வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய் வளம் !
சினத்தால் அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க ) மகிழ்ந்து !-இனத்தின்
பெருமையும் ஏற்ற புகழும் தழைக்க
வருவதை ஏற்கும் விருப்பு
ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல் நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர் தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும் போக்கும் பயன்!
கடமை உணர்ந்த கவிக்குயிலே! இன்றே
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !
இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!
கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும்
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும் வளம் !
(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
அருமையான வெண்பாக்கள்.
ReplyDeleteஅதிலும்....
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!
அருமை. மிக அருமை தோழி. வாழ்க.
வணக்கம் !
Deleteமுதல் வருகைக்கும் முத்தான நல் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அன்புத் தோழியே !
ஊக்கம் கொடுக்கும்
ReplyDeleteஇன்னிசைப் பாக்கள்..
படித்து முடித்தவுடன்
புதுத் தெம்பும்
புத்துணர்வும் வருகிறது...
வாழ்த்துக்கள் .சகோதரி..
நன்றி சகோதரா !
Delete///கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும்
ReplyDeleteபெற்றோர் மகிழப் பெருமையுறு !///
பெருமைபெற்றுவிட்டீர்கள்
அருமை சகோதரியாரே
அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி சகோதரா !
Deleteவானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
ReplyDeleteகானம் இசைத்திடு காவியமே
ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது கவிகுயிலே..!
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி தோழி !
Deleteஅன்பை
ReplyDeleteஉணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!//
உண்மை. அன்பு செய்தால் பகை மறையும்.
கவிதை அருமை அம்பாளடியாள்/
த.ம வாக்கு- 5
மிக்க நன்றி தோழி !
Deleteவணக்கம் தோழி!
ReplyDeleteசோகம் தவிர்த்திங்கு சொக்கும் கவிபாட
யோகம் தரக்குயிலும் யோசியாது! - மேகம்
பொழிமழை வெண்பா புனைந்தீரே தோழி!
வழியும் அமுதே வரம்!
மிக மிக அருமையான வெண்பாக்கள்!
தரும் சுவையோ மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் தோழி!
வணக்கம் தோழி !
Deleteமிக்க நன்றி தோழி இனிய நற் பாவினால் இட்ட நற் கருத்திற்கும்
வாழ்த்திற்கும் !
நன்றி சகோதரா !
ReplyDeleteஆஹா! என்ன அருமை சகோதரி! இனிக்கின்றது! வாழ்த்துக்கள் தோழி!
ReplyDelete#துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
ReplyDeleteஉணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!#
நானும் இப்படித்தான் நினைத்து பதிவை போடுகிறேன் ,மனம் லேசாகி விடுகிறது ,படிப்பவர்களுக்கு பாரம் ஏறி விடுகிறது )))))
த ம +1
சினத்தால் அழியாத சிந்தையும் உண்டோ!
ReplyDeleteமனத்தை அடக்கு
நான் மிகவும் ரசித்தவை.
அருமை சகோதரி வாழ்த்துக்கள்.