வணக்கம் என்அன்புக்கு இனிய உறவுகளே இன்றைய பதிப்பு இதுவரை
நான் எழுதிவந்த ஆக்கங்களுள் முற்றிலும் வித்தியாசமானது.என் மன
உணர்வுகளோடு தொடர்புடைய சில மறக்க முடியாத என் நினைவுகளைத்
தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இந்த அம்பாளடியாள் மிகவும் மகிழ்ச்சி
அடைகின்றாள்.அந்தவகையில் இன்றைய முதற்பதிப்பு நெடுந்தீவுபற்றியும்
அங்கு வாழ்ந்த ஒரு மாமனிதரைப்பற்றியும் நான் அறிந்த சிலவற்றைத்
தங்களுக்கு தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.அதன் அடிப்படையில்
நெடுந்தீவின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஸ்ரீமான். சுப்பிரமணியர்
நாகேந்திரர் அவர்களும் அவரது பாரியார் ஸ்ரீமதி . நாகேந்திரர் செல்லம்மா
அவர்களைப்பற்றிய தகவலும் இன்றைய எனது ஆக்கத்தில் இடம்பெற
இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவர்களைப்பற்றித்
தெரியாதவர்கள் ஈழத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்க முடியும்.
இருப்பினும் இவர்களைப்பற்றி என் வலைத்தளத்தில் குறிப்பிடுவதை
நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன்.காரணம் மக்களுக்காக
தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களுக்கு சேவை செய்வதையே
தம் வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த நெடுந்தீவின் வரலாற்று நாயகன், பெருந்தலைவன், நெடுந்தீவின் முதன் முதல் கிராமசபைத் தலைவராகவும் கிராமத் தலைமைக்காரராகவும் , சமாதானநீதவானாகவும் பணியாற்றியவர்.அதுமட்டும் அல்லாமல் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தை ஆரம்பித்து சொந்தச் செலவில் தற்காலிக பாடசாலையை அமைத்து வழங்கியவர்.மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்த உத்தமர் என்றும் நெடுந்தீவில்
நான்குமுறை கிராமசபைத் தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு அம்மக்களினது நன்மைகருதி போக்குவரத்துவசதி,கல்வி,சமயப்பணி, விவசாயம்போன்ற துறைகளில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்ப்படுத்தி மக்களின் மனதில் தனது இந்த அரிய சேவையினாலும் நற்குணத்தினாலும் கொடிவேல் என்று பெயர்பெற்ற இந்த மகானைப்போன்றே அவரது மனைவியாரும் ஈழத்தின் முதற்பெண் கிராமசபைத் தலைவியாக நெடுந்தீவு கிராமசபையால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பெற்று உலகில் நெடுந்தீவுக்குப்பெருமை சேர்த்தவர்என்பதும் அன்று மகாவித்தி யாலயத்தை நிரந்தர கட்டடமாக அமைக்க தனது காணியைத் தந்துதவியவர் என்பதும் நான் கேள்வியுற்ற சம்பவங்கள்.
மண்ணில் மலர்வு :1889 -11 -14 மண்ணில் மலர்வு 1900 - 04 -26
கிராமசபைத் தலைவராக 1932 -1935 கி .சபைத் தலைவியாக1941 .1944
இரண்டாம் முறை 1935 -1938 கி .சபைத் தலைவியாக1944 - 1948
மூன்றாம் முறை 1952 - 1956
நான்காம் முறை 1939 -1952
மண்ணில் உயர்வு: 1973 - 07 - 02 மண்ணில் உயர்வு: 1989 - 07 - 12
அது சரி இத்தனை தகவலுக்கும் இன்றையஎனது தலைப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா?...இருக்கின்றதே. உங்களுக்கு நன்கு தெரியும் எனக்கு கிறுக்கும் பழக்கம் அதிகம் உண்டு என்பது .அந்தவிசயம் எப்படியோ இந்தக் குடும்பத்தினருக்கு தெரியவந்ததனால் அவசரத்துக்கு நல்ல கவிஞர்கள் கிடைக்காதபட்சத்தில் இந்த மிளகுரசம் போதும் என்று எனக்கு ஒருசந்தர்ப்பத்தை வழங்கினார்கள். வழங்கிய தோடு மட்டும் நின்று விடாமல் கவிதை அருமையாக இருக்கின்றது என்றும் அதை நீயே வந்து பாடித் தரவேண்டும் என்றும் அந்தநெடுந்தீவு மண்ணுக்கு என்னை அழைத்தனர். பிறகு சொல்ல வேண்டுமா என் நிலையை!... கவிபாடும் தீவுக்கு என் முதற்கவிதை அரங்கேற்றம் அத்தோடு என் ஆட்டம் முற்றுப்புள்ளி பெற்று விடுமோ என்ற எனது மனநிலையை சொல்லி வேலை இல்லை!!!..... ஆனால் நான் தப்பித்துக் கொண்டேன். மாறாக அவர்கள் எனக்கு அளித்த கௌரவம், உபசரிப்பு அவைதான் இன்றும் நான் இவ்வளவு துணிச்சலாகக் கவிதைகளை எழுதக்காரணம். இப்போது சொல்லுங்கள் என் நீங்காத நினைவுகளில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளை என்றும் என்னால் மறக்க முடியுமா?... அதுமட்டும் அல்ல நான் பிறப்பதற்கு முன்னால்த்தோன்றி மறைந்த இந்த இரு புண்ணியயீவன்களின் சேவையைப் பாராட்டி அவர்களது உருவப் படத்தை அவர்கள் உருவாக்கிய மகாவித்தியாலயத்தில் திரைநீக்கம் செய்துவைத்து பலரது சிறந்த ஆக்கங்களுடன் எனது ஆக்கத்தையும் இணைத்து நூல்வெளியீடு செய்த அந்தநிகழ்வின்போது பலநூற்றுக் கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள்மாமேதைகளின் மத்தியில் துணிச் சலாக இந்த இருவரினது சேவைகளையும்,பெயரையும் கருப்பொருளாக வைத்துகவிதையை பாடலாகப் பாடிய அந்த நிகழ்வை நான் எவ்வாறு மறப்பேன்!..... இவ்வளவுதானா இல்லை இன்னும் நிறையவே இருக்கிறது. அவர்கள் மனம்போல இந்தசிறுதுரும்புடன் ஆடிப் பாடி மிக அழகாக உபசரித்து தங்கள் ஊரைச் சுற்றிக்காட்டினார்களே இதைநான் எவ்வாறு சொல்வேன்........மொத்தத்தில் என் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத சந்தோசத்தை அன்று நான் அனுபவித்தேன்.இதற்கு பல காரணங்கள் இருதாலும் இன்று இந்த ஆக்கத்தை நான் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.அதுதான் நன்றிக்கடன்.எனது இந்த ஆக்கத்தைக் காணும் ஒவ்வொருத்தர் இதயத்திலும் இந்த புண்ணிய யீவன்களின் நினைவுகள் ஒரு மீள் பதிவாக மலரவேண்டும் என்பதே என் ஆவல். அடுத்த பதிவில்எனது"கொடையில்சிறந்த கொடிவேல்"என்ற தலைப்பில் உருவான என் கவிதைகளை வெளியிடுகின்றேன் . வளமைபோல் தங்களின் கருத்துக்களையும், விருப்பத்தையும் தெரிவித்து இந்த பதிப்பை வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன். நன்றிஉறவுகளே.
enaku ithu puthiya thagaval .....
ReplyDeletethodarungal ....
vaalthukkal ....
puthumai pennae tamilil yelutha mudiyaathatharku manikkavum
மறக்க முடியாத
ReplyDeleteமறக்க கூடாத உண்மைச் சம்பவத்தை
எழுதியிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..
தங்களுடைய நன்றி மறவா பண்பு
தங்களை மேலும் உயர்த்தும்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
வணக்கம் சகோ,
ReplyDeleteஉங்களின் கவிதை உணர்விற்கு ஊக்கம் தரும் வகையில்- அரங்கில் இடம் கொடுத்து அபையில் அங்கீகாரம் பெற வைத்து, உங்கள் படைப்புக்களிற்குப் புதியதோர் வழியினை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்த பெரியோர்கள் பற்றிய நினைவுப் பகிர்வினைப் பகிர்ந்து நினைவினை மீட்டியிருக்கிறீங்க.
புலம் பெயர்ந்த பின்னரும், திரு- திருமதி கொடிவேல் பற்றிய நினைவுகளை மீட்டியிருப்பது, மண் வாசனையோடு இன்றும் உங்களோடு ஒன்றித்திருக்கும் உங்களின் நன்றி மறவாப் பண்பினை வெளிப்படுத்தி நிற்கிறது.
//நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று//
ReplyDeleteநினைவுகளின் நீண்ட
பயணங்களில்
நமை மீட்டுப்பார்ப்பவர்
ஏராளம்
அம்மீட்டுதலை
உலகமெங்கும் இசையாய்
பரப்புபவர் சிலரே!!
உங்களின் நன்றி மறவாத்தன்மை
மேலும் மெருகேற்றும்!!
வாழ்க வளமுடன்.
அன்பன்
மகேந்திரன்
enaku ithu puthiya thagaval .....
ReplyDeletethodarungal ....
vaalthukkal ....
puthumai pennae tamilil yelutha mudiyaathatharku manikkavum
இத்தனை ஆவலோடு என் ஆக்கங்களுக்கு
கருத்திடும் இந்தப் பண்பைக்கண்டு வியந்தேன்
இதில் எழுத்து எவ்வுருவில் இருந்தால் என்ன...
உங்களைப் போன்றவைகளின் கருத்துரைகள்தான்
என் ஆக்கங்களுக்கு மிகையான ஊக்கத்தைத்
தருகிறதே.மிக்க நன்றி சகோதரரே...........
மறக்க முடியாத
ReplyDeleteமறக்க கூடாத உண்மைச் சம்பவத்தை
எழுதியிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..
தங்களுடைய நன்றி மறவா பண்பு
தங்களை மேலும் உயர்த்தும்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்கள்
எனக்கும் சித்திக்கட்டும்!...........
வணக்கம் சகோ,
ReplyDeleteஉங்களின் கவிதை உணர்விற்கு ஊக்கம் தரும் வகையில்- அரங்கில் இடம் கொடுத்து அபையில் அங்கீகாரம் பெற வைத்து, உங்கள் படைப்புக்களிற்குப் புதியதோர் வழியினை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்த பெரியோர்கள் பற்றிய நினைவுப் பகிர்வினைப் பகிர்ந்து நினைவினை மீட்டியிருக்கிறீங்க.
புலம் பெயர்ந்த பின்னரும், திரு- திருமதி கொடிவேல் பற்றிய நினைவுகளை மீட்டியிருப்பது, மண் வாசனையோடு இன்றும் உங்களோடு ஒன்றித்திருக்கும் உங்களின் நன்றி மறவாப் பண்பினை வெளிப்படுத்தி நிற்கிறது.
நன்றி சகோதரரே இத்தனை பொறுப்புணர்வோடு என் ஆக்கத்திற்கு
கருத்திட்டுக் கௌரவித்தமைக்காக....
//நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று//
ReplyDeleteநினைவுகளின் நீண்ட
பயணங்களில்
நமை மீட்டுப்பார்ப்பவர்
ஏராளம்
அம்மீட்டுதலை
உலகமெங்கும் இசையாய்
பரப்புபவர் சிலரே!!
உங்களின் நன்றி மறவாத்தன்மை
மேலும் மெருகேற்றும்!!
வாழ்க வளமுடன்.
அன்பன்
மகேந்திரன்
நன்றி சகோதரரே தங்களின் வரவுக்கும் சிறப்பான கருத்துரைக்கும்..............