துன்பம் துன்பம் துன்பம் என்றே
துவண்டு விழுதல் நன்றோ சொல்லு !...
இன்பமான வாழ்வு அதுவும் உந்தன்
மனதில்தான் உண்டெனக் கொள்ளு !....
வம்பு தும்பு பண்ணாமல் இடர்
வாட்டும் செயலை செய்யாமல்
என்றும் வாழக் கற்றுக் கொண்டால்
இதையம் அமைதி கொள்ளும் அதனால்!...
பட்ட துன்பம் மறந்து வாழ
பகவான் நினைவே பெரிதென எண்ணி
பத்து நிமிடம் தியானம் செய்தால்
மனம் பஞ்சாய் பறப்பதை உணர்வீரே !...
கெட்ட எண்ணம் நற் குடி கெடுக்கும்
கீழோர் செயலை நினைக்காதே ........
திட்டம் போட்டு தவறு இழைத்தால்
தீமை என்றும் விலகாதே !!..............
நல்ல மனதிற்கு சோதனைகள்
எந்நாளும் வருவது துயர்தானே !...
இந்த இன்னல் தீர்க்கும் வழிகளில் ஒன்று
இன்னும் இருளில் கிடப்பவரை நினைப்பதுவே!....
சோமாலியா !!!!!!...............
இந்தியா !!!!!.............
இலங்கை !!!!............
இங்கே ஆடம்பரமாய் வாழ முடியவில்லை
அழகு சேர்க்க மேலும் வழிகள் இல்லை
தேடிச் சென்ற இன்பம் கிட்டவில்லை
தீதே இந்த வாழ்க்கை என்றால்
உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....
ஒரு கச்சைத் துணியைக் கட்டிக் கொண்டும்
கஞ்சி கிடைத்தால் போதும் என்றே நல்ல
நெஞ்சம் இருந்தால் அந்த நினைப்புத் தோன்றும்
அதுவும் இல்லை என்றால் உன் துன்பம் என்றும் வீணே!..
படங்களுடன் பதிவைனைப் படிக்க
ReplyDeleteஅதிக தாக்கம் ஏற்படுத்திப்போகிறது
அனைவரும் அவசியம் எப்போதும்
மனதில் கொள்ளவேண்டிய
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு "
என்கிற கவியரசரின் எண்ணத்தை மிக மிக அழகாகச்
சொல்லிப்போகும் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா முதல் ஆளாக வந்து என் கவிதைக்கு
Deleteசிறப்பு சேர்த்த தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க
நன்றி ஐயா .
சிறப்பான கவிதை! தன்னைவிட தாழ்ந்தவரை நினைக்கும்போது தன் துன்பம் சிறிதாகிப் போகும்! இருப்பதில் மகிழ்ச்சி காண்பதே சிறப்பு என்ற கருத்தை கவிதையாக்கிய விதம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
Deleteவாழ்த்திற்கும் .
நல்ல கவிதை!
ReplyDeleteபடங்களும் அதற்கு ஏற்ற வரிகளின் வலிமையும், மனம் கொதிக்க வைக்கின்றன...
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .
Delete//பட்ட துன்பம் மறந்து வாழ
ReplyDeleteபகவான் நினைவே பெரிதென எண்ணி
பத்து நிமிடம் தியானம் செய்தால்
மனம் பஞ்சாய் பறப்பதை உணர்வீரே//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .
Deleteஉணவு தண்ணி இல்லாமல்
ReplyDeleteஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....
வேதனை சகோதரி !ம்ம்மம்மம்ம்ம்ம்
மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .
Deleteமனத்தை உருக்கும் வரிகளும் படங்களும் இன்று நாம் வாழும் வாழ்க்கையை ஒருமுறை நின்று நிதானித்துப் பார்க்கச் சொல்கின்றன. மனம் நெகிழ்த்தும் கவிதைக்குப் பாராட்டுகள் அம்பாளடியாள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteதன் தேசம் பற்றிய பற்றுள்ள யாருமே அகதி தேசங்களில் நின்மதியாய் இல்லை அம்பாள்.மனம் வலிக்கிறது....நிற்கதியாய் நிற்கிறோம் !
ReplyDeleteஅம்பாள் நீங்கள் என் தளத்தில் கேட்ட கேள்விக்கு...நீங்கள் நினைக்கும் நபர் நானில்லை சகோதரி !
தங்கள் வேதனை உணர முடிகிறது சகோதரி. கவலைகள்
Deleteமறந்து முடிந்தவரை மகிழ்வாய் நீங்கள் வாழ்வதே உங்களுக்கும்
உறவினர்களுக்கும் நன்மை பெயர்க்கும் .மிக்க நன்றி சகோ என்
கேள்விக்கு அன்பாடு பதில் பகிர்ந்துகொடமைக்கு .
இன்பமான வாழ்வு அதுவும் உந்தன்
ReplyDeleteமனதில்தான் உண்டெனக் கொள்ளு !....
அழகாகச் சொன்னீர்கள்..
யாருமே தொலைக்கவே இல்லை என்றாலும்
எல்லோருமே தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நிம்மதியை..
மிக்க நன்றி முனைவரே இனிய கருத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு.
Deleteஅருமை.... படங்கள் மனதைக் கலக்கம் கொள்ள வைத்தன....
ReplyDelete