போற்றிடும் மகாகவி
உன் எழிற் கவிதையே
என்றும் எம் உயிராகும்!!!!.......
வன்முறை ஒழியவும்
வளம் பல பெருகவும்
பொன் எழுத்தாலே
புகுத்தினாய் நல் அறிவதை!!.....
இன்னமும் பாடிட
இனிக்குதே தேன் என !!!...
என்ன உன் ஞானம் !!!!...........
எழில் வனம் தோற்றிடும் ........
செந்தமிழ் காவலா
தீந்தமிழ் உன்னதா !!!......
கொண்டதோர் தாகம் அதனால்
கொட்டியதே கவிதைத் தேன் மழை¨.....
வென்றது வென்றது இன்றுமே
உன் பெயர் சொல்லியே
மகுடம் ஏற்குது எம் தமிழ்
கவிதைகள் கண்டீரோ!!!...
வெண் குடை நிழலில்
உன் சிலை வலம் வரும்
இன்னொரு நாளைக் கண்டிடவே
ஏங்குது எம் மனம் மகாகவியே!......
சாதிகள் ஒன்றென நீ முழங்க அன்று
வந்தது சங்கடம் உனக்கு பல நூறு!...
ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்
மத யானைபோல் துணிந்தங்கு நின்றாயே!!!..
மா தவம் செய்தோம் மாந்தரும் நாம்
மண்ணினில் சுதந்திரம் பெற்றிடவே
நீதியை நீ அன்று உரைத்ததனால்
நீங்கியதே பல அடிமை விலங்குகள் இங்கே!!!........
ஏழை எளிய மக்களுக்கும் உன்
உழைப்பால் நன்மை நீ தந்தாய்
நாளைய சந்ததி நல் வளம் பெறவே
எந்நாளும் கவிதை நீ வரைந்தாய் !!....
அதிலும் பாமர மக்களும் பயன்பெறவே
உன் பாட்டினில் புதுமையை நீ படைத்தாய்!...
அந்தத் தீவிர முயற்சியின் பயன் இன்று
திரளுது கடலலைபோல் புதுக் கவிதைகள் பார்!!....
ஆயிரம் மலர்கள் தூவியே உந்தன்
காலடியினைத் தொழ நாம் விரும்புகின்றோம்..
எம் தேவைகள் அறிந்த மானிடனே உயர்
தீந்தமிழால் உன்னைப் பாடுகின்றோம்!!.......
வாடிய பயிர்கழும் உயிர்த்தெழும் இன்று
வான்மழைபோல் உன் நினைவதனால்
கூடியே கும்மி கொட்டிடுவோம் எங்கள்
குலமது தழைக்க வழி வகுதவனே உனை நினைந்து!...
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
Deleteவெண் குடை நிழலில்
ReplyDeleteஉன் சிலை வலம் வரும்
இன்னொரு நாளைக் கண்டிடவே
ஏங்குது எம் மனம் மகாகவியே!......
எங்கள் மனமும் ஏங்கத்தான் செய்கிறது. அருமையான கவிதைக்கு நன்றி
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும்
Deleteஇனிய நற் கருத்திற்கும் .
மறக்கமுடியாத மகாகவி.
ReplyDeleteகவிதை நன்று.
மிக்க நன்றி முனைவரே தங்கள் வரவிக்கும்
Deleteபாராடிற்க்கும்
என்ன எழுதவதேன்றே தெரியவில்லை...
ReplyDeleteவீரமிகு வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
Deleteகவிதை நன்று , பாரதிக்கு வணக்கம்
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் .
Deleteகவிதை நன்று , பாரதிக்கு வணக்கம்
ReplyDeleteபாரதிக்கு சிறந்த பாமாலை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
Deleteஜாதியை வைத்து அரசியல் நடத்தும் இன்றைய நிலைமையில்
ReplyDeleteஜாதியே இல்லையாடி பாப்பா!! என்று அன்றே மக்களுக்கு கூறிய
பாரதியை நினைவு படுத்தியதற்கு நன்றி..
என் தளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பதிவு செய்து உள்ளேன்..
http://yayathin.blogspot.in/2012/09/blog-post_1647.html
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் .
Delete