3/18/2014

அன்பே அன்பே என்றன் ஆருயிரே

அன்பே ...அன்பே ..என்றன் ஆருயிரே
அடைக்கலமான தென் ஓருயிரே ..
முன்பே முன்பே வருவாயா? -உயிர்
மூச்சினில் இன்பம் தருவாயா ?

செந்தேன் மழையில் நாம் குளிக்க
சேரும் இடத்தை அறிந்தவனே
உன் தேன் அமுத மொழி கேட்டு
உருகிய மனமிதை அறிவாயா?

                                        (  அன்பே ...அன்பே...) 

முள்ளோடு தான் கூடிப் பிறந்தேனே
முழு மூச்சாக உனக்காக வளர்ந்தேனே 
தள்ளாடும் வயதிற்குள் வருவாயா 
தளராமல் உனதன்பைத் தருவாயா ?....

வில்லேந்தும் வார்த்தைக்குள் அச்சப்பட்டு 
விழி மூடிக் காத்திருக்கும் முல்லை மொட்டு 
உன்னோடு தான் வாழும் வாழும் இங்கே
உலகத்தின் நியதிக்குள்  மாற்றம் எங்கே !

                                            (  அன்பே ...அன்பே...) 

விதி போட்ட கணக்கில் தான் விடை வெல்லுதே 
விழியோரம் உனதன்பு எனைக் கொல்லுதே... 
மதி கெட்டுப் போகாமல் வா வா அன்பே 
மலரோடு கூடிட இன்பம் தா தா அன்பே ...

செவ்வாடை காற்றோடு செர்ந்தாடுதே உனைச் 
சேராத மனமிங்கு தினம் வாடுதே ...........
பொன்னாடை நான் போர்த்தி மகிழும் வண்டே 
பொறுமைக்கும் இந்நாளில் எல்லை உண்டே ...

                                                (  அன்பே ...அன்பே...) 

உடல் தொட்டு மனம் தொட்டுப் போன அன்பே 
உருகாதோ உருகாதோ ...மனமுமிங்கே 
கரை தொட்டு விரைகின்ற அலையைப்  போல
காத்திருப்பேன் காத்திருப்பேன் வா வா அன்பே  ....

சிலையல்ல சீதைக்கும் நிகரானவள்
சிந்திக்கும் போதெல்லாம் நன்றானவள்
கலையாத கனவுக்குள் நின்றாடினேன்
காற்றோடு காற்றாகும் முன் வா வா அன்பே .......

                                                                 (முள்ளோடு தான்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

21 comments:

 1. அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அருமையான கவிதை வரிகள்
  ".........தள்ளாடும் வயதிற்குள் வருவாயா
  தளராமல் உனதன்பைத் தருவாயா ?...."

  ReplyDelete
 4. சிறப்பான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இன்காதல் பாட்டில் இதயம் நனைந்தாட
  என்றும் இனித்தே எழுதிடுவாய் - பொன்போல்
  புகழினிய பேறெல்லாம் பூக்கும் மலராய்
  இகத்தில் வளர்கின்றாய் இன்று !


  அழகிய பாடல் சகோ
  நெஞ்சினிக்க பாடி மகிழ்ந்தேன்
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
  3

  ReplyDelete
 6. வில்லேந்தும் வார்த்தைக்குள் அச்சப்பட்டு
  விழி மூடிக் காத்திருக்கும் முல்லை மொட்டு
  உன்னோடு தான் வாழும் வாழும் இங்கே
  உலகத்தின் நியதிக்குள் மாற்றம் எங்கே !

  காதல் கவிதை அருமை வாழ்த்துக்கள் தோழி.....!

  ReplyDelete
 7. "செவ்வாடை காற்றோடு செர்ந்தாடுதே ...... அருமை.

  ReplyDelete
 8. கவிதை மிக நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அருமை
  சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
 10. வில்லேந்தும் வார்த்தைக்குள் அச்சப்பட்டு
  விழி மூடிக் காத்திருக்கும் முல்லை மொட்டு
  உன்னோடு தான் வாழும் வாழும் இங்கே
  உலகத்தின் நியதிக்குள் மாற்றம் எங்கே !.//

  அருமை.. கவிநயம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றது.

  ReplyDelete
 11. அருமையான படம்.... சிறப்பான கவிதை. பாராட்டுகள்...

  த.ம. +1

  ReplyDelete
 12. #விழியோரம் உனதன்பு எனைக் கொல்லுதே..#
  காமனவன்அம்பு தைத்ததால் விழி மூட மறுக்கிறதோ ?
  த ம +1

  ReplyDelete
 13. அருமையான கவிதை!

  ReplyDelete
 14. கவிதை எழுதிய கவிப்பாடல் தித்திக்கிறது செங்கரும்பாய் அல்ல... செந்தேனாய்...

  ReplyDelete
 15. கவிதை எழுதிய கவிப்பாடல் தித்திக்கிறது செங்கரும்பாய் அல்ல... செந்தேனாய்...

  ReplyDelete
 16. சிறந்த பகிர்வு
  வரவேற்கிறேன்.

  ReplyDelete
 17. அன்பே ...அன்பே ..என்றன் ஆருயிரே ....
  அடைக்கலமான தென் ஓருயிரே ..
  முன்பே முன்பே வருவாயா ..உயிர்
  மூச்சினில் இன்பம் தருவாயா ?.......

  செந்தேன் மழையில் நாம் குளிக்க
  சேரும் இடத்தை அறிந்தவனே
  உன் தேன் அமுத மொழி கேட்டு
  உருகிய மனமிதை அறிவாயா ?...

  சந்தக்கவிதை!சிந்தையில் போட்ட விதை!

  ReplyDelete
 18. ஆருயிர் தோழி நானும் உனை நாடி அடைக்கலமானேன் கவி பாடி.. அருமை அருமை பா.

  ReplyDelete
 19. கவிதையும் அதற்கேற்ற படமும் மிக அருமை...நீங்கள் பதிவிட்ட உடனே பார்த்தேன் ஆனால் கருத்து இடவில்லை காரணம் நான் கலாய்த்து ஏதாவது பதிலிட அதன் பின் வருபவர்களும் அதனை ஒட்டியே கருத்துக்கள் இடுவார்கள். அதனால் இந்த நல்ல கவிதையின் முக்கியத்துவம் மாறிவிடும் என்பதால்தான் இந்த கருத்து லேட்டாக வருகிறது... பாராட்டுக்கள்

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........