............!!!!!

போற போக்கில தென்னோலையும் வாளையும் 
செயற்கை முறையிலே செய்து வித்து 
வியாபாரி பிளைத்துக்கொள்வான் வேண்டியவன் 
காட்டுற கூத்துல பொண்ணுங்க 
வீட்டை விட்டே வெளியேறும்!...

ஏற்கனவே நடக்குற தப்புக்கு 
எளிதில் விளக்கம் சொல்ல முடியாமல் 
பள்ளிக்கூடம் எங்கும் நம் பிள்ளைகள் 
படும் அவஸ்த்தை அது ஒன்று  போதாதா !..... 

வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு 
வயசுக்கு வந்தாலும் தெரியாதுங்க இதேயே 
சொல்லிக்காட்டி விளம்பரம் போட்டால் 
இருக்கும் இடைஞ்சல் இன்னும் பெருகாதா...!!!

பின் முல்லைப் பூவில் வண்டைக் கண்டேன் 
மூடி மறைக்க நான் மறந்தேன் என்ன இது நாடு என்று 
எவர்தான் இங்கு துயர்ப்பட்டாலும் வராது 
போன மானம்  திரும்பி வரவே வராது!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

28 comments:

  1. பெண்மனம் பற்றி அருமையா சொல்லி இருக்கீங்க சகோ...இதை மாற்றல் வேண்டும் நன்றி!

    ReplyDelete
  2. ஆண்டாண்டுகாலமாய் நடை பெற்று வரும் இந்த பழக்கத்தை பெண்கள் நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும்..

    ReplyDelete
  3. சரியாய் சொன்னீர்கள்.விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே மாற்றம் காண முடியும்

    ReplyDelete
  4. அசல் அசத்தல் அம்பாள்.நான் இங்கு எங்கள் மக்களின் வாழ்க்கை முறையை நினைத்துக் குமுறும் அதே மனநிலையில் எழுதிருக்கிறீர்கள்.இன்னும் எழுதலாம் !

    ReplyDelete
  5. //
    வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு
    வயசுக்கு வந்தாலும் தெரியாதுங்க இதேயே
    சொல்லிக்காட்டி விளம்பரம் போட்டால்
    இருக்கும் இடைஞ்சல் இன்னும் பெருகாதா...!!!
    //
    ரொம்ப பெருகும்

    ReplyDelete
  6. நல்லா சொல்லுங்க...

    இந்த பழைய சம்பிராதாயங்கள் மாறனும்...

    ReplyDelete
  7. ஆமா, இதுக்கு எங்க ஊர்ல பெரிய திருவிழா மாதிரி கிடா எல்லாம் வெட்டுவாங்க...

    ReplyDelete
  8. நம் முன்னோர் செயல்களில் உண்மையான காரணத்தை நாம் பார்க்க தவறி விடுகிறோமோ?

    புது கோணம்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. மலையாளிகள் இதை சொல்லி என்னை கிண்டல் பண்ணுவது உண்டு, ஏன்னா நம்மாளுங்க கொட்டு மேளதாளம் அடிச்சி மேடை பண்ணி, மேடையில் பூப்பெய்திய பெண்ணை அமரவைக்கும் கொடுமை இப்பவும் நடக்கிறது, இது பெரிய அநியாயம்.....வேதனைகளை அற்புதமா கொட்டி இருக்கீங்க.....!!!

    ReplyDelete
  10. உங்கள் ஆதங்கம் புரிகிறது ..அருமையான கவி வரிகள்

    ReplyDelete
  11. அருமையாச் சொன்னீங்க!

    ReplyDelete
  12. அருமை சகோதரி
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  13. நல்ல கருத்து.... இப்பல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர் வேற.... :(

    ReplyDelete
  14. ////என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும்
    இத்தனை பெரும் எடுப்புத் தேவையா!...........////

    சரியாகச்சொன்னீர்கள் பல இடங்களில் இதை ஓரு பெருமையாக நினைப்பதை நான் பார்த்திருக்கின்றேன்

    ஆமா எடுப்பு என்பது பரவலாக ஈழத்தில் பேச்சு வழக்கில் உள்ள சொல் நீங்கள் ஈழத்தை சேர்ந்தவரா மேடம்....

    ReplyDelete
  15. நன்கு அலசி ஆராய்ந்து
    அனுபவித்து எழுதி இருக்கும் கவிதை...
    நல்லா இருக்கு சகோதரி.

    ReplyDelete
  16. நல்லா இருக்கு............

    ReplyDelete
  17. குறைந்து வருகிறது இந்த பழக்க வழக்கங்கள்.பெண்கள் இந்த பழைய சம்பிரதாயங்களை எதிர்க்கவேண்டும்.மற்றவர்கள் கலந்து கொள்ளவும் கூடாது.நன்றாக எடுத்து சொன்னிர்கள்

    ReplyDelete
  18. நல்ல விழிப்புணர்வு பதிவு !

    ReplyDelete
  19. உங்க கவிதையே ரொம்ப வித்தியாசமான முறையில் கொடுக்குறீங்க சகோ!

    ReplyDelete
  20. போற போக்கில தென்னோலையும் வாளையும்
    செயற்கை முறையிலே செய்து வித்து
    வியாபாரி பிளைத்துக்கொள்வான்//

    உண்மை தான் சகோ.. கல்யாணத்தில் பேப்பர் வாலை இலை.. வீடு தோட்டங்களில் பேப்பர் செடிகள்... இப்படி தென்னோலையும், வாளையும் செயற்கை முறையில் கூடிய சீக்கிரம் வரும் போல..

    ReplyDelete
  21. ஆதங்க கவிதை அருமை சகோ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஆமா உலவு ஓட்டு பட்டைய இணைக்க மாட்டேங்குறீங்களே!

    ReplyDelete
  23. அவசியம் சொல்லவேண்டிய கருத்தை
    மிக அழகாகச் சொல்லிப் போகும் தங்கள் பதிவு
    அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. சொல்லச் சொல்லக் கேக்காமல்
    சொடினைகளும் மணவறைகளும்
    என்னய்யா நடக்குதிங்கே ஏட்டிக்குப் போட்டியாய்!...
    எல்லாமே சினிமாவில் போல்.............!!!!!// சிறப்பான ஆக்கம் பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  25. இளம்தளிர் தடுமாறி யிருக்க
    இகலோக மறிந்துக் கொள்ள
    இதுவென்ன உலக செய்தியா
    இயல்பா யிருக்கும் மாற்றம்

    பெற்றவரும் உற்றவரும்
    மானம் போனதாய் நினையாது
    மாமன் சீர் செய்யலேயே
    மல்லுக்கல்லோ நிற்கிறார்

    மாமாங்க நடைமுறையை
    மாற்றிட சோதரி - இங்கு
    மறுமொழியிட்டோர் உறுதியேற்பின்
    மாற்றம் ஆரம்பமாயிடும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நல்ல கவிதை ,இவ்விழாவை இன்றைய சூழலில் தவறான நிலைக்கு கொண்டுசென்றுவிட்டோம் அதனால் தவிர்க்கலாம், மற்றபடி இவ்விழாவின் அன்றைய காலத்தில் கடைபிடிக்கப்பட்டதில் பயணுள்ள காரணங்கள் இருந்தன. இன்று பலரிடம் காரணங்களை தொலைத்து விட்டு சடங்குகளை மட்டுமே கடைபிடிக்கும் பழக்கம் அதிகரித்ததே குறைபாடு!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........