8/20/2011

இது ஒரு நட்பின் வேண்டுகோள்.........

கரும்பாறை என நான் இருந்தேன் 
கண்கவர் சிலையாய் எனை மாற்றினாய் !...
இருந்தாலும் இது போதாதென்று 
இன்னுயிர் தந்து என்னை வாழவைத்தாய்....!!!

பின் இதை விருபாதவர் சொல்லைக் கேட்டு 
வீதியில் நீயே என்னை விட்டெறிந்தாய்....
அரும்பாடுபட்டு உன்னிடத்திற்கு  அன்று
ஆயிரம்முறை நான் வந்தபோதும் 

திருந்தாதது என்றும் உன் தவறே ....
என் கதை தீர்ந்தபின் அழுவதில் பயனில்லை
வருதாதிரு என் நெஞ்சமே இனியேனும் 
வரும் வதந்தியைக்கேட்டு ஏமாராதே...//

உள்ளதை மறைத்து உண்மையை சிதைத்து 
சொன்னதையே சொலிச் சொல்லி என்றும்
உன்னைச் சோதிப்பவர் முன்னிலையில் 
நல்லது கெட்டது எதுவென  அறிந்து நீ 

பொய்யரின் உறவுக்கு புறமுதுகு காட்டி  
நல்லவரை எப்போதும் நல்லபடி  நம்பி 
உள்ளதை ஒழிவின்றி உள்ளபடி உரைத்து 
அன்போடு வாழ்ந்திரு அதை என்றும் நான் ரசிப்பேன் ...

வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

நான் சொல்வதைக் கேட்டு இனி சொன்னபடி நட 
நடந்ததை மறந்து நல்லபடி வாழ்ந்திடவே 
அகத்தினில் தூய்மையை அடிக்கடி பேணு 
வம்பளக்கும் உறவுகளின் வழிக்கு என்றுமே போகாதே!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

42 comments:

 1. ////////
  பொய்யரின் உறவுக்கு புறமுதுகு காட்டி
  நல்லவரை எப்போதும் நல்லபடி நம்பி
  உள்ளதை ஒழிவின்றி உள்ளபடி உரைத்து
  அன்போடு வாழ்ந்திரு அதை என்றும் நான் ரசிப்பேன் ...
  ///////////

  நெஞ்சத்தை தொடும் வரிகள்...
  இப்படி இருந்து விட்டால் உலகத்தின் வாழ்க்கையானது வசந்தமாகிவடும்...

  ReplyDelete
 2. ///////
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது
  /////////
  உண்மைதான் நட்புக்கு இன்னோர் பெயர் நம்பிக்கை..

  இந்த நம்பிக்கை இரு தரப்பிலும் இருந்து விட்டால் நட்பு ஏன் பாதியில் முடிகிறது...

  ReplyDelete
 3. நப்புக்கான அழகிய கவிதை....

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. சகோதரி..

  தங்களின் புரட்சி கவிதைகள் மற்றும் சமூக அக்கறையுள்ள கவிதைகளுக்கு எப்போது நான் தலைவணங்குகிறேன்...

  நேரம் மிக மிக குறைவாக உள்ளதனாலே எல்லோருடைய பதிவுக்கும் வரமுடியாமல் போகிறது..

  மற்றபடி தங்கள் மீது எனக்கெண்ண கோவம்...

  தயவுகூர்ந்து பதிவிட்டவுடன் அதன் லிங்கை மெயில் செய்தால் கண்டிப்பாக வந்து வாசிக்க வசதியாக இருக்கும்...

  நன்றி..

  என்றும் அன்புடன்..
  கவிதைவீதி சௌந்தர்...

  ReplyDelete
 5. அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  ReplyDelete
 6. நட்புக்கு மரியாதை.

  ReplyDelete
 7. புதுக் கவிதை உகத்தில் மரபுக் கவிதை ..
  பாராட்டுகள்..

  ReplyDelete
 8. அன்புள்ள அம்பாளடியாள்!
  உங்கள் பாடல்கள் அருமை!இன்னும் படிக்கிறேன்.
  அருள்தரும் மருவத்தூர் ஓம் சக்தி சூலம்! பாடல் கேட்டு
  மகிழ்ந்தேன்!நன்றி!
  உங்கள் அழகான பாடல்களுக்கு என் வாழ்த்துகள்!பாராட்டுகள்1!

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 9. உள்ளன்போடு அழைத்த அன்பு அம்பாளடியாளுக்கு என் அன்பு நன்றிகள்பா...

  வரிகளில் மேன்மை தெரிகிறது. ஆதங்கம் கண்ணீர் மறைக்க முயன்ற துக்கம் தெரிகிறது....

  உண்மை நட்புக்கு எப்போதும் சந்தேகிக்க தெரியாது.... கள்ளத்தனம் தெரியாது...

  நல்லவைகளை தேடி ஆராய்ந்து எடுத்துக்கொண்டு தீயவைகளை சாடும் பாரதியின் புத்திரியாக உங்கள் வரிகளை காணமுடிகிறது அம்பாளடியாள்.

  நட்பு கற்பைப்போன்றது.... நட்பில் என்றும் தடுமாற்றம் இருப்பதில்லை...தாயைப்போல் அணைக்கும் தந்தையாய் கண்டிக்கும் சகோதரனாய் அறிவுரைச்சொல்லும் சகோதரியாய் சோகம் துடைக்கும் தோழியாய் ரகசியம் பகிரும்.... நல்முத்துக்களை மாலையாய் கோர்த்து இங்கே கவிதை படைத்துள்ளீர்கள் அம்பாளடியாள் அன்பு வாழ்த்துக்கள்பா...

  ReplyDelete
 10. வணக்கமம்மா நட்பையும் கற்பையும் ஒரு நூல்கோட்டிற்கு கொண்டுவந்து அழகான மரபுக்கவிதை சமைத்துள்ளீர்கள்.. 
  வாழ்த்துக்கள்..

  அப்புறம் அதிகமாய் வெளியில் தென்படாதவர்கள் எல்லாம் உங்கட வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.... இப்பிடியே உங்கள் மனம்போல் உங்கள் வீடும் கலகல்ப்பாய் இருக்வும் வாழ்த்துக்கள்...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 11. நட்பின் அடையாளம்!!!கலக்கல் !!

  ReplyDelete
 12. நட்பின் பெருமை கூறும் அழகிய கவிதை சகோதரி.

  ReplyDelete
 13. எம் நண்பர்களின் இயல்புகளை நாமெல்லாம் மீட்டிப் பார்க்கும் வண்ணமும்,
  நட்பின் பெருமையினை அறிந்து கொள்ளும் வகையிலும் அற்புதமான ஒரு கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 14. //உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது//

  சிறப்பான வரிகள் .நன்று.

  ReplyDelete
 15. எல்லா உறவுகளிலும் நம்பிக்கை என்பது முக்கியமானது...! நட்பில் அதன் தேவையை கவிதையாக, அழகாய் வடித்துள்ளீர்கள்...! சூப்பர்...

  ReplyDelete
 16. வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
  வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
  உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது// உண்மைதான் என் மனதில் உள்ள எண்ணங்களை இந்த கவிதையில் அப்படியே காண்கிறேன், இந்த நம்பிக்கையை எதிர்பார்த்ததற்காக ஒதுக்கி வைக்கப்பட்டவன் நான், நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நண்பனால் நட்பின் மீதே நம்பிக்கை போய்விட்டது... மிகவும் அருமையான கவிதை...

  ReplyDelete
 17. உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

  மிகவும் அருமையான வரிகள்....
  அருமையான கவிதை...

  நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

  ReplyDelete
 18. ''...உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது...''
  கவிதை முழுதும் ஆழமான ஆதங்க வரிகள் சகோதரி. எனக்கொரு சிறு அதிர்ச்சியாக இருந்தது, இந்த வேதனை. எத்தனை எத்தனை கதைகள் தான் இப்பூமியில் மிக்க நன்றி சகோதரி மெசேஜ்க்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. ////////
  பொய்யரின் உறவுக்கு புறமுதுகு காட்டி
  நல்லவரை எப்போதும் நல்லபடி நம்பி
  உள்ளதை ஒழிவின்றி உள்ளபடி உரைத்து
  அன்போடு வாழ்ந்திரு அதை என்றும் நான் ரசிப்பேன் ...
  ///////////

  நெஞ்சத்தை தொடும் வரிகள்...
  இப்படி இருந்து விட்டால் உலகத்தின் வாழ்க்கையானது வசந்தமாகிவடும்...

  நன்றி சகோ ...........

  ReplyDelete
 20. ///////
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது
  /////////
  உண்மைதான் நட்புக்கு இன்னோர் பெயர் நம்பிக்கை..

  இந்த நம்பிக்கை இரு தரப்பிலும் இருந்து விட்டால் நட்பு ஏன் பாதியில் முடிகிறது...

  வரவேற்கத்தக்க கருத்து தங்களது .......

  ReplyDelete
 21. நப்புக்கான அழகிய கவிதை....

  வாழ்த்துக்கள்...

  மிக்க நன்றி சகோ உங்கள் வருவும் வாழ்த்தும் என் உள்ளத்தைக்
  குளிரவைத்தன!..........

  ReplyDelete
 22. மிகவும் அருமையான படைப்பு

  ReplyDelete
 23. அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  மிக்க நன்றி ஐயா தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் ......

  ReplyDelete
 24. நட்புக்கு மரியாதை.

  மிக்க நன்றி சகோ தங்களின் வரவுக்கும்

  கருத்துக்கும் ........

  ReplyDelete
 25. புதுக் கவிதை உகத்தில் மரபுக் கவிதை ..
  பாராட்டுகள்..

  மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .....

  ReplyDelete
 26. அன்புள்ள அம்பாளடியாள்!
  உங்கள் பாடல்கள் அருமை!இன்னும் படிக்கிறேன்.
  அருள்தரும் மருவத்தூர் ஓம் சக்தி சூலம்! பாடல் கேட்டு
  மகிழ்ந்தேன்!நன்றி!
  உங்கள் அழகான பாடல்களுக்கு என் வாழ்த்துகள்!பாராட்டுகள்1!

  அன்புடன்,
  தங்கமணி.

  மிக்க மகிழ்ச்சியம்மா தங்கள் வரவும் வாழ்த்தும் இன்றைய என்

  கவிதை பிரபலமானதும் மனதிற்கு பேரானந்தத்தைத் தருகின்றது .

  உங்கள் வரவு தொடர பிரார்த்திக்கின்றேன் நன்றிகள் பலகூறி!!!.....

  ReplyDelete
 27. உள்ளன்போடு அழைத்த அன்பு அம்பாளடியாளுக்கு என் அன்பு நன்றிகள்பா...

  வரிகளில் மேன்மை தெரிகிறது. ஆதங்கம் கண்ணீர் மறைக்க முயன்ற துக்கம் தெரிகிறது....

  உண்மை நட்புக்கு எப்போதும் சந்தேகிக்க தெரியாது.... கள்ளத்தனம் தெரியாது...

  நல்லவைகளை தேடி ஆராய்ந்து எடுத்துக்கொண்டு தீயவைகளை சாடும் பாரதியின் புத்திரியாக உங்கள் வரிகளை காணமுடிகிறது அம்பாளடியாள்.

  நட்பு கற்பைப்போன்றது.... நட்பில் என்றும் தடுமாற்றம் இருப்பதில்லை...தாயைப்போல் அணைக்கும் தந்தையாய் கண்டிக்கும் சகோதரனாய் அறிவுரைச்சொல்லும் சகோதரியாய் சோகம் துடைக்கும் தோழியாய் ரகசியம் பகிரும்.... நல்முத்துக்களை மாலையாய் கோர்த்து இங்கே கவிதை படைத்துள்ளீர்கள் அம்பாளடியாள் அன்பு வாழ்த்துக்கள்பா...

  குறைவில்லாமல்க் கருத்திட்டு என்னை நிறைவான மனதோடு

  பாராட்டி ,வாழ்த்தி ஊக்கப்படுத்தும் அருமைச் சகோதரியே உங்கள்
  வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .என்றும் இந்த நட்புத் தொடர
  பிரார்த்திக்கின்றேன் .மிக்க நன்றி அழகிய கருத்துப் பகிர்வுக்கு .....

  ReplyDelete
 28. வணக்கமம்மா நட்பையும் கற்பையும் ஒரு நூல்கோட்டிற்கு கொண்டுவந்து அழகான மரபுக்கவிதை சமைத்துள்ளீர்கள்..
  வாழ்த்துக்கள்..

  அப்புறம் அதிகமாய் வெளியில் தென்படாதவர்கள் எல்லாம் உங்கட வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.... இப்பிடியே உங்கள் மனம்போல் உங்கள் வீடும் கலகல்ப்பாய் இருக்வும் வாழ்த்துக்கள்...

  காட்டான் குழ போட்டான்..

  என் வலைத்தளம் சிறக்க தினமும் கருத்திடும் இந்தக் காட்டானின்
  வாழ்த்துந்தான் எல்லாப் பெருமைக்கும் காரணம் என்பேன் .மிக்க நன்றி காட்டான் தங்கள் கருத்துகளுக்கு .....

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்.

  மிக்க நன்றி என் தமிழ்த்தாய் உறவே தங்களின் வரவுக்கும்

  வாழ்த்துக்கும் ......

  ReplyDelete
 30. நட்பின் அடையாளம்!!!கலக்கல் !!

  மிக்க நன்றி சகோ பாராட்டுக்கு ......

  ReplyDelete
 31. நட்பின் பெருமை கூறும் அழகிய கவிதை சகோதரி.

  மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ......

  ReplyDelete
 32. எம் நண்பர்களின் இயல்புகளை நாமெல்லாம் மீட்டிப் பார்க்கும் வண்ணமும்,
  நட்பின் பெருமையினை அறிந்து கொள்ளும் வகையிலும் அற்புதமான ஒரு கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  மிக்க நன்றி சகோ என் உள்ளம் குளிரக் கருத்திட்டமைக்கு ......

  ReplyDelete
 33. //உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது//

  சிறப்பான வரிகள் .நன்று.

  மிக்க நன்றி ஐயா உங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் .......

  ReplyDelete
 34. எல்லா உறவுகளிலும் நம்பிக்கை என்பது முக்கியமானது...! நட்பில் அதன் தேவையை கவிதையாக, அழகாய் வடித்துள்ளீர்கள்...! சூப்பர்...

  மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ...

  புதிய உறவு தொடர வாழ்த்துக்கள் .......

  ReplyDelete
 35. வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
  வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
  உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது// உண்மைதான் என் மனதில் உள்ள எண்ணங்களை இந்த கவிதையில் அப்படியே காண்கிறேன், இந்த நம்பிக்கையை எதிர்பார்த்ததற்காக ஒதுக்கி வைக்கப்பட்டவன் நான், நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நண்பனால் நட்பின் மீதே நம்பிக்கை போய்விட்டது... மிகவும் அருமையான கவிதை...

  வணக்கம் அன்பு உறவே உங்கள் மனவலி தீர இந்தக் கவிதை ஒரு மருந்தானால் அதுவே நான் செய்த பாக்கியம் .மீண்டும் ஓர் அழகிய நட்பு உங்கள் இளகிய மனதை இன்புறவைக்க எனது வாழ்த்துக்கள் .மிக்க நன்றி கருத்துப் பகிர்வுக்கு ....

  ReplyDelete
 36. உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

  மிகவும் அருமையான வரிகள்....
  அருமையான கவிதை...

  நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

  மிக்க நன்றி சகோ தங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் ...

  ReplyDelete
 37. மிகவும் அருமையான படைப்பு

  மிக்க நன்றி சகோதரரே தங்களின் வரவுக்கும்

  பாராட்டுக்கும் .....

  ReplyDelete
 38. உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருந்தால் நட்பு கடைசிவரையும் தொடராது

  அழுத்தமான வரிகள்

  ReplyDelete
 39. உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருந்தால் நட்பு கடைசிவரையும் தொடராது

  அழுத்தமான வரிகள்

  மிக்க நன்றி சகோ .வரவுக்கும் பாராட்டுக்கும் ......

  ReplyDelete
 40. வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
  வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
  உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
  கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

  சிறப்பாகத் தந்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 41. "நடந்ததை மறந்து நல்லபடி வாழ்ந்திடவே
  அகத்தினில் தூய்மையை அடிக்கடி பேணு
  வம்பளக்கும் உறவுகளின் வழிக்கு என்றுமே போகாதே.." அருமையான வரிகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........