மழைத் துளி சொட்டச் சொட்ட
மனதில் ஆசை முட்ட முட்ட
உனக்காகக் கவிதை நூறு
அரங்கேறும் நேரம் இது
வளைந்தாடும் பெண்ணே உன்றன்
வளையோசை கேட்டால் என்ன!
தடுமாறும் நெஞ்சம் இங்கே
என்னைத் தாலாட்டும் கைகள் எங்கே?
மலைக் கோவில் மண்டபத்தில்
சிலையாகிப் போனதன்றோ!.
என் இசை கேட்டுத் தென்றல் காற்றாய்
எனக்குள்ளே வா வா பெண்ணே!
சுக ராகம் உன்னால்தானே
உருவாகும் எனக்குள் என்றும்
அறியாத பெண்ணா நீயும்
அடி போடி பைத்தியக்காரி
மனதுக்குள் தீயை மூட்டி
மறைவாக படகை ஒட்டி
விளையாட நினைக்கும் பெண்ணே
விடுவேனா உன்னை நானும்?
அழைக்காமல் வந்தால் என்ன?
அலைபோலே நீயும் அன்பே
இதமாக என்னைத் தீண்ட
இது போதும் சொர்க்கம் காண
வழி வேறு உண்டோ சொல்லு?
என் அழகிய செல்லக் கண்ணே!
கவி வர்மன் ஏங்குகின்றேன்!
காதலைத்தான் வேண்டுகின்றேன்
ஒரு முத்தம் அதில் யுத்தம்
நித்தம் நித்தம் தொடரட்டும்
அதில் சந்தம் தரும் ஆனந்தம் இது
போதுமடி பெண்ணே நீ வா வா என் முன்னே!
( மழைத் துளி சொட்டச் )

ஆஹா...
ReplyDeleteரசிக்க வைத்தது...
மிக்க நன்றி சகோ .
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
மிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .
Deleteஅழகான படலாக மாற்றக் கூடியதாக இருக்கிறது வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு
மிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .
Deleteகாதல் நிரம்பி வழியும் அழகிய படைப்பு ..
ReplyDeleteமிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் .
Deleteஅழகான காதல் கவிதை ..அருமை தோழி .
ReplyDeleteமிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் .
Deleteபாடலாகப் பாடிப்பார்த்தேன்..சந்தம் சரியாக இருக்கிறது..
ReplyDeleteமிக்க நன்றி சகோ .இந்த எதிர்பார்புகளுடந்தான் இந்தப்
Deleteபாடல் வரிகளை இயற்றி இங்கு தவழ விட்டேன் .தங்கள்
கருத்து மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது .மேலும்
நன்றிகள் சகோ வரவிற்கும் இனிய கருத்திற்கும் .
ஒவ்வொரு கண்ணியும் அருமையாக உள்ளது தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஒவ்வொரு கண்ணியும் அருமையாக உள்ளது தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.