பாற் கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அழகைக் கண்டு
பார் புகழும் தென்றல் காற்றே
பாடாயோ கவிதை ஒன்று !.....
நீல மலர் மாலை கோர்த்து என்
நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும்
ஏழு மலை தாண்டி வந்தும் இதை
அந்த இறைவனுக்கே சூடி விடு !....
கால நேரம் அவன் கையில்
கணம் பொழுதும் சுத்துகையில்
எம்மை ஆதரிக்கும் பெருமானுக்கு
இந்த அர்ச்சனைகள் மிகவும் நன்று !..
அவதாரம் பத்தெடுத்து உலகில்
எமை ஆளப் பிறந்த இறைவனைத்தான்
மனதாரப் பாடி இங்கு வாயார வாழ்துரைத்தால்
கனியாதோ எந்நாளும் கனிவான பொன்னாளாய்!...
துதி பாடு கண்ணனை எண்ணித்
துயில்கின்ற வேளையிலும் உனக்கு
இனிதான கனவு மெய்ப்படவே
எழுந்தருள்வான் எம் பெருமான் அங்கும்!.....
அரிதாரம் பூசாத அழகு மேனியான்
ஒளிக் கீற்று வீசத்தான் கண் விழித்து
இறைவா வா என் முன்னே என்று நீயும்
எழுந்தாடும் வண்ணம் இன்பம் தந்து
கலையாத சிந்தனை ஊற்றுக்குள்ளே
செங் கதிராக எந்நாளும் அமர்ந்திடுவான்
இவன் பாதம் தொழுதேற்றும் வரம் பெற்றால் பின்
அது போதும் உனக்கிங்கு வேறு என்ன வேண்டும்!....
நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை
தன் நிகரற்ற இறைவன் பாதம் தொழுமின்
உனைத் தேடி வரும் என்றும் வாழ்வுக்குகந்தவை
இதை உணராத மனிதர்க்கே வாழ்க்கை என்பது பெரும் சுமை!!!!........
பரந்தாமன் கவிதை அழகு. பரந்தாமனும் அழகு வடிவம் தானே .அழகான படங்களும் கூட
ReplyDeleteஅழகான வரிகள்... சிறப்புக் கவிதைக்கு நன்றி அம்மா... (TM 1)
ReplyDelete"நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை" இதை உணர்ந்தும் அதைத்தானே பெருதும் நாடி நிற்கின்றோம்.
ReplyDeleteபரந்தாமன் பாதம் பணிவோம்.
" நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை "
ReplyDeleteஇந்த வாசகம் எல்லோரும் உணர்ந்தால் சரி ,
நல்ல பகிர்வு ! நன்றி சகோதரி !