3/27/2014

அக்கினி மேலே நடை நடந்து


அக்கினி மேலே நடை நடந்து
ஆதிசக்தி  அவள் வருகின்றாள்
பக்தியில் மெல்ல மணம் பரப்பி
பாளையத்தம்மா வருகின்றாள் ....!!
 
                                 ( அக்கினி மேலே)

புத்தியில் உறையும் தெய்வங்களைப் 
புவியினில் இங்கே நாம் கண்டோம்
சக்தியைக் கொடுக்கும் தாயிடத்தில்
சங்கடம் தீர்ந்திடும் வரம் பெற்றோம் ...

நித்திய சுமங்கலி அவளருளால்
நீண்டதோர் துயரை நாம் மறந்தோம்
வற்றிய கடலும் வளம் பெறவே -கலை
வாணியின் அருளை நாம் பெற்றோம் ...

                                              (  அக்கினி மேலே)
இத்தனை தெய்வமும் எதற்காக
ஈடில்லாச் செல்வம் தரும் அதற்காக ..
நித்தமும் வரும் துயர் யார் தடுப்பார்
நீதியைக் காக்கும் தாய் தடுப்பாள்

கொற்றவன் அவையினில் குழந்தையென
குலமகள் வந்தாள் விடையளித்தாள்
கற்றவர் யாவரும் வியப்புறவே
காரிருள் அகற்றி அவள் மறைந்தாள் !

                                             (  அக்கினி மேலே)
முற்றிய வினையை அகற்றி நிற்கும்
மும் மூர்த்தியின் தேவியர் மனம் மகிழ்ந்தால்
பற்றிய பாவம் அகன்றிடுமே
பாதையில் நல்லொளி தவன்றிடுமே ....

சித்திரை மாத நன்நாளில்
சீர் கொடுக்க வரும் தேவியரை
நித்திரை முழித்தென்றும்  நாம் அழைப்போம்
நீண்டதோர் துயரைத் தான் மறப்போம் ...

                                                 (  அக்கினி மேலே)
பற்பல யோசியம் சொல்லுதம்மா
பரா சக்தியின் அருளை யாசியம்மா ...
அற்புத சக்தியாள்  அவள் வருவாள் நல்
ஆசியும் தந்திங்கு மனம் மகிழ்வாள் ...

                                                   
                                                 (  அக்கினி மேலே)


(படங்கள் :கூகிளில் பெற்றது .நன்றி )                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

24 comments:

  1. சித்திரை மாதம் வருமுன்னே தேவியரை சிறப்பாக அழைத்து விட்டீர்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .

      Delete
  2. இதோ வந்துட்டேன் அக்கா! உனக்கு நானும் ஒரு தேவதைதானே!?

    ReplyDelete
    Replies
    1. அது சரி :)))) .மிக்க நன்றி சகோதரியே வருகைக்கும்
      கருத்திற்கும் .

      Delete
  3. பராசக்தியின் அருள் பாரினுள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! அருமையான பாடல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. பற்பல யோசியம் சொல்லுதம்மா
    பரா சக்தியின் அருளை யாசியம்மா ...
    அற்புத சக்தியாள் அவள் வருவாள் நல்
    ஆசியும் தந்திங்கு மனம் மகிழ்வாள் ...//

    கவிதை அருமை.

    பராசக்தியின் அருள் வேண்டி நின்றாள் யாதும் அவள் தருவாள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  5. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்......

    நல்ல கவிதை. பாராட்டுகள். த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  6. வெள்ளிக்கிழமையன்று மங்களகரமான பாடல்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

      Delete
  7. நம் அனைவருக்காகவும் பராசக்தியை அழைக்கும் தங்களுக்கு நன்றி. அன்னையின் அருளை நாம் பெறுவோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

      Delete
  8. முற்றிய வினையை அகற்றி நிற்கும்
    மும் மூர்த்தியின் தேவியர் மனம் மகிழ்ந்தால்
    பற்றிய பாவம் அகன்றிடுமே
    பாதையில் நல்லொளி தவன்றிடுமே ....

    உண்மை தான் தோழி தேவியர் கருணை கொண்டால் கவலை ஏதும் இன்றி வாழலாம்.மூவரும் உங்கள் வசம் தான் தோழி பாட்டாலேயே கட்டி வைத்திருகிறீர்களே. கலங்காமல் காத்திடுவார். அம்மா என்றாலே அடைக்கலம் நிச்சயம் கிடைக்கும்.வாழ்த்துக்கள் தோழி.....!.
    எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ்க.....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  9. படித்தேன். அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  10. அருமை அழகு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 6

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மொய்யிற்கும் :)

      Delete
  11. சந்தம் நிறைந்த அழகு கவிதை .ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  12. கவிதை
    அருமை
    ரசித்தேன்
    மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........