7/31/2012

பூமித் தாயே கலங்காதே

பூமித் தாயே கலங்காதே
பெரும் பூகம்பத்தை விரும்பாதே!
பல உயிர்கள்  உண்டு உன் மீது
பாவம் அவை நீ பண் பாடு!

கோரத் தாண்டவம் ஆடிடும்
கொடிய மனிதர் செயல் கண்டு
தீப்பிழம்பைக் கக்காதே
தீர்ந்து போகும் இவ்வுலகே!


ஆத்திரத்தில் அம்மா நீ
அசையும்போது இடர் வந்து
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்
சிதைந்து போகுதே  கண் முன்னாலே!

நேற்றா இன்றா நீ பொறுத்தாய்!...
நித்தம் இடியைத் தாங்குபவள்
நீ வாட்டம் கொண்டால் வளம் ஏது!
வறண்ட நிலத்தில் உயிர் நிலைக்காது!

காற்றும் மனிதன் செயலாலே
கலைந்தே போகுது தழுவாமல்!
வேத்துக் கொட்டும் உடலுக்கு இனி
வெப்பம் தணிக்க மரம் ஏது !

பூத்துக் குலுங்கிய பூமியம்மா உன் மீது
பொலியும் கட்டிடம் இது கொடுமையம்மா!
உனைத் தேற்ற மனிதன் நினைக்கவில்லை
அவன் தவறை உணர்த்த வழியும் இல்லை!
அடைக்கலம் ஆனோம் உன் மடி மீது
அம்மா உன்போல் ஒரு தெய்வம் ஏது!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

 1. அடைக்கலம் ஆனோம் உன் மடி மீது
  அம்மா உன்போல் ஒரு தெய்வம் ஏது!...
  துடி துடிக்கிற இதயம் அமைதி பெற
  எமைக் காப்பவளே நீயும் கண்ணுறங்கு!//

  மிக ஆழமாக யோசிக்கிறீர்கள்
  அழகாகப் பதிவு செய்கிறீர்கள்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் இனிய
   கருத்திற்கும் .

   Delete
 2. சிறப்பான கருத்துக்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
  ( முதல் படம் - அருமை )

  நன்றி...
  (த.ம. 2)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
   கருத்திற்கும் .

   Delete
 3. பதிவுக்கேற்ற படங்கள்... சிறந்த தேடுதல் சகோ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
   கருத்திற்கும் .

   Delete
 4. கருத்துள்ள கவிதைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா தங்கள் வரவிற்கும் அன்பு கலந்த
   நல் வாழ்த்திற்கும் .

   Delete
 5. கருத்துள்ள கவிதை சகோ

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

   Delete
 6. கருத்துள்ள கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

   Delete
 7. காற்றும் மனிதன் செயலாலே
  கலைந்தே போகுது தழுவாமல்!...
  வேத்துக் கொட்டும் உடலுக்கு இனி
  வெப்பம் தணிக்க மரம் ஏது !!!..........
  பூமித் தாய்க்கு ஒரு தாலாட்டு. அருமையான தாலாட்டு. இருப்பினும் வருத்தங்கள் நிறைய.... இதை அப்படியே பழைய பாடல் ஒன்றுடன் என் மனம் ஒப்பிடுகிறது.
  “ பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே, பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே....”
  என்னுடைய வலைத்தளத்தில் இன்று
  http://tamilraja-thotil.blogspot.com/2012/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே தங்கள் முதல் வரவும்
   முத்தான உவமை சொல்லும் கருத்தும் மனத்தைக்
   கவர்ந்தது .மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் இனிய
   கருத்திற்கும் தொடர வாழ்த்துக்கள் .

   Delete
 8. Replies
  1. மிக்க நன்றி சகோ வரவிற்கு .

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........