மின்னலாய்த் திரிந்தவனே ஓர்
மெழுகுபோல் உருகியதென்ன ....!!!
விண்ணும் மண்ணும் அதிர உன்
உறவுகள் அழுத குரல் கேட்டாயோ ....
கண்ணை மூடித் தூங்குவதற்குக்
காலம் இதுவென யாருரைத்தார்!.....
வேலும் மயிலும் உடையவனோ ...
உனற்கு மிகவும் வேண்டியவனோ !.....
ஊரைத் தேடி உறவு சேர்த்தாய்
அந்த ஊரே உன்னைத் தேடி வந்த வேளை
நீ யாரைத் தேடிப் பறந்து சென்றாய் ......!!!
கல்யாண மாலை சூட்டிக்
காளை உன்னை அலங்கரித்து
ஊரெல்லாம் பாட்டிசைக்க
உறவெல்லாம் வாழ்த்துரைக்க
ஊர்வலம் நீ வருவாய் என்று
உள்ளத்தில்க் கனவு மலர
மணக்கோலம் துறந்து நீயும்
பிணக்கோலம் பூண்டதேனோ...!!!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
சுற்றம் வாழ்த்த உனக்கொரு
துணையொன்று வரும் முன்னே
சுன்னம் இடித்து இங்கே சொர்க்கத்துக்கு
வழியனுப்ப என்ன அவசரமோ
இந்த சின்ன வயதினிலே.................!!!
முத்தான புன் சிரிப்பால் எங்கள்
முழு மனதையும் கவர்ந்தவனே
நித்தமும் உன் நினைப்பில் வாடுகின்றோம்
நீ மீண்டும் வரவேண்டும் என்று
ஆழ்கடலில் சங்கொலிபோல்
அடிமனதில் வேதனையுடன்
துடி துடிக்கக் காத்திருக்கும்
உன் உறவுகளின் வேதனை தீர
ஆண்டொன்று சென்றதென்று
அயர்ந்து நீயும் எழுந்து எம் முன்
மீண்டும் வந்து பிறந்துவிடு
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....
கடந்த ஓராண்டிற்கு முன் இருபத்தைந்து வயதில்
ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்த என் உடன்பிறவா
அருமைச் சகோதரன்(முருக பக்தன்) குமரேசன்
நிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச்
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி ....
//ஆண்டொன்று சென்றதென்று
ReplyDeleteஅயர்ந்து நீயும் எழுந்து எம் முன்
மீண்டும் வந்து பிறந்துவிடு
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....//
வாழ்வின் ஓட்டத்துள் லயித்து பலவிடயங்களை மறந்திடினும் நம்மை விட்டுச் சென்ற சொந்தங்களின் நிலைவல்கள் நெஞ்சுள் எழுப்பும் ஆறா துயரினை அழகாக படம்பிடிக்கிறது உங்கள் கவிதை. நிர்மலின் ஆத்ம சாந்திக்கும், சொந்தங்களின் மன அமைதிக்கும் எமது பிரார்த்தனைகள்...
துயரத்தின் வலியினை பகிர்துள்ளீர்கள். நிர்மலன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் .
ReplyDeleteநிர்மலன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் .
ReplyDeleteஅன்பின் உறையுள்
ReplyDeleteஇனியவர் நிர்மலன்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை இறைஞ்சுகிறேன்....
உங்கள் துயரம் துடைத்திட இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நிர்மலனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteசாந்தி,சாந்தி,சாந்தி
ReplyDeleteநிர்மலன் ஆத்மா சாந்தியடையவும், உங்களின் மனது அமைதியடையவும் இறைவனை வேண்டுகிறேன் மேடம்!
ReplyDeleteமனம் அமைதி பெற வேண்டுகிறேன்
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
நேரில் பாராது படத்தைப் பார்க்கிற எங்களுக்கே
ReplyDeleteகாலனின் கொடுமை கண்டு மனம் கொதித்துப் போகிறதே
நீங்களும் உங்கள் உறவுகளும் எப்படித்தான்
இந்தத் துயரை தாங்கிக் கொண்டீர்களோ !
மனம் கலங்கச் செய்து போகும் பதிவு
த.ம 6
ReplyDeleteஅவரது ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போம்
ReplyDeleteசகோதரனின் ஆத்மா சாந்தியடையவும்,உங்கள் மன ஆறுதலையும் இறைவன் அளிப்பாராக ! மனம் கனத்து விட்டது .
ReplyDeleteஉங்கள் துக்கம் பகிர்ந்து கொள்ளும் ,
கோவை சக்தி
ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஅனுதாபங்கள்,ஆறுதல்கள்,பிரார்த்தனைகள்.
ReplyDeleteசோதரன் மறைந்தது
ReplyDeleteசோதனைதான்
ஆதரவாய் ஆறுதல்கள்
ஆயினும் அவன் வருவனா
வருவான் நினைவுகளில்
மாறும் சோகங்கள்
படிக்க மனதை என்னவோ செய்கிறது. மனித இழப்புக்களைப் பார்க்கும்போது, மனிதப் பிறவி எடுத்ததே ஒரு பாவம் என எண்ணத் தோன்றுகிறது.
ReplyDeleteஅவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.
நாமெல்லாம் என்ன இருக்கவா போகிறோம், நாம் ஸ்டேஷன் வந்ததும் இறங்கத்தானே வேண்டும், என நினைத்து மனதை தேற்றுவோம்.
எனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா ((
ReplyDeleteநிர்மலனுக்கு எனது அஞ்சலிகளம்மா..நிர்மலனுக்கு எனது அஞ்சலிகளம்மா..
ReplyDeleteநிர்மலனுக்கு எனது அஞ்சலிகள்.அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.மனது உருக உருக கவிதை வடித்து உங்க அஞ்சலிகளை பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteகுமரேசன்
ReplyDeleteநிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச்
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி .... ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்..
குமரேசன் நிர்மலனின் ஆத்மா சாந்தியடையட்டும்!!
ReplyDeleteநிர்மலன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇன்று என்னுடைய பதிவு
கூகுளின் அதிரடி சாதனை
தீராத துயரம் தான் சகோதரி
ReplyDeleteசகோதரனின் ஆத்மா சாந்தம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
t.m voted
மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். அவரின் ஆன்மா ஸாந்தியடைய பிரார்த்திப்போம். தீராத மறக்க முடியாத ஒரு பெரும் துயரம் தான். என்ன செய்வது?
ReplyDeleteஅவர் ஆத்மா சாந்திக்காய் என் பிரார்த்தனைகளும்..
ReplyDeleteமனம் கலங்கச் செய்து மனத்தை துவைத்து போட்ட பதிவு. படிக்கும் போதே மனம் ஐயோ என்று கதறுகிறதே ஆனால் உறவை இழந்த உங்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. மனதில் சாந்தி உண்டாக பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteதாயாய் மனம் பதறுகிறது.....
ReplyDeleteஇழந்த மனசுக்கு உயிரின் மேன்மை புரிகிறது...
முகத்தில் கருணை காண்கிறேன்...
சின்ன வயதுப்பிள்ளை இப்படி ஒரு விதி இறைவனின் கணக்கில் என்ன பிழை ஏற்பட்டதோ :(
பிள்ளையின் ஆன்மா சாந்தி அடைந்து இறைவனடி சேர என் பிரார்த்தனைகள் அம்பாளடியாள்...
நிம்மதி நிலவட்டும்... சகோ நிர்மலன் அவர்களது ஆத்மா சாந்தி அடையட்டும்.....
ReplyDeleteமரணம் எங்கு நிகழ்ந்தாலும்
ReplyDeleteஅஞ்சி நடுங்குபவன் நான்!
அது ஒரு காலம்!
முதன்முறையாக மரணத்தை
மரணமுற செய்ய முடியாதா?
என்ற ஒரு வெறி வந்தது!
என் தம்பி கு.செல்வக்குமார்
(20.04.1982-03.01.2010)
மரணத்தின் போது!
உங்கள் வ்லியும் வேதனையும்
நானறிவேன்...