கடல்போல அன்பு
கசிந்தோடும் நெஞ்சில்
தினம்தோறும் துன்பம்
அது ஏனோ ஏனோ!
புரியாத கேள்வி
புதிரனா வாழ்க்கை
இதுதானா எனக்கிங்கு
நீ தந்தது !
கிழக்கும் மேற்கும் இணையாது !
என் கேள்விக்குப் பதிலும் கிடையாது !
உலக வாழ்க்கை வெறுத்து நானும்
உயர உயரப் பறக்கின்றேன் !
புரியவில்லை எனக்கு
எதுவும் புரியவில்லை
தெரியவில்லை எனக்கு
எதுவும் தெரியவில்லை
வழியும் இல்லை எனக்கு
இங்கு வாழ மனமும் இல்லை
வருந்துகின்றேன் நானே
இறைவா வா ......
இறைவா வா ......
கருணை இல்லை
இங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும்
எனக்கென்பேன்
நீ தொடுத்த கதையை முடித்துவிடு
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு
அடுத்த பிறவி தேவையில்லை
இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே
விடியாத பாதைகள் தொடர்வதெங்கே!
சோக மழையில் நானும் ஈரமாகிப் போனேன்.
ReplyDeleteநீங்க ஏன் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதக்கூடாது..??
ReplyDeleteசோகத்தை குழைத்து ஒரு கவிதை அருமை
ReplyDeleteஉங்கள் பாடல் அருமை கவிக் குயிலே
ReplyDeleteமனதை வருடும் வரிகள்
கக்குகிறது சோகத் துளிகளை
அடுத்த பிறவி தேவையில்லை
ReplyDeleteஇதற்கும் மேல் ஒரு துன்பமில்லை
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே
இனி வழக்கு எதற்கு அதையும் முடித்துவிடு///
ஏன் இம்புட்டு சோகம்?
அவ்வளவு சோகமா !
ReplyDeleteசோகம் கவிதையில் நல்லா வெளிப்படுத்தி இருக்கீங்க.
ReplyDeleteதினமும் ஒரு பதிவு எப்படி???
சோகத்திலும் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருக்கிறது...
ReplyDeleteஆனால் இப்பிறவி போதும் என்று சொல்லும் அளவுக்கு விரக்தி ஏன்பா?
அழகிய வரிகள்பா.. அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...
உணர்வினை இம்மி பிசகாது
ReplyDeleteஅப்படியே வெளிப்படுத்தும்
அழகான கவிதை
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்
த.ம 6
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கிழக்கும் மேற்கும் இணையாது
ReplyDeleteஎன் கேள்விக்குப் பதிலும் கிடையாது
உலக வாழ்க்கை வெறுத்து நானும்
உயர உயரப் பறக்கின்றேன
விழிநீரை மையாக்கி-மன
வேதனையை கருவாக்கி
எழுகின்ற எண்ணத்தை-உடன்
எழுதுகின்றீர் கவியாக்கி
அழுகின்ற குழைந்தையென-ஏன்
அம்பாளும் ஆவதென
தொழுகின்றேன் இறைவனையே-வந்து
துயர்தன்னை துடையுமென
புலவர் சா இராமாநுசம்
கடல் போல அன்பிருந்தால் வாழ்வில் துன்பம் நிகழாது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
ReplyDeleteஆஹா..அருமையான பாடல்.
ReplyDeleteSuper kavithai. . .
ReplyDelete///கருணை இல்லை
ReplyDeleteஇங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும்
எனக்கென்பேன்...............
நீ தொடுத்த கதையை முடித்துவிடு
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு ///
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கோர் அழகிய பாடல்
நன்று சகோதரி.
சோக மழையில் நானும் ஈரமாகிப் போனேன்.
ReplyDeleteஇந்த ஈரம் காயும்முன்னே அடுத்த மகிழ்வூட்டும்
பாடல்வரும் கவலை வேண்டாம் சகோ ........
நீங்க ஏன் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதக்கூடாது..??
ReplyDeleteஇப்படி ஒரு ஆசை எனக்குள்ளும் உண்டானதுண்டு. ஆனாலும் அதற்கான தகுதியும் வாய்ப்பும் கிட்டவேண்டுமே......
சோகத்தை குழைத்து ஒரு கவிதை அருமை
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ......
உங்கள் பாடல் அருமை கவிக் குயிலே
ReplyDeleteமனதை வருடும் வரிகள்
கக்குகிறது சோகத் துளிகளை
மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .....
ம் ...
ReplyDeleteவரவுக்கு நன்றி சகோ .....
அடுத்த பிறவி தேவையில்லை
ReplyDeleteஇதற்கும் மேல் ஒரு துன்பமில்லை
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே
இனி வழக்கு எதற்கு அதையும் முடித்துவிடு///
ஏன் இம்புட்டு சோகம்?
இது வெறும் உணர்வுதான். அதுவும் இந்தக்
கவிதை வடித்த அடுத்தகணமே மறைந்துவிடும் .
எல்லாக் கவிஞர்களுக்கும் இது பொதுவான விடயம்
இல்லையா?.....மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்துக்கும் ...
அவ்வளவு சோகமா !
ReplyDeleteஆகா நான் கவிதை எழுதுகின்றேன் .
அவ்வளவுதான் சகோ ஹி...ஹி ...ஹி ...
மிக்க நன்றி வரவுக்கு .......
சோகம் கவிதையில் நல்லா வெளிப்படுத்தி இருக்கீங்க.
ReplyDeleteதினமும் ஒரு பதிவு எப்படி???
சரி அம்மாவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார் .
சும்மா சொன்னால் நல்லா இருக்காது .இதற்காகவே
என் பதிலை கவிதையாகத் தந்துவிடுகின்றேன் .நாளைய பதிவை அனைவரும் பார்க்க எனக்கு உங்கள் வாழ்த்துக்கிட்டட்டும்....
மிக்க நன்றி அம்மா வரவுக்கும் கருத்துக்கும் .............
சோகத்திலும் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருக்கிறது...
ReplyDeleteஆனால் இப்பிறவி போதும் என்று சொல்லும் அளவுக்கு விரக்தி ஏன்பா?
அழகிய வரிகள்பா.. அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...
இந்தக் கேள்விக்குப் பதில் நாளை வரும் .மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ...........
உணர்வினை இம்மி பிசகாது
ReplyDeleteஅப்படியே வெளிப்படுத்தும்
அழகான கவிதை
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா .உங்கள் வரவும் வாழ்த்தும்
என் மனத்தைக் குளிரவைக்கின்றன .
த.ம 6
ReplyDeleteமிக்க நன்றி ஐயா .
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா ......
கிழக்கும் மேற்கும் இணையாது
ReplyDeleteஎன் கேள்விக்குப் பதிலும் கிடையாது
உலக வாழ்க்கை வெறுத்து நானும்
உயர உயரப் பறக்கின்றேன
விழிநீரை மையாக்கி-மன
வேதனையை கருவாக்கி
எழுகின்ற எண்ணத்தை-உடன்
எழுதுகின்றீர் கவியாக்கி
அழுகின்ற குழைந்தையென-ஏன்
அம்பாளும் ஆவதென
தொழுகின்றேன் இறைவனையே-வந்து
துயர்தன்னை துடையுமென
புலவர் சா இராமாநுசம்
புலவர் பெருமானே தங்களுக்கும்
இக் கவிதை கண்டு வேதனையா...!!!!
நன்றி ஐயா என் கவிதைகளைப் பாராட்டுவதோடு
நின்றுவிடாமல் என் மீது தாங்கள் காட்டும் மட்டற்ற
பாசத்திற்கு ........
கடல் போல அன்பிருந்தால் வாழ்வில் துன்பம் நிகழாது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
ReplyDeleteமிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் ........
ஆஹா..அருமையான பாடல்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ....
Super kavithai. . .
ReplyDeleteமிக்க நன்றி சகோ .உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ....
Beautiful lines
ReplyDeleteமிக்க நன்றி சகோ நீங்கள் உங்கள்
ராஜ தர்மத்தை மீறிவிட்டீர்களே ஆங்கிலத்தில்
கருத்திட்டு .............ஹி ...ஹி ..ஹி ...
///கருணை இல்லை
ReplyDeleteஇங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும்
எனக்கென்பேன்...............
நீ தொடுத்த கதையை முடித்துவிடு
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு ///
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கோர் அழகிய பாடல்
நன்று சகோதரி.
மிக்க நன்றி சகோ உங்கள் கருத்து என் மனதைக் கவர்ந்தது ......
அதுதானே...... திரைப்படங்களுக்கு ஏன் பாடல் எழுத கூடாது , முயற்சியுங்கள்
ReplyDeleteஅதுதானே...... திரைப்படங்களுக்கு ஏன் பாடல் எழுத கூடாது , முயற்சியுங்கள்
ReplyDeleteநன்றி சகோ .இதே கேள்விய என்னிடம் பலரும் கேட்டுவிட்டனர் .ஆனால்
ஒரே பதில்தான் எனக்கு அந்த வாய்ப்பைப் பெறும் வழிமுறைகள் தெரியாது
சகோ .ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கை எனக்குள்ளும் உண்டு .எண்டைக்காவது
ஒருநாள் என் பாட்டுகளுக்கும் இப்படியொரு நல்ல வாய்ப்பு தேடி வருமென போதுமா ஹி..ஹி ..ஹி ...
நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் .ஓட்டுபோட மறந்துவிட்டீர்களா?....
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த பிறவி தேவையில்லை
ReplyDeleteஇதற்கும் மேல் ஒரு துன்பமில்லை //
இந்த வரிகள்.... ரொம்ப நாட்களாக மனதில் ஆணியாக குத்திக்கொண்டிருக்கிறது...நன்றி சகோ
த.ம 10
ReplyDeleteசோக கீதம்!
ReplyDeleteகவிதை அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ ......
அடுத்த பிறவி தேவையில்லை
ReplyDeleteஇதற்கும் மேல் ஒரு துன்பமில்லை //
இந்த வரிகள்.... ரொம்ப நாட்களாக மனதில் ஆணியாக குத்திக்கொண்டிருக்கிறது...நன்றி சகோ
ஆகா இது வெறும் கவிதைதான் சகோ .இதற்காக ஏனிந்தக் கவலை?.....மிக்க நன்றி சகோ கருத்துக்கு ...
த.ம 10
ReplyDeleteமிக்க நன்றி சகோ ...
எளிமையான சொற்களுடன்,அனைவர்க்கும் எளிதில் விளங்கும் கவிதை. அதை மெட்டுடன் பாடும்போது இன்னும் சிறக்கும் எனத்தோணுகிறது...வாழ்த்துக்கள் இந்த சின்னப்பயலின்,இந்தப்பனி பெய்து குடம் நிறையப்போவதில்லை,,எனினும் ,,:-)
ReplyDeleteசோக கீதம்!
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ...
எளிமையான சொற்களுடன்,அனைவர்க்கும் எளிதில் விளங்கும் கவிதை. அதை மெட்டுடன் பாடும்போது இன்னும் சிறக்கும் எனத்தோணுகிறது...வாழ்த்துக்கள் இந்த சின்னப்பயலின்,இந்தப்பனி பெய்து குடம் நிறையப்போவதில்லை,,எனினும் ,,:-)
ReplyDeleteமிக்க நன்றி சதரரே தங்கள் வரவுகண்டு
மகிழ்கின்றேன் .
சின்னப் பயலே என் தளத்தில் இணைந்துவிட்டீர்களா ?..........
ReplyDeleteவணக்கமம்மா கடல் என்றாலே இப்ப நாங்க பயம் கொள்கிறோம்.. ஏன் இந்த சோகப்பாடல்..? இன்னும் உயர உயர பறக்கவேண்டும் புகழின் உச்சிக்கு எங்கள் அம்பாள்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
சோகத்தில்தான் சிறந்த கவிதை பிறக்கும்.உங்கள் கவிதையின் சிறப்பில்,உள்ளாக்கத்தில் உயர்ந்து நிற்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeletethis is my first visit to this blog. all lyrics are really super. i wonder how i missed your blog so long time. here after i follow your blog.
ReplyDeleteஅருமையான பாடல். இந்த பாட்டுக்கான ஒரு அருமையான மெட்டு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteTamilmanam14
ReplyDeleteவணக்கமம்மா கடல் என்றாலே இப்ப நாங்க பயம் கொள்கிறோம்.. ஏன் இந்த சோகப்பாடல்..? இன்னும் உயர உயர பறக்கவேண்டும் புகழின் உச்சிக்கு எங்கள் அம்பாள்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
மிக்க நன்றி காட்டான் உங்கள் வாழ்த்தும் என்மீதுகாட்டும்
அக்கறையும் என் மனதை மகிழவைக்கின்றது!.............
சோகத்தில்தான் சிறந்த கவிதை பிறக்கும்.உங்கள் கவிதையின் சிறப்பில்,உள்ளாக்கத்தில் உயர்ந்து நிற்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் தலைவணங்குகின்றேன் .
மிக்க நன்றி..............
this is my first visit to this blog. all lyrics are really super. i wonder how i missed your blog so long time. here after i follow your blog.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தங்கள் முதல் வரவும் உணர்வும் கண்டு மகிழ்ந்தேன் .
நன்றி என் தளத்தினைப் பின்தொடர்வதற்கு ...........
அருமையான பாடல். இந்த பாட்டுக்கான ஒரு அருமையான மெட்டு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ........
Tamilmanam14
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் காட்டான் ...........
அழகான சோக கவிதை இல்லையில்லை சோக பாடல்
ReplyDeleteஆறு வேறு கடல் வேறு அதுபோல தங்களது கவிதை இல்லை பாடல் .
பகிர்வுக்கு நன்றி சகோ
தமிழ் மணம் 15
ReplyDeleteநான் தான் ரொம்ப லேட்டு போல.. கவிதை நல்லாயிருக்கு சோகம்தான் கொஞ்சம் அதிகம்
ReplyDelete//கருணை இல்லை
ReplyDeleteஇங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும்
எனக்கென்பேன்............... // பாடலாய் கவிதை சோகமாய் அருமை
அழகான சோக கவிதை இல்லையில்லை சோக பாடல்
ReplyDeleteஆறு வேறு கடல் வேறு அதுபோல தங்களது கவிதை இல்லை பாடல் .
பகிர்வுக்கு நன்றி சகோ
மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ...........
தமிழ் மணம் 15
ReplyDeleteநன்றி சகோ ....
நான் தான் ரொம்ப லேட்டு போல.. கவிதை நல்லாயிருக்கு சோகம்தான் கொஞ்சம் அதிகம்
ReplyDeleteநன்றி சகோ நீண்ட நாளிற்குப்பின் வந்துள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவு கண்டு ......
//கருணை இல்லை
ReplyDeleteஇங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும்
எனக்கென்பேன்............... // பாடலாய் கவிதை சோகமாய் அருமை
மிக்க நன்றி சகோ.உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்
//கிழக்கும் மேற்கும் இணையாது
ReplyDeleteஎன் கேள்விக்குப் பதிலும் கிடையாது
உலக வாழ்க்கை வெறுத்து நானும்
உயர உயரப் பறக்கின்றேன் ............//
அழகான, ஆழமான கருத்தினைக் கொண்டமைந்த கவிதை.... உங்கள் கவிப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....!!!
கடல்போல் அன்பிருக்கையில்
ReplyDeleteகண்ணா கவலையை விடு
கரைகாணுவோம் என்று பாடு
கிழக்கும் மேற்கும் இணையாதா?
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
செல்ல செல்ல
கிழக்கிலே எனை அடையையாயோ
எண்பது நாளிலோ எண்பது வயதிலோ