நிழலாய் என்றும் நீயிருந்தாய்
நிஜமாய் உன்னை நான் தொடர்ந்தேன்
நிழலும் நிஜமும் பிரியும் நேரம்
நின்மதி நிலைக்காதே!
உழலும் மனதைக் கேட்டுப் பார்
உண்மை உனக்கும் புரியும் பார்
களவும் பொய்யும் கற்று மறவாக்
கண்கள் சொல்வதும் மெய்தானே?
வலியைத் தாங்கும் இதயம் என்ன
உன் போல் வலிமை நிறைந்ததா ?
என் வலியே நீதானடி பெண்ணே
ஏன் தான் வலிய வந்தாயடி ?
மனமே மனமே அழுவாதே நீ
மறந்தும் அவளை நினையாதே என
மறக்க நினைத்த நினைவெல்லாம் என்
மதியை வென்று கொன்றது ஏன்!
அன்பை முறிக்கும் விஷம் எங்கே?
அதை அருந்தத் துடிக்குது மனம் இங்கே!
பெண்ணே என்னைத் தொடராதே இனி நீ
போகும் போதும் என்னை நினையாதே..
பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
இனியும் தஞ்சாவூருப் பொம்மையடி நான்
தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..
எனக்கெனத் தந்த இதயமதை
அறுத்தெடுத்தெங்கோ போனவளே
என் உயிர் துடிப்பதனை அறிவாயோ?
இதற்கொரு நீதி கிடையாதோ!
வரிகள் - மனம் துடிதுடிக்கும் வலிகள்...
ReplyDelete//பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
ReplyDeleteபாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
என் உயிர் துடிப்பதனை அறிவாயோ ......
இதற்கொரு நீதி உன்னிடம் கிடையாதே ..........//
அருமையான பாடல் வரிகள்.
பாராட்டுக்கள்.
காதலே விஷம் தானே.
ReplyDeleteஇன்னொரு விஷம் கொடுக்கச்சொல்லி என்ன அது வேண்டுதலை?
அதுவும் சரி தான்.
ஒரு விஷத்தை இன்னொரு விஷம் தனது தானே
முறியடிக்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
வலியைத் தாங்கும் இதயம் என்ன
ReplyDeleteஉன் போல் வலிமை நிறைந்ததா ?..
என் வலியே நீதானடி பெண்ணே
ஏன் தான் வலிய வந்தாயடி ?..
சிறப்பான வரிகள்..
காதல் வேதனை படுத்தும் வலியை வரிகளில் உணர முடிந்தது! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
ReplyDeleteபாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
இனியும் தஞ்சாவூருப் பொம்மையடி நான்
தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..
அருமை! ஓசை நயம் !