எதுகை மோனை போலானாய்
வண்ணம் என்றும் குறையாத
வடி வேலா முருகா மால் மருகா
கிண்ணம் தேன் கிண்ணமடா
இனிக்கும் முகம் பால் வண்ணமடா
திண்ணம் உயரிய திண்ணமடா
உனை அறிந்தால் தமிழும் மின்னுமடா !!
பொன்னை நிகர்த்த மேனியனே
பொற் தமிழின் உயிரே காவியமே
உன்னை வணங்கித் துதி பாடும்
உணர்வில் வந்து கலந்து விடு
என்னை அறிந்த பெருமானே
ஏழ் பிறப்பும் உனக்கே உனக்காக
தென்னை மரம் போல் நானிருந்து
தேனாய் பாலாய் கவி வடிக்க
உருகும் உருகும் உயிர் உருகும்
உருளும் உலகம் அதை வணங்கும்
கருகும் மலரும் சிரிக்குமடா
கருணை நிறைந்த வடிவேலா
பருகும் பா அது வெண்பாவாய்
பருகத் தந்த உனதருளால்
முருகும் அங்கே குறையாமல்
முடிப்பேன் வடிப்பேன் நயம்படவே
வளரும் பயிராய் நானிங்கே
வளர்க்கும் தாயாய் நீ அங்கே
தளரும் நிலையது வாராமல்
தருவாய் ஞான ஒளியிங்கே
உளரும் மன நிலை தவிர்த்திடவே
உதிக்கும் கவிதை வரி வடிவம்
கிளரும் இன்ப உணர்வுகளைக்
கீற்றில் சிறந்த கீற்றாக
முருகன் அருளே பேரருளாம்
ஞான முத்திக்குகந்த நல்லருளாம்
அழகன் அவனே தமிழ்க் கடவுள்
அறிந்தாள் பாட்டி ஔவையும் தான்
குமரன் பெயரைச் சொல்லாத
நாளும் உண்டோ சொல்லிங்கே ?..
பரமன் பதத்தைப் பற்றிடினும்
பாட்டில் முருகன்தான் எங்கும் !!
என்னை அறிந்த பெருமானே
ஏழ் பிறப்பும் உனக்கே உனக்காக
தென்னை மரம் போல் நானிருந்து
தேனாய் பாலாய் கவி வடிக்க
உருகும் உருகும் உயிர் உருகும்
உருளும் உலகம் அதை வணங்கும்
கருகும் மலரும் சிரிக்குமடா
கருணை நிறைந்த வடிவேலா
பருகும் பா அது வெண்பாவாய்
பருகத் தந்த உனதருளால்
முருகும் அங்கே குறையாமல்
முடிப்பேன் வடிப்பேன் நயம்படவே
வளரும் பயிராய் நானிங்கே
வளர்க்கும் தாயாய் நீ அங்கே
தளரும் நிலையது வாராமல்
தருவாய் ஞான ஒளியிங்கே
உளரும் மன நிலை தவிர்த்திடவே
உதிக்கும் கவிதை வரி வடிவம்
கிளரும் இன்ப உணர்வுகளைக்
கீற்றில் சிறந்த கீற்றாக
முருகன் அருளே பேரருளாம்
ஞான முத்திக்குகந்த நல்லருளாம்
அழகன் அவனே தமிழ்க் கடவுள்
அறிந்தாள் பாட்டி ஔவையும் தான்
குமரன் பெயரைச் சொல்லாத
நாளும் உண்டோ சொல்லிங்கே ?..
பரமன் பதத்தைப் பற்றிடினும்
பாட்டில் முருகன்தான் எங்கும் !!
இருமுறை படித்து மகிழ்ந்தேன்
ReplyDeleteஅருமையான போற்றித் திரு அகவல்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த் நல்வாழ்த்துக்கள்
ரமணி ஐயா தங்கள் பொன்னான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி .தங்களின் கருத்தைக் கண்டு எனது உள்ளமும் மகிழ்ந்ததிங்கே .
Deleteமிக்க நன்றி ஐயா .
ReplyDeleteமனதை உருக வைக்கும் சிறப்பான வரிகள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா பாராட்டிற்கும் மனமுவந்த நல் வாழ்த்திற்கும் .
Deleteகுமரன் பெயரைச் சொல்லாத
ReplyDeleteநாளும் உண்டோ சொல்லிங்கே ?..
பரமன் பதத்தைப் பற்றிடினும்
பாட்டில் முருகன்தான் எங்கும் !!//
அருமையான முருகன் பாமாலை.
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் தீருமே! அவர் குடும்பம் தழைத்தோங்குமே!
குமரன் பெயரை சொல்லி உயர்வோம்.
அருமையான முருகன் பாமாலை.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி வருகைக்கும் சிறப்பான நல் வாழ்த்திற்கும் .
Deleteவளரும் பயிராய் நானிங்கே
ReplyDeleteவளர்க்கும் தாயாய் நீ அங்கே
தளரும் நிலையது வாராமல்
தருவாய் ஞான ஒளியிங்கே
உளரும் மன நிலை தவிர்த்திடவே
உதிக்கும் கவிதை வரி வடிவம்
கிளரும் இன்ப உணர்வுகளைக்
கீற்றில் சிறந்த கீற்றாக
பாக்கள் வடிக்க அன்பான வேண்டுதல்
அருளிடுவான் அய்யன் உன் இஷ்டம் போல் என்றும்
வார்த்தைகள் அடை மழை பொழிகிறதே.அருமை ரசித்தேன் ரசித்தேன் தோழி..!
வாழ்க வளமுடன்....!
மிக்க நன்றி அன்புத் தோழியே வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .
Deleteஅருமையான ஒரு முருகன் பாமாலையை அளித்ததற்கு மிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteபொற் தமிழின் உயிரே காவியமே
ReplyDeleteஎன தங்கத்தமிழ் முருகனை கொண்டாடிய
அருமையான கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஅட்டகாசமா சாந்த நயம் மிகுந்த அகவல்!
ReplyDeleteஅருமை மேடம்!
அழகன் அவனே தமிழ்க் கடவுள்
ReplyDeleteஅழகான சொல்லெடுத்து தொடுத்த சரம் வெகு சிறப்புங்க தோழி. வாழ்த்துக்கள்.
வாங்க வாங்க அன்புத் தோழியே தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிடா .
Delete"பொன்னை நிகர்த்த மேனியனே
ReplyDeleteபொற் தமிழின் உயிரே காவியமே" என
முருகனை விழிப்பதை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteசிறப்பான கவிதை.
ReplyDeleteமுருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....