4/27/2017

சிற்பங்கள் கண் திறந்தால்!







சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------

சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்! 
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!

மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்! 
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்! 
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே! 
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே! 

முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!

இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை 
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால் 
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!

செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய் 
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும் 
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. அருமை சகோ
    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிற்பங்கள்கூட கண் திறந்திடும் போல. ஆனா, நீதான் கண் திறக்க மாட்டேங்குறேக்கா. நம்மூட்டுக்கு வரவே இல்லியே

    ReplyDelete
  3. சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
    சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!.......அருமை.

    ReplyDelete
  4. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    வழக்கம்போல உங்கள் பாணியில் அருமையான கவிதை.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........