7/17/2012

தன்னையே தந்த தலைவா......

 தன்னையே தந்த தலைவா
இன்று என்னை நீ மறந்ததேனோ?
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்!
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்

                                      (தன்னையே தந்த ....)

உன்னிரு விழியும் தேடி
என்னுடல்  வாடும் போது
தன்னிலை மறக்கலாமோ!
தென்றலே சொல் சொல் சொல்?
மஞ்சள்  குங்குமமும்
மண மாலை தோரணமும்
கண்டாலே போதும் போதும்
ஆனந்தக் கண்ணீரில் நெஞ்சம் மோதும்!

என்னுயிர் தாங்கும் உடல் நீ
உன்னை நான் இழக்கலாமோ!
பொன் பொருள் ஏதும் வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அன்று நீ சொன்ன வார்த்தை
நெஞ்சினில் நின்றாடுதே
இந்த வன்முறை ஏனோ
சொல் சொல் சொல்?

கண்ணீரை மையாக்கிக்
கவிதை நான் வரைந்தேனே
உன்னை இது   சேராதோ?
என் உள்ளமதைக் கூறாதா?
வாடுதே என் மனம் 
உன்னைத் தேடுதே அனு தினம்!
தூது சொல் மன்னவா
என்னுயிர் நீ அல்லவா...

                                                (தன்னையே தந்த ....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. ஏனிந்த சோகம்...அதிலும் சுகமோ...

    ReplyDelete
    Replies
    1. நிட்சயமா சோகப் பாடல் வரிகள் மட்டுமே
      சட்டென மனதில் வந்து நிறைகிறது அதிலும் தனி சுகம்
      ஒன்று உள்ளது சகோ!.......மிக்க நன்றி தங்கள் வரவிற்கும்
      கருத்திற்கும் .

      Delete
  2. அகம் புகுந்திட்ட
    ஆருயிர் மன்னவனின்
    பிரிவின் சோகம்
    கவி முழுதும்
    ஆர்ப்பரிப்பு...

    சுகமான ராகம்...

    ReplyDelete
  3. கண்ணீரை மையாக்கிக்
    கவிதை நான் வரைந்தேனே
    உன்னை இது சேராதோ.........
    என் உள்ளமதைக் கூறாதோ........
    வாடுதே என் மனம் உன்னைத் தேடுதே
    தினம் தினம் ஓடுதே கடலைபோலவே
    தூது சொல் மன்னவா என்னுயிர் நீ அல்லவா!.//

    தலைவனுக்கு தலைவியின் கவிதை சேர்ந்து நல்ல சேதி கிடைக்க வேண்டும்.
    துன்பமான இன்பம். இக் கவிதை.

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சோகத்திலும் ஒரு சுகம் உள்ளது...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 3)

    என் தளத்தில் :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  5. alasollum sokam...bt enithu enithu..valthukal

    ReplyDelete
  6. மிக அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........