அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !
அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !
தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !
பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !
வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !
உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும் நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !
தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !
உலகே அன்பால் நிறைக்க எனும் உங்கள் பாடல் அருமை தோழி! வாழ்த்துகள் !!
ReplyDeleteநன்றி தோழி !
Deleteஇன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...
ReplyDeleteநன்றி தோழி !
Deleteஅம்பாளடியாள் கவிதைகளை வலையில்
ReplyDeleteஅனைவரும் நன்கு படித்திடுவோம்
தம்பா நாளும் தவறாமல்
தருவார் ! வருவார் அறிவீரே!
நன்றி ஐயா !
Deleteநற்பணி ஆற்றிட நாடே மகிழ்வுறும்!
ReplyDeleteகற்றிடச் சொன்னீர் கனிந்து!
அருமையான அறிவுரைப் பாடல்! நலமாக இருக்கின்றீர்களா?..
வாழ்த்துக்கள் தோழி!
நன்றி தோழி !
Deleteவள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
ReplyDeleteவாழ்வில் இன்பம் கண்டிடுவோம்///
அன்பாய் இருப்போம் அகிரத்தில் சிறப்போம்
நன்றி சகோதரா !
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html
மிக்க நன்றி ஐயா !விரைந்து வந்து பார்வையிடுகின்றேன் .
Deleteஅருமையான பாடல்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
த.ம. 4
நன்றி தோழி !
Deleteநல்ல குணங்களை வளர்த்திட சொல்லும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகோதரா !
Deleteவோம் வோம் என்று ஓங்காரத்தில் நீங்கள் சொன்ன நல்ல கருத்துக்களை ரசித்தேன் !
ReplyDeleteத ம 5
அன்பே சத்தியம். அன்பே நித்தியம்...அன்பே ஆனந்தம்....இறுதி வரிகள் அருமை! அருமையான கவிதை வரிகள்! சகொதரி!
ReplyDelete