4/22/2017

கற்பனைக் கோட்டை!



எண்ணற்ற கோட்டை கட்டி 
என்ன பயன் கண்டோம் இங்கே! 
கண்ணிறைந்த இயற்கை ஒன்றே
காவலரணாகும் எங்கும்!

மண்மீது உயிர்கள் வாழ 
மறுபிறவி தானும் காண 
பூமி நலம் காக்க வேண்டும்!
சாமி என நோக்க வேண்டும்!

தண்ணீரும் காற்றும் இன்றி 
தரை வாழுமா! 
தனவான்கள் எண்ணம் போலே 
எம் இனம் வாழுமா!

உயிருக்கு உறங்க ஓர் இடம் வேண்டும் 
உயிரான மண்ணுமதைத் தாங்க வேண்டும்! 
கருவறை தன்னில் இங்கே 
கல்லொன்றைச் சுமந்ததாரு!
கருவறை போல நீயும் 
தாய் மண்ணை எண்ணிப் பாரு!

கடற்கரை மண்ணை அள்ளிக் 
கோட் டை கட்டலாம் 
கடலன்னை பொங்கி எழுந்தால் 
எங்கே ஓடலாம்!

கோட்டைக்குள் அடங்காது இந்த உலகம் 
கோமாளித் தனமான எங்கள் சொந்த உலகம்!
ஆடம்பரமாய் இருக்க இது போதும் 
அட ஆயுளைத்தான் கூட்டாது ஒரு போதும்!

இயற்கையை மிஞ்சுமா இந்த அழகு!
ஈரலிப்பா நீயிருக்க வந்து பழகு!
மூலிகைக் காற்றைத்தான் 
உயிர் மூச்சு விரும்பும்! 
முத்தமிழை முத்தமிடும் பேச்சு விரும்பும்!

காத்தாடி தந்த காற்று 
காலடியைத் தொட்டு நிற்கும் 
ஆத்தாடி வாடைக் காற்று 
அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!

சுற்றுகின்ற காற்றுக்குச் 
சூனியத்தை வைக்காதே!
கோட் டையிலே இருந்து கொண்டே 
மனக் கோட்டைகளைக் கட்டாதே! 

---------------(எண்ணற்ற கோட்டை கட்டி )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

  1. Replies

    1. வணக்கம்!
      பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரா!

      Delete
  2. //கருவறை போல நீயும்
    தாய் மண்ணை எண்ணிப் பாரு!// ஆஹா ! அருமை !

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!
      பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரா!

      Delete
  3. "காத்தாடி தந்த காற்று
    காலடியைத் தொட்டு நிற்கும்
    ஆத்தாடி வாடைக் காற்று
    அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!" என
    அருமையாக ஆக்கினீர் நல்ல பா!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........