10/02/2012

மலர்கொண்டு பூஜித்தாலும் மகிழ்வான நாள்தான் இன்று!...



அகிம்சையின் வழியில் வாங்கிய சுதந்திரம்
அடடா கிடக்குது காலுக்கடியினிலே¨!!!....
இதை வாங்கித் தந்த காந்தித் தாத்தா அழகாய்
சிரிக்கிறார் பார் ரூபாய் நோட்டினிலே !!!.....

இனி இவர் போலொரு மனிதரை இந்தப்
பாரதம் பெறுமோ எந்தநாளினிலும் !......
இவர் எழுதிய சத்திய சோதனை படித்தால்
இதயம் மூழ்கும் கண்நீரினிலே !...........

மனிதருள் சிறந்த மாணிக்கம் இவரை
மதித்தென்றும் உலகமே போற்றுகையில் இவர்
அருமையும் பெருமையும் தெரிந்த  மண்ணில்
அன்றாடம் நடக்கும் கூத்தினைப் பார் !!!!......

அரசியல் மோகம் அடிதடி இன்றி
எவருமே இங்கு ஆட்சி செய்யவில்லை
வறுமையின் சின்னம் அதைத் தகர்த்திட இங்கே
காந்திபோல் ஓர் குணம் எவர்க்கும் இல்லை !......

எளியதோர் தோற்றம் என்றுமே விரும்பிய
காந்தியின் உள்ளம் ஓர் தேன்கிண்ணம்
இதில் இனியவை மட்டும் பிறந்தன அதனால்
இவரைப் போற்றிட மனம் ஏங்கும் !..........

காந்தி பிறந்த நாள்  இன்றேனும் அந்தக்
கடவுள் சொன்னதைக் கேட்டு நட
நீ வாங்கிடும் லஞ்சப் பணத்தினில் கூட
வருவார் உன் கண் முன் எந்நாளும் !!!!........
ஏன் இவர் இப்படி உழைத்தாரோ அவை
எல்லாம் மக்கள் நன்மைக்கே !..........
யார் மதிக்கின்றார் இவர் கருத்தை
யாவையும் இன்று பொய்தானே !!!!.....

காந்தியின் உருவப் படம் அது  மட்டும்
அரச காரிய அறைகளில் தொங்குமடா
ஏன் இதை இங்கு  வைத்தனர் என்று
எவருமே சிந்திக்கத் தவறுகின்றார் !!!!.....

ஊழலில் சிறந்த நாடென்று இனியும்
உலகம் பழிக்கும் நிலை இருந்தால்
காந்தியின் பெயரும் மங்கிவிடும் அதனால்
களவுகள் என்றுமே செய்யாதே!.....
ஆயிரம் துன்பம் அனுபவித்தே அன்று
அடிமை விலங்கை உடைத்தெறிந்தார்
அந்த நீதிமான் வாங்கிய சுதந்திர பூமியை
இனியேனும் நின்மதியாக வாழவிடு!...

தாயிலும் சிறந்த பண்பினில் உயர்ந்த ஒரு
புண்ணிய ஜீவன் பிறந்த நாள் இதனை
பாரினில் உள்ள மக்கள் எல்லாம்
பகிர்ந்திட்டால் மனதினில் இன்பம் பொங்கிடுமே!!!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. காந்திஜியின் பிறந்தநாள் கவிதை அருமை! ஆயிரம் துன்பம் அனுபவித்தே என்று தொடங்கும் நாலுவரிகளை அனைவரும் உணர வேண்டும்!

    ReplyDelete

  2. கவிதை காந்திக்குச் சூட்டிய மணி மகுடம்!

    ReplyDelete
  3. காந்தி ஜெயந்தி சிறப்புக் கவிதை அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை... சிறப்புக் கவிதை மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........