5/26/2013

மறக்க முடியாத நினைவு


மறக்க முடியாத நினைவு இதை
மறந்து தானாக வேண்டும்
பிரிக்க முடியாத உறவு இதைப்
பிரிந்து தானாக வேண்டும் என
எடுக்கும் முடிவால்
இதயம் வலிக்கும்
இதையும் அறிவார் யாரோ!
பொருள் கொடுத்து வாங்கு
பணம் கொடுத்து வாங்கு என்றும்
உயிரை வாங்காதே!

                         ( மறக்க முடியாத நினைவு..)

மனதின் நினைவை
அழிக்கும் போது
மலர்கள் தாங்காது!
உயிர் துடிக்கும் துடிப்பில்
உனது நினைப்பும் பெருகும் ஓயாது!

அழுது புலம்பும்
இதயம் அதற்க்கு
அமைதி இருக்காது
அது எடுக்கும் முடிவில்
துயரம் இருக்கும்
எதையும் நினைக்காது !

                        ( மறக்க முடியாத நினைவு)
கடலின் ஆழம்
உனக்குத் தெரியும்
உன் கணக்குப் பிழைக்காது!
அட இவளின் மனதை உணரத் தெரிந்தால்
இதுவும் நடக்காது!

உயிர் உயிரை வதைக்கும்
கொடிய நோயே
காதல் தான் இங்கே
இந்த விதியின் சதியை
உலகம் உணர்ந்தால்
மோதல் ஏனிங்கே ?
                             
                       ( மறக்க முடியாத நினைவு)
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

31 comments:

  1. அடாடா... சந்தத்துடன் அருமையான கவிதை! இசையமைத்துப் பாடினால் மனதில் நின்றுவிடும் என்றே தோன்றுகிறது. பாடல் சொன்ன கருத்தும் மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஏழை அம்பாளடியாளின் இதயத்தில்
      இருந்து ஒலித்த கானம் தான் இது கவிதை அல்ல .பாடல் இயற்றும்
      வல்லமை இருந்தால் போதாது அதை அரங்கேற்ற யோகம் வேண்டும்
      அது வரும் போது வரட்டும் என்று மனதில் எழும் சந்தங் கொண்டு
      இவ்வாறு பாடலை எழுதுகின்றேன் .மிக்க நன்றி ஐயா மிகவும் ரசித்துப் பாராட்டியமைக்கு .

      Delete
  2. /// இவளின் மனதை உணரத் தெரிந்தால்
    இதுவும் நடக்காது ///

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  3. நிரந்தரமோ, தற்காலிகமோ... பிரிவு என்றுமே மனத்துக்கு துயரம்தான். பிரிவின் வேதனையை வெளிப்படுத்தும் வரிகளில் அன்பின் ஆழத்தை உணர்கிறேன். பாராட்டுகள் அம்பாளடியாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. "சிறப்பான பாடல் " மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. விதியின் சதியை
    உலகம் உணர்ந்தால்
    மோதல் ஏனிங்கே ?...!!

    அருமை..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  6. உயிர் உயிரை வதைக்கும்
    கொடிய நோயே//காதல் காதல் .....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  7. அழகிய பாடல் தோழி. சகோ பாலகணேஷ் கூறியதுபோல மெட்டுப்போட்டு இசையமத்து பாடக்கேட்டால் உங்கள் கவிதை இருக்குமிடம் எங்கோ... ஆவன செய்யுங்கள். கேட்க ஆவலாயுள்ளது.
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் அந்தக் காலம் கனிந்து வராதா என்று
      என் மனதிலும் ஏக்கம் உள்ளது தோழி .....

      Delete
  8. படத்தேர்வும் படைப்பும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  9. உண்மை தான் உயிர் வதைக்கும் கொடிய நோயை ...ரசிக்கும் படி பாடலாக கொடுத்துட்டிங்க பாடிக்காட்டினால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் தோழி.

    ReplyDelete
    Replies
    1. பாடவா ?......பாடிருவன் :)) மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  10. உயிர் உயிரை வதைக்கும்
    கொடிய நோயே
    காதல் தான் இங்கே
    இந்த விதியின் சதியை
    உலகம் உணர்ந்தால்
    மோதல் ஏனிங்கே ?...!!

    உண்மை வரிகள் அம்மா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  11. உயிர் உயிரை வதைக்கும்
    கொடிய நோயே
    காதல் தான்//

    சுருக்கமான விளக்கமாயினும்
    அருமையான அற்புதமான விளக்கம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  12. ஆஹா அழகிய பாடல் கவிதை... மறக்க முடியாத நினைவுகள் ... மறக்க முடியாதவைதான்:).

    ReplyDelete
    Replies
    1. அப்போ பாடிக்கொண்டே இருங்கள் தோழி :)))

      Delete
  13. அழகான பாடல்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete

  14. வணக்கம்!

    மறக்க முடியா நினைவுகளால் நாளும்
    உறக்கம் தொலைத்தஉயிர்த் தோழி! - சிறக்கும்
    தமிழேந்தித் தந்தாய்! தவிக்கும் மனத்தை
    அமுதேந்தித் தந்தாய் அழைத்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      இனிக்கும் இன்பக் கருத்தாலே என் இதயம் தொட்டுச் சென்றவரே
      கவி வடிக்கும் உன்றன் நாவலே இட்ட கருத்தும் இங்கே தேன்
      தானே !மிக்க நன்றி ஐயா .

      Delete
  15. இந்த விதியின் சதியை
    உலகம் உணர்ந்தால்
    மோதல் ஏனிங்கே ?...!!

    அருமையான கவிதை.இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் !

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........