9/27/2013

happy birthday google-இனிதே வாழிய பல்லாண்டு


எண்ணற்ற கோடி மக்களின்
எண்ணங்களைச் சுமந்து நிற்கும்
வண்ணத் திரையே நீ
வாழிய வாழிய பல்லாண்டு !....

பல்சுவை விருந்ததனைப்
பகிர்ந்தளிக்கும் அனைவருக்கும்
உன் முகவரியே வரமாக
உருவெடுத்து வாழிய நீ ...........

செங்கதிரோன் போலிருந்து
செம்மையுறப் பணி புரிந்து
உன் திறனால் வெற்றி பெற்று
உலகெங்கும் வாழிய நீ ........

கூகுள் என்ற பெயர் கேட்டால்
குழந்தைகளும் மகிழ்ந்து குதிக்கும்
கணனியுலக நிலவே உனைக்கு மனம்
கசிந்துருகும் நல் வாழ்த்துக்கள் இங்கே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2 comments:

  1. ஆம்.அனைவருமே வாழ்த்த வேண்டும்

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள்.

    //கூகுள் என்ற பெயர் கேட்டால்
    குழந்தைகளும் மகிழ்ந்து குதிக்கும்//

    ;)))))

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........