தித்திக்கும் பாடல் நூறு
தீட்டாதோ என் கைகள் என்றும்
எத்திக்கும் நிறைந்திருக்கும்
என் தெய்வம் அருளால் இங்கு
பக்திக்கோர் எல்லை இல்லை
என் பாமாலை உன்னைச் சேர
வித்தைக்கு அதிபதியே நீ
வா வா வா ....எந்தன் முன்னே!....
முத்துக்கள் போல வார்த்தை
முரண் அற்று முழுமை சேர
என் சித்தத்துள் தெளிவு தந்து
தேவியே நின் அருளைக் காட்டு!...
மொத்தத்தில் என்னில் உன்னை
நான் முழுதாக உணரும் தன்மை
சித்திக்க நல் வழிதான் என்ன!.....
உன் சீரான திருவடிக்கீழ் என்றும்
சக்கரம்போல் சுத்துகின்றேன்
என் சங்கடங்கள் தீர்த்தருள்வாய்
செந்தமிழால் கவி பாடி இறைவன்
அவன் சிந்தனையில் நிதம் வாழ
எந்தன் உயிர் ஏங்குதடி !...........
இனி ஏழ் பிறப்பும் இது போதும்
போதும் போதும் என்றே மனம்
துதி பாடும் வகை அருள் தருவாய் தாயே!......

முத்துக்கள் போல வார்த்தை
ReplyDeleteமுரண் அற்று முழுமை சேர
என் சித்தத்துள் தெளிவு தந்து
தேவியே நின் அருளைக் காட்டு!..//.
அருள் காட்ட்டிவிட்டார் என்பதற்கு
தங்கள் அழகிய அருமையான
கவிதைகளே சான்று
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்திற்கும் .
Deleteவரிகள் அருமை. நன்றி.
ReplyDelete(த.ம. 2)
மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .
Deleteஅழகுதமிழ் சொற்களால்
ReplyDeleteஅருளிய பாமாலை..
மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .
Deleteமிகவும் நல்ல கவிதை. நல்லா இருக்கு. வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி அம்மா வரவுக்கும் வாழ்த்திற்கும் ..
DeletePa malai alakiya thamilin then malai valthukkal tholi
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் ..
Deleteநல்லதொரு கவிதை பாராட்டுகள் & வாத்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் ..
Deleteஎந்தன் உயிர் ஏங்குதடி !...........
ReplyDeleteஇனி ஏழ் பிறப்பும் இது போதும்
போதும் போதும் என்றே மனம்
துதி பாடும் வகை அருள் தருவாய் தாயே!...//
என்றும் மறவாத உள்ளம் வாழ்க!
கவிதை அருமை.
மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்திற்கும்
Deleteஅருமையான ஆக்கம் சகோ! என்னை கவர்ந்தது!
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteஅழகுத்தமிழில் அற்புதமான பாடலை கொடுத்து சிறப்பித்துள்ளீர்கள்! மிகவும் அருமை! வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in
மிக்க நன்றி ஐயா வரவுக்கும் கருத்திற்கும் . .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteகவிதையும் படங்களும் மிக அருமை சகோ.
ReplyDelete