ஊரு விட்டு ஊரு வந்து
உருப்படியாய் ஒரு வேலை செய்து
மாடி வீடு கட்டணுமாம் அவன்
மனசுக்குள்ள போட்ட கணக்கு இது!....
யாரு பெத்த பிள்ளையோ ஒரு
நாதியற்று அலைகிறான் என
வேவு பார்க்கும் நிலையில் இங்கே
வேகுது பார் அவன் உசிரு !..............
கோடி முறை சொன்னாலும் கொண்ட
கோலம் அதில் மாற்றம் இன்றி
தேடி இங்கே வருகின்றாரே!......
இவர்கள் திருந்துவது எக்காலம் !....
காடு வெட்டிப் பிழைத்தாலும்
கவலை இன்றி வாழலாம்
நம்ம நாடு போலதான் வருமா இங்கு
நாயாய் பேயாய் அலைகின்றோம்!...
ஓலைக் குடிசை நடுவினிலும்
உறக்கம் நெஞ்சைத் தழுவுமடா ...
அதற்கும் நாதியற்றுத் தானே நாமும்
நடுத்தெருவில் நிற்கின்றோம் ..........
ஓடி அலுத்த கால்களும்தான்
உள்ள பலத்தை இழந்ததிங்கே
குளிர் நாடு தந்த பரிசு இதனால்
குனிய நிமிர முடியவில்லை.....
பாதி வயசு முடிவதற்குள் நல்ல
பாட்டன் போல ஒரு தோற்றம்
இதில் காதில் பூவை வைக்கும் கூட்டம்
கண்டு தினமும் மனதில் வாட்டம் !...
ஆறுதலைத் தேடிப்போனால்
யார் வருவார் எம் எதிரினிலே
வேறு வழி இல்லையட தம்பி
விடியும் வரை இந்தச் சுவர்கள்
நடுவிநிலேதான் எம் வாழ்க்கை!!!!...........
அன்னிய தேச வாழ்வு குறைத்த அவலத்தை
ReplyDeleteஅழகாகவிவரித்துப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக அருமையான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிக அருமையான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமை... மிக்க நன்றி சகோ...
ReplyDelete(கரண்ட் கட்... இனி மாலை ஆறு மணிக்குத் தான்...)