ஆடி வெள்ளி தேடி வந்து
அம்மன் அருளது பொலியட்டும்!......
உலகில் வாடி வதங்கும் உயிர்களுக்கு
செல்வம் அதனை வாரி வாரி வழங்கட்டும்!...
கோடி நன்மை அருளும் சக்தி
நற் குலத்தை நோக்கி நகரட்டும்
அவளைத் தேடிச் சென்று கேட்ட வரத்தை
ஆசை தீரும் வரைக்கும் வழங்கட்டும்!.......
பாடித் துதிக்கும் பக்தர் கூட்டம்
இன்று பரவசத்தில் மூழ்கட்டும்
அவர்கள் நாடி நரம்பு அத்தனையிலும்
அட்ட சக்தியும் வந்து அமரட்டும்!........
திருவோடுகூடத் தங்கம் ஆகும்
அன்னை இவளை நம்பி இருந்தால்
அறிவோடு பண்பும் நல் ஆசி தந்து
என்றும் எம்மைக் காத்தருள்வாள்!.....
அம்மன் அருளது பொலியட்டும்!......
உலகில் வாடி வதங்கும் உயிர்களுக்கு
செல்வம் அதனை வாரி வாரி வழங்கட்டும்!...
கோடி நன்மை அருளும் சக்தி
நற் குலத்தை நோக்கி நகரட்டும்
அவளைத் தேடிச் சென்று கேட்ட வரத்தை
ஆசை தீரும் வரைக்கும் வழங்கட்டும்!.......
பாடித் துதிக்கும் பக்தர் கூட்டம்
இன்று பரவசத்தில் மூழ்கட்டும்
அவர்கள் நாடி நரம்பு அத்தனையிலும்
அட்ட சக்தியும் வந்து அமரட்டும்!........
திருவோடுகூடத் தங்கம் ஆகும்
அன்னை இவளை நம்பி இருந்தால்
அறிவோடு பண்பும் நல் ஆசி தந்து
என்றும் எம்மைக் காத்தருள்வாள்!.....

ஆடி வெள்ளி சிறப்புப் பாட்டு... அருமை...
ReplyDeleteமிக்க நன்றி...
(த.ம. 2)
ஆடி வெள்ளியில் ஓர் அற்புதமான பாடலை தந்துள்ளீர்கள் சகோதரி....
ReplyDeleteஆடி வெள்ளிக்கு அமர்க்கலமான பாடல்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .
Deleteசகோதரி நலமா..ஆடிமாத வாழ்த்துகள்..ஏன் இடைவெளி விட்டுவிட்டீர்கள்..
ReplyDeleteநான் நல்ல சுகம் சகோ .சில கடமைகள் அத்துடன் வேலைப்பளு அதிகம் ஆனதனால் சற்று ஓய்வெடுக்கத் தோன்றியது அவ்வளவுதான் இனி என் ஆக்கங்கள் முடிந்தவரைத் தொடரும் .தங்கள் வரவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!.....
Deleteஆடி வெள்ளி பாடல் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
http:thalirssb.blogspot.in
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!..
Deleteஆடி வெள்ளி பாடல் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteunmaivrumbi.
mumbai.
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!..
Deleteஆடிவெள்ளி சிறப்புப் பதிவு
ReplyDeleteமிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!..
Deleteஆடியில் கிடைத்த
ReplyDeleteஅம்மன் அருள்.....
மிக்க நன்றி சகோ தங்கள் இனிய கருத்திற்கு!...
Deleteபுகைப்படங்கள், பாடல் அருமை (TM 7)
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் இனிய கருத்திற்கு!...
Deleteபாடலும் புகைப்படங்களும் அருமை. பக்தியோடு அம்மனிடம் அறிவும் பண்பும் கேட்ட பாங்கினை மெச்சுகிறேன். பாராட்டுகள்.
ReplyDeleteஆடி வெள்ளி தேடி வந்து
Deleteஅம்மன் அருளது பொழியட்டும்!.....
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
Deleteஆடி வெள்ளியில் நல்லதோர் பக்திப் பாடல். அருமை.... அவள் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்க பிரார்த்தனைகள்.
ReplyDelete