9/28/2013

அன்பு நிறைந்த நெஞ்சங்களே வாழ்த்துச் சொல்ல வாருங்கள்



பூவொன்று மலர்ந்ததென்று ஒரு 
பூந் தோட்டமே சிரிக்குது இங்கே 
வாவென்று அழைத்து எம்மோடு 
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள் உறவுகளே !!


தங்கப் பாதம் தவண்டு வரத்  
தரணி எங்கும் பூப் பூக்கும் 
எங்கள் அரும்பு நலமாக 
எல்லா வளமும் பெற வேண்டும் !

மங்காப் புகழும் கீர்த்தியும் 
மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்! 
பொங்கும் புன்னகை எந்நாளும்
பொலியப் பெற்ற சரஸ்வதியே !

அங்கம் ரோஜா இதழே தான் இதை 
அன்பாய் அணைத்திட நாமுள்ளோம் 
எந்தன் மருமகள் உன் வரவால்
எங்கள் வீடே சிரிக்கிறது .......

வண்ணக் கனவு மலர்ந்திங்கே 
வசந்த வாசலைத் திறக்கிறது இனி 
எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
எங்கள் வீட்டு எழில் அரசியே  நீ வாழியவே........


                                                         
                                                       இனிப்பான இதயத்தால் 
                                  இனியன சொல்லி வாழ்த்துங்கள் உறவுகளே !!



என்னை "அத்தை" என்று அழைத்திட ஒரு 
செல்ல மருமகள் பிறந்திருக்கிறாள் 
அவளை வாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .......



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அன்பால் என்னைக் கட்டிப் போட்டு பேரறிவால் நீயோ...



அன்பால் என்னைக் கட்டிப் போட்டு
பேரறிவால் நீயோ திட்டம் தீட்டு
வெண்பா எழுதி முடிப்பதற்குள்
உன்பால் என்னைச் சேர்த்து விடு ...

மண்ணும் பொன்னும்
மதியை மயக்கும்
உன்னை எண்ணும் பொழுதில்
உலகை மறக்கும் !!.........

தன்னந் தனிமையில் நின்றுகொண்டே
நான் தரையைப் பார்த்துப் பேசுகின்றேன்
எண்ணம் முழுதும் இறை நாமம் அதை
அதை எண்ணிக் களிக்குது என் சாமம் ...

விண்ணைச் சேரவும் பாதையில்லை
உன்னைக் காணவும் யோகமில்லை
என்னை ஏனோ சீண்டுகின்றாய்
எதை எதையோ எழுதச் சொல்லித் தூண்டுகின்றாய் !!

பொன்னில் வடித்த சிலை தானோ நீ
பேசாதிருந்தால் விடுவேனோ ......
அன்னப் பறவை போலுன்னை
அறியத் தந்த இறைவா சொல் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2013

happy birthday google-இனிதே வாழிய பல்லாண்டு


எண்ணற்ற கோடி மக்களின்
எண்ணங்களைச் சுமந்து நிற்கும்
வண்ணத் திரையே நீ
வாழிய வாழிய பல்லாண்டு !....

பல்சுவை விருந்ததனைப்
பகிர்ந்தளிக்கும் அனைவருக்கும்
உன் முகவரியே வரமாக
உருவெடுத்து வாழிய நீ ...........

செங்கதிரோன் போலிருந்து
செம்மையுறப் பணி புரிந்து
உன் திறனால் வெற்றி பெற்று
உலகெங்கும் வாழிய நீ ........

கூகுள் என்ற பெயர் கேட்டால்
குழந்தைகளும் மகிழ்ந்து குதிக்கும்
கணனியுலக நிலவே உனைக்கு மனம்
கசிந்துருகும் நல் வாழ்த்துக்கள் இங்கே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/22/2013

நிழலாய் என்றும் நீயிருந்தாய்


நிழலாய் என்றும்  நீயிருந்தாய்
நிஜமாய்  உன்னை நான் தொடர்ந்தேன்
நிழலும் நிஜமும் பிரியும் நேரம்
நின்மதி நிலைக்காதே!

உழலும் மனதைக் கேட்டுப் பார்
உண்மை உனக்கும்  புரியும் பார்
களவும் பொய்யும் கற்று மறவாக்
கண்கள் சொல்வதும் மெய்தானே?

வலியைத் தாங்கும் இதயம் என்ன
உன் போல் வலிமை நிறைந்ததா ?
என் வலியே நீதானடி பெண்ணே
ஏன் தான் வலிய வந்தாயடி ?

மனமே மனமே அழுவாதே நீ
மறந்தும் அவளை நினையாதே என
மறக்க நினைத்த நினைவெல்லாம் என்
மதியை வென்று கொன்றது ஏன்!

அன்பை முறிக்கும்  விஷம் எங்கே?
அதை அருந்தத் துடிக்குது மனம் இங்கே!
பெண்ணே என்னைத் தொடராதே இனி நீ
போகும் போதும் என்னை நினையாதே..

பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
இனியும்  தஞ்சாவூருப் பொம்மையடி நான்
தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..

எனக்கெனத் தந்த இதயமதை
அறுத்தெடுத்தெங்கோ போனவளே
என் உயிர் துடிப்பதனை அறிவாயோ?
இதற்கொரு நீதி  கிடையாதோ!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2013

செத்தும் சிவனடி சேராதார்



அற்ப மாயை உலகினில் பிறந்து 
அன்பைத் தவிர அனைத்தையும் உணர்ந்து  
சர்ப்பம் போல வயிறு வளத்தோர்
சாவிலும் நின்மதி அடைந்தது இல்லை !!...

முற்றும் துறந்த முனிவர்கள் எங்கே
முரண்பட வாழ்ந்த மனிதர்கள் எங்கே
கற்றும் நன்நெறி  தழுவிட மறந்தோர்
கயமை உணர்வினில் தான் திறன்பட நின்றார் ...

வற்றிக் கிடக்கும் வயிற்றைப் பார்த்ததும்
வளைந்து நெளிந்த பாதையை நோக்கும்
அற்பப் பிறவிகள் உயர்வதைக் கண்டு
அகம் அது இறைவனை வெறுப்பதும் நன்றோ ...!!!!

முன்வினைப் பயனதை மூட்டியே செல்லும் தன்
வினைப் பயனதை அறுப்பவன் இறைவன்...........
எவ்விதை இங்கே விதைத்து நின்றாயோ 
அவ்விதை அறுத்திட மறு பிறப்பது தோன்றும் !!

செய்வினை சூனியம் செய்திடத் துடிக்கும்
உன் மன வலிமை உறங்கிடும் பொழுதில்
தன்வினைப் பயனதை உணர்த்தி நிர்ப்பானே
சங்கரன் திருவடி தான் 
அசைந்திடும் சக்கரம் இப்புவி காண் .....!!!!!!


                                                                               
ஓம் நமசிவாய... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/09/2013

சுப்புத் தாத்தாவிற்கு என் நன்றி இதோ காணத் தவறாதீர்கள் !



அருங்கனியில் சிறந்த கனி எக்கனியோ 
அதனையுண்ட மகிழ்வினிலே அகம் குளிர்ந்து 
விரும்பி மீண்டும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றேன்
அதனையொத்த விநாயகனைத் துதி பாடும் குரலைக் காண வாரீர்..!!!


பாடியவர் :சுப்புத் தாத்தா 
http://menakasury.blogspot.ch/

தும்பிக்கையான் துணையிருக்கத்
துயர்கள் யாவும் மறையட்டும்
நம்பிக்கையே வாழ்வின் முதலாய்
எந்நாளும் இங்கே மலரட்டும் .........

அன்பும் அறமும் தழைத்திருக்க
ஆலய தரிசனம் தொடரட்டும் நாம்
நம்பும் வகையில் வாழ்க்கைச் சக்கரம்
நன்மையை நோக்கி நகரட்டும் ........

இன்பம் துன்பம் எதுவந்தாலும்
இதயம் சமநிலையடையட்டும்
இருளை அகற்றி ஒளியைப் பரப்பும்
இறைவன் நல்லருள் புரியட்டும் ...

தன்பின் தொடரும் உறவையெல்லாம்
தன்னுறவாக மதிக்கட்டும் மனிதன்
தானம் கொடுத்துத் தானும் உயர்ந்து
தரணியில் நன்மைகள் அடையட்டும்....//


பெரும் பேறே பெற்றிருந்தேன் முற்பிறவிதனில் அதனால் 
பின் தொடர்ந்தே  வந்தளித்த நல்லாசியிது ...........!!!!!!!
வரம் கொடுத்தாற் போல் நல்ல விநாயக சதுர்த்தியிலே 
வாழ்வளித்தார் சுப்புத் தாத்தா என் பாடலுக்கு ...!!!!!!!

விநாயகனே நல்லாசிதனைக் கொடுத்தது போல் 
விம்மி விம்மி நான் அழுதேன் பெற்ற மகிழ்வினாலே
இளையவர்கள் ஆயிரம் தான் போற்றினாலும் ஒரு 
முதியவரின் வாழ்த்தொன்றே வெற்றி தரும் .......... 

முதற் பாடல் முக்கண்ணன் முதல்வனுக்கே இதை 
முன்னொரு பொழுதும் நான் நினைக்கவில்லை 
எனக்காக என் ஜீவன் நீயல்லவோ தானாய் 
எங்கிருந்தோ தேடி வந்து  பாடிச் சென்றாய் ....!!!!

மறவேனே உன்றன் அன்பை  எந்நாளுமிங்கே
மலர் கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே
இனி யார் யார் தான் பாடினாலும் என் பாடல்களை 
இந்நிகழ்வைச் சொல்லாமல் செல்ல மாட்டேன் !!

வரமொன்று தந்தாயே சுப்புத் தாத்தா இதுவே 
வழித் துணையாய் அமையெட்டும் என் முயற்சிக்கெல்லாம் 
விழுந்தேனே உன்றன்  பாதக் கமலமதில்
வீணாக இவ்வாழ்த்தே வெற்றி தரும் ........

                                                                 
                                                                     
                                           

                                                நன்றி எங்கள் சுப்புத் தாத்தாவிற்கு.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.