3/07/2014

கண்ணுக்குள் ஒளியான தேவதையே



கண்ணுக்குள் ஒளியான தேவதையே 
காரிருளைப் போக்கி ஒளி தாருமடி 
மண்ணுக்குள் போகும் உடல் வாடாமல் 
மனம் இரங்கி உனதருளைத் தாருமடி 
எண்ணுக்குள் அடங்காத துயரனைத்தும் 
என் தாயே உனதருளால் பயந்தோடும் 
பெண்ணுக்குள் நிறைந்த நற் பண்பெல்லாம் 
பெருக்கெடுக்கும் மருவத்தூர் அம்மாவே 

பாடாத பாட்டெல்லாம் நான் பாட 
பாட்டுடை நாயகியாய் நீ வேண்டும் 
தேடாத இன்ப சுகம் தேடி வர 
தேவி உன்றன் அருளாட்சி தங்க வேண்டும் 
நாடாத மனமெல்லாம் நாடும் வரை 
நான் பாடி மகிழ வேண்டும் உனதன்பைக் 
கோடாடி கோடி மக்கள் உணர்ந்திடவே 
கொட்டும் மழைச் சத்ததிற்குள் கெட்டிமேளமாய் !!

வட்ட வட்டக்    குடை பிடித்து    உன்னருகே 
வந்தமரும் மக்களுக்குச் சொந்தம் நீயென 
திட்ட வட்ட மாக ஒரு     எண்ணம்    வேண்டுமே 
தீவினையைப் போக்கி வரும் சக்தி உன்னிடம் 
பட்ட கடன் நான் மறவேன்  எந்நாளுமே 
பாதை மாறிப் போகும் அந்த நன்நாளிலும் 
தொட்ட தெல்லாம் துலங்கிடவே அருள் செய்பவள் 
தொடர்ந்திருக்க வேண்டும் எந்தன் யுகங்கள் யாவிலும்

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. தொட்ட தெல்லாம் துலங்கிடவே அருள் செய்பவள்
    தொடர்ந்திருக்க வேண்டும் எந்தன் யுகங்கள் யாவிலு
    ..>>>>
    கண்டிப்பாய் உடனிருப்பாள் தேவி!

    ReplyDelete
  2. பாடாத பாட்டெல்லாம் நான் பாட
    பாட்டுடை நாயகியாய் நீ வேண்டும்
    தேடாத இன்ப சுகம் தேடி வர
    தேவி உன்றன் அருளாட்சி தங்க வேண்டும்!..

    மனம் மயங்குகின்றது!.. அம்பாளடியாள் எனில் மறுபேச்சில்லை!..

    ReplyDelete
  3. /// நான் பாடி மகிழ வேண்டும் உனதன்பைக்
    கோடாடி கோடி மக்கள் உணர்ந்திடவே
    கொட்டும் மழைச் சத்ததிற்குள் கெட்டிமேளமாய் !! ///

    ஆகா... காத்திருக்கிறோம் அம்மா...

    மிகவும் ரசித்த வரிகள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்கள் வேண்டுதல் நிறைவேறும் !
    த ம 2

    ReplyDelete
  5. பாடாத பாட்டெல்லாம் நான் பாட
    பாட்டுடை நாயகியாய் நீ வேண்டும்

    ஆஹா என்ன ஒரு வேண்டுதல் மனமுருகி வேண்டிட மகளாகவே வருவாள் தாயே எல்லா யுகங்களிலும் அருகிருந்து காப்பாள்.
    வாழ்த்துக்கள் தோழி.......!

    ReplyDelete
  6. வெள்ளிக்கிழமையில் அன்னையின் துதிபாடும் அருமையான பாடல்! உங்கள் வேண்டுதல்களை சீக்கிரம் நிறைவேற்றட்டட்டும் அன்னை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. listen to your song here

    https://soundcloud.com/meenasury/maruvathooramma

    subbu thatha

    ReplyDelete
  8. மிக மிக அற்புதமான போற்றி
    படித்து மிக மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மருவத்தூர் அம்மா எப்போதும் துணை வரட்டும்! தேசிக்காய்யுடன்!கவிதை சந்தம் அழகு

    ReplyDelete
  10. பக்தி மணம் கமழும் அருமையான கவிதை

    ReplyDelete
  11. தீவினையைப் போக்கி வரும் சக்தி உன்னிடம்
    பட்ட கடன் நான் மறவேன் எந்நாளுமே
    பாதை மாறிப் போகும் அந்த நன்நாளிலும்
    தொட்ட தெல்லாம் துலங்கிடவே அருள் செய்பவள்
    தொடர்ந்திருக்க வேண்டும் எந்தன் யுகங்கள் யாவிலும்!!

    நிச்சயமாய் அவள் துணை இருப்பாள்! அவள் இல்லாமல் இந்த உலகம் அசையுமா?!!!!

    அருமை!

    த.ம.

    ReplyDelete
  12. வேண்டும் வரத்தில் வினையறுந் தேயோட
    ஆண்டாள் அடிகள் தொழு!

    அழகிய கவிதை வழமைபோல் கருத்துச் செறிவோடு
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் 8

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........