1/09/2014

வஞ்சர மீனே வஞ்சர மீனே




வஞ்சர மீனே
வஞ்சர மீனே
வழுக்கி ஓடாதே...
வலுவிழந்த எந்தன் கைகளைச்
சுழுக்கி ஓடாதே ......

கொஞ்சிடும் மழலைப்
பூக்களெல்லாம்
குவிந்து விட்டாரே .......
கொட்டிடும் மேளச்
சத்தத்தைக் கேட்கப்
பாக்கள் தந்தாரே .......

மிஞ்சிடும் துணியை
நெஞ்சினில் போட்டு
மூடி வைத்தவளே!
பஞ்சணை மீது
உன் கதை கேட்க
பக்குவம் சொல்லாயோ?

எட்டடி பாயப் பத்தடி பாயும்
தோழி நீ தானே!
என்னைக் கட்டிய கூந்தலில்
பூவைப் போல
பொத்தியே வைத்தாயே!

முந்திரிக் கொட்ட மாமா உன்ன
முழுங்கப் போறேண்டி
பந்தியில் வைத்தொரு
தாலியைக்  கட்டி புதுப்
பாடம் சொல்வேன்டி .

சித்திரை வந்ததும்
சீர் கொடுக்கச்
சேதி சொல்லடி ஓய்.......
அந்தக் கத்தரிப் பூக்கலர்
சேலையைக்  கட்டியுன்
அழகை நான் காண ...

                                     (வஞ்சர மீனே )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

36 comments:


  1. வணக்கம்!

    தமிழ்மணம் 1

    கொஞ்சும் தமிழில் கொடுத்த கவியிசையில்
    நெஞ்சம் நெகிழும் நிலைத்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா மனம் நிறைந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  2. காதல் சுவை 'நனி சொட்டச் சொட்ட' படைக்கப்பட்ட கவிதை. இசையமைத்துப் பாடினால் சுவையாக இருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. நிட்சயமாக தங்களின் இந்த ஆவலும் வெகு விரைவில் ஈடேற வேண்டும் என்பதே எனது லட்சியமும் .மிக்க நன்றி ஐயா வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டிற்கும் .

      Delete
  3. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதில் தித்திக்கு.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இந்த வாழ்த்திற்கும் .

      Delete
  4. அற்புதமான கவிதை
    படிக்கப் படிக்க மனம் துள்ளலாட்டம் போட்டது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி ஐயா மனம் நிறைந்த வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. பாடல் வரிகள் ரசிக்கத்தக்கவை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. முந்திரிக் கொட்ட மாமா உன்ன
    முழுங்கப் போறேண்டி?????

    ReplyDelete
    Replies
    1. அது வேறு ஒன்றுமில்லை சகோதரா :))
      எதற்கு எடுத்தாலும் முந்திக்கொள்பவர்களை
      முந்திரிக்கொட்டை என்று அழைப்பது வழக்கம்
      பாடல் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக
      நாயகி வைத்த பட்டப் பெயரையே நாயகன் இப்போதும்
      உபயோகித்துப் பாடுவது போல என் பாடலிலும் புதுமை செய்தேன் அவ்வளவு தான் :)))) மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  7. இதோ இங்கேயும் ஒரு லைக்....!

    ReplyDelete
  8. அதே தான் ஐயா எங்கு பார்த்தாலும் அதே லைக் லைக் :)))))

    ReplyDelete
  9. //அந்தக் கத்தரிப் பூக்களர்
    சேலையைக் கட்டியுன்
    அழகை நான் காண ...//

    ;))))) ஆஹா ! அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். வழக்கத்திற்கு மாறாக வித்யாசமானதோர் கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள். ;)))))

    ஆனாலும் நான் இதற்கு மேங்கோ ஜூஸ் தரப்போவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. காரணம் புரியவில்லை ஆனாலும் இந்த மங்கோ ஜூஸை நானும் விடப்போவதில்லை :))))))

      Delete
    2. தலைப்பில் எழுதியுள்ள ஓர் ஜந்து எனக்குப் பிடிப்பது இல்லை.

      தமிழில் ஏற்பட்டுள்ள ஓர் எழுத்துப் பிழைக்காகவும், ப்யூர் வெஜிடேரியன் ஆன எனக்குப் பிடிக்காத தலைப்புக்காகவும் மாங்கோ ஜூஸ் மறுக்கப்படுகிறது. ;)))))

      Delete
    3. இதெல்லாம் வஞ்சர மீனால வந்த வினை யாருக்குத் தெரியும் நீங்க
      மீனைச் சாப்பிட மாட்டீர்கள் என்று ?:.......:)))) மழலை என்று தான்
      நான் எழுதினேன் google மாமாவும் மீனும் எனக்கு வர இருந்த
      மங்கோ ஜூஸை இப்படித் தடுத்து விட்டார்களே :)))))))))))))))

      Delete
  10. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  11. அருமையான பாடல் வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  12. அருமையான பாடல்
    ரசித்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  13. வஞ்சரமீன் வழுக்காமல் தந்த காதல் கவிதை இனிமை

    நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  14. வஞ்சிரமீனே வஞ்சிரமீனே கலக்கல்,....
    இனிமையான கவிதை... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  15. சந்தநயத்தோடு மனம் வசீகரிக்கும் ஒரு அழகான காதற்பாடல். ரசித்தேன். பாராட்டுகள் அம்பாளடியாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  16. கவிதை அருமை.
    தையில் கொடுக்கவேண்டியது தானே சீர்!
    சித்திரை வரை காத்து இருக்க வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. :))))))) அதுவும் சரி தான் எதற்காக காத்திருக்க வேண்டும்?... :)))))
      பாடல் வரிகளுக்குச் சந்தம் முக்கியமாச்சே அதற்காகத் தான்
      இந்த இழுத்தடிப்பு :)))) .மிக்க நன்றி தோழி வருகைக்கும்
      பாராட்டிற்கும் .

      Delete
  17. சிறந்த கற்பனை ஓட்டம்
    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  18. படிக்க ஆரம்பித்த உடனே பாடிப் பார்த்தேன்! :) நல்ல பாடல். பாராட்டுகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........