வில்லேந்தும் விழியிரண்டில்
மொழிப் பயிற்சிதான் எதற்கு!
கல்லாரும் கற்றவரும்
கண்டு மயங்கும் பேரழகே!
முல்லைப் பூச் சூடி விட்டேன் என்
முன் அமர்ந்த பாவை உன்னைக்
கண்ணுக்குள் வைத்த நொடி
காதல் நெஞ்சில் பொங்குதடி!
நாணத்தை விட்டுத் தள்ளு
நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு
கானத்தை இசைக்கும் குயில் முன்
களியாட்டம் ஆடும் மயிலே!
ஊரெல்லாம் உன் பேச்சு
உனக்குள் தான் என் மூச்சு
காதோரம் சொல்வேன் கேள்
களிப்பான செய்தியொன்று
மாதவத்தால் வந்தவளே தேன்
மாங்கனி போல் சுவைப்பவளே
ஈருடலில் ஓருயிராய் நாம்
இணைந்திடத்தான் சம்மதமா ?....
ஓவியக் கவிதை (அம்பாளடியாள் )
வணக்கம் உறவுகளே !
இந்தக் கவிதையானது சென்ற வாரம் சகோதரரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் http://venkatnagaraj.blogspot.com/2013/12/6.html ஓவியக் கவிதை
அழைப்பை ஏற்று நான் எழுதிய கவிதை .இதனைக் கண்டு ரசித்துப்
பாராட்டியவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் என் மனமார்ந்த
நன்றியினைத் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .
மிக்க நன்றி உறவுகளே !
ஓவியக்கவிதை மிக அருமையான உவமைகள் கண்டு ரசித்தேன்.வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதை படத்துக்குஅமைவாக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம் சகோதரியாரே, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் தங்களின் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஓவியமும் அழகு..
ReplyDeleteஓவியக் கவிதையும் அழகு..
கவித்துவமான வரிகள்!..
மாதவத்தால் வந்தவளே தேன்
ReplyDeleteமாங்கனி போல் சுவைப்பவளே///ஆஹா.......அற்புதம்
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteகானத்தை இசைக்கும் குயில் முன்
ReplyDeleteகளியாட்டம் ஆடும் மயிலாய் அழகான கவிதை ..! பாராட்டுக்கள்..!
என் அழைப்பினை ஏற்று கவிதை படைத்தமைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள். சிறப்பான கவிதை.
ReplyDeleteஅகமகிழத் தந்த அருமையான கவிதை!
ReplyDeleteஅங்கும் வாழ்த்தினேன்! இங்கும் தொடர்ந்தேன்..
இனிய வாழ்த்துக்கள் தோழி!
மிக்க நன்றி தோழி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Delete
ReplyDeleteவணக்கம்!
படத்திற்குப் பாப்படைத்த பண்புடைய அப்பாள்
குடத்திற்குள் இட்டவிளக் கு
வணக்கம் !
Deleteகுடத்தினில் இட்ட விளக்கையும் கொண்டாடும் அன்பிற்குத்
தலை வணங்குகின்றேன் ஐயா !
//மாதவத்தால் வந்தவளே தேன்
ReplyDeleteமாங்கனி போல் சுவைப்பவளே//
அருமை அருமை. ....... அருமையோ அருமையான வரிகள். ;)))))
ஆமாம்....... நான் என் பதிவினில் தங்களுக்கு இன்று மேங்கோ ஜூஸ் கொடுத்துள்ளேன். பருக வர ஏன் இந்த தாமதமோ? அன்புடன் VGK
மிக்க நன்றி ஐயா என்னைப் பாராட்டுவதில் கூட எத்தனை பேரானந்தம் தங்களுக்கு !! ........மன்னிக்க வேண்டும் ஐயா இப்போது சுவிஸ் நாட்டில் விடுமுறை காலம் ஆதலால் ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் :))அருமையான பகிர்வினைப் பார்த்தேன் வியந்தேன் ஆதலால் மேலும் மேலும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன் .மிக்க நன்றி ஐயா .
Deleteஅழகான கவிதை
ReplyDeleteசிறந்த பகிர்வு
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஓவியக் கவிதை இனிமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஓவியத்திற்கேற்ற அருமையான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deletetha.ma 8
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஐயா .
Deleteஓவியம் கண்டு வடித்த காவியம்
ReplyDeleteவண்ணமயமாய் தோன்றிற்று
அருமை தோழி மிக்க நன்றி ...! பாராட்டடுக்களும் வாழ்த்துக்களும்....!