9/21/2012

தேடு உனக்குள்ளேதான் அது ....மருதாணி போடாமலே
சிவக்கின்றதே கன்னம்
ஒரு தாவணி போட்ட
அந்நாள் முதல் !!!!..........

எழிலாய் நடை பயிலக் கற்றுக்கொண்டாள்
இதமாய் பேசும் அழகைப் பெற்றாள்
ஒரு தாய் உணர்த்தும் செயலைக் கூட
எளிதில் புரியும் ஆற்றல் பெற்றாள் !....

இதுதான் பருவ மாற்றம் என்றோ ....
எனக்கும் வியப்பை ஊட்டுதிங்கே !!!...
பூனையும்  நாயும் ஏனைய யீவன்களும்
தாய்மை அடைந்தால் தங்கப் பதுமை தானோ !!!....

யார் எவர் இதனைக்
கற்றுக் கொடுத்தார்!....
யாவையும் புதுமை இறைவன்
படைப்பில் என்றும் !!!!!..............

தீது நாம் பழித்தல் இங்கே  
தெய்வம் இல்லை என்றால்
இது எதுவும் நிகழாது என
கோடிடு மனதில் நீயும்

கொண்டு வந்த செல்வம் என்ன !!....
நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !..
ஒன்றும் இல்லை உலகினிலே
உயிர்கள் மீது காட்டும்  அன்பைத் தவிர ...

நாம் வந்ததற்கு மூன்று சாட்சி
எம்மை வாழ வைக்கும் மன சாட்சி
என்றும் பொழுதுகள் மகிழ்வாய் இருக்க
இனியவை  பேசு நீ அது போதும் !!..........

நொந்தவர் மனதை நோகடிக்கும் மாபெரும் 
நோக்கம் இவை என்றுமே தவறென்று
வந்தவர் யாவரும் அறிந்திருந்தால்
வரும் துயர் எல்லாம் நீங்கிடுமே!!..........

சிந்தனை செய் இதை நல் மனமே
தீங்கில்லை இதனால் சுகம் வருமே!...
நிந்தனை வேண்டீர் உலகினிலே
நிஜம் இல்லை எதுவும் என்ற பின்பும் ....

சண்டைகள் வேண்டாம் எமக்கென்றும்
சமத்துவம் இருந்தால் அது போதும் என
என்றிதனை  மனிதன் உணர்கின்றானோ
அன்றுதான் உலகம் அமைதி பெறும் ....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

 1. என் தேவதை பற்றிய உண்மை வரிகள் அருமை

  ReplyDelete
 2. கருத்துள்ள அருமை வரிகள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 3. //கொண்டு வந்த செல்வம் என்ன !!....
  நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !//

  ஒன்றுமில்லை.ஆனாலும் பாருங்கள் மனிதர்களை.. வேடிக்கையாக இருக்கிறது.

  ReplyDelete
 4. ம்ம்ம் நல்ல கவிதை சகோ

  ReplyDelete
 5. //கொண்டு வந்த செல்வம் என்ன !!....
  நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !..
  ஒன்றும் இல்லை உலகினிலே
  உயிர்கள் மீது காட்டும் அன்பைத் தவிர ...//

  அருமையான வரிகள் நண்பரே...

  எனது தளத்தில் என் காதல் க(வி)தை... 02

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........